சனி, 25 டிசம்பர், 2010

கிறிஸ்துமஸ்- உலகமயமாக்கலின் மற்றொறு திணிப்பு


கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை இப்போது எல்லோரும் எல்லோருக்கும் பகிர்ந்து கொள்வதை நகரத்தில் அதிகம் பார்க்கிறேன். நேற்று எனக்கு கூட ஒரு நாலு பேராவது சொல்லி இருப்பார்கள். இதை வெறும் மத நல்லிணக்கமாக பார்க்க முடியாது. சித்தாந்த ரீதியில் மிகவும் மதிக்கப்பட வேண்டிய ரம்ஜானுக்கு யாரும் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்வதில்லை. முஸ்லிம்களுக்கு மட்டுமே அது பண்டிகையென ஒதுக்கப் படுகிறது. ஆனால் இந்தக் கிறிஸ்துமஸ் மட்டும் அப்படியென்ன சிறப்பு மிக்கது? கிறிஸ்துமசை கிறிஸ்தவர்கள் கொண்டாடட்டும். நாம் அவர்கலுக்கு வாழ்த்துக்கள் சொல்வோம். கேக் கொடுத்தால் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் நகரங்களில் மிக சகஜமாகவும் அதுவும் படித்தவர்களாகவும் பணக்காரர்களாகவும் உள்ளவர்களிடையே மதங்களுக்கு அப்பாற்பட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள். அடிப்படையில் மக்களுக்கு சந்தோசம் தரும் எதுவுமே எதிர்க்கப்பட வேண்டியதில்லை என்றாலும் இந்த கிறிஸ்துமஸ் என்பது அதை மற்ற மதத்தவரும் அனுசரிப்பது இதெல்லாம் ஒரு தகுதியாக அதாவது தராதரம் போல ஆகிவிட்டதோ என்ற மயக்கம் எனக்கு. குல்லாய்கள் முக மூடிகள் மிக சகஜமாக விற்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக மேலை நாட்டின் விழாக்களும் இங்கே கடை விரிக்கின்றன. புத்தாண்டுக் கொண்டாட்டங்களையும் இந்தவகையில் சேர்க்கலாம். இதையெல்லாம் கலாச்சார ரீதியில் நான் தவறென்று சொல்லவில்லை. கலாச்சார தனித்துவம் பண்பாட்டு அடையாளங்கள் இவையெல்லாம் மாறி வருபவை அவற்றில் தூய்மையை எதிர்பார்ப்பது அறிவீனம் என்று தெரியும். இருந்தாலும் கிறிச்துமஸ் புத்தாண்டு இவை உள்ளே நுழைந்த காரணம் இங்கே பரிசீலிக்கபடவேண்டியது. இவையெல்லாம் உலகத்தை ஒற்றை மயமாக்கும் சதியின் சமகால விளைவுகள். மக்கள் எதெனெதன் பின்னாலோ ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இது முட்டாள் தனம். உலக மயமாக்கலின் திணிப்பு கிறிஸ்மஸ்ஸ்லின் மட்டுமே என மனதை தொட்டு சொல்லுங்க... ...

வெறும் விளகேற்றிக் கொண்டாடிய தீபாவளியில் எங்கே இருந்து இந்தப் பட்டாசுகள் வந்தன !!! அதே போல் உலக மயமாக்கலில் எல்லாம் கஸ்மாலமும் வந்து விட்டன, கிறிஸ்மசைக் குறை சொல்லி என்ன பயன் !!!

guna சொன்னது…

100% correct correct correct

Jayaprakashvel சொன்னது…

எனது எண்ணம் முட்டாள்தனம் என்று அறிவாளித்தனமாக பின்னூட்டமிட்டிருக்கும் தோழருக்கு தலைப்பை மறுபடியும் நினைவு படுத்துகிறேன். கிறிஸ்துமஸ்- உலகமயமாக்கலின் மற்றொறு திணிப்பு". அது மட்டுமே அல. அதுவும் ஒரு விளைவு. சதியின் ஒரு பகுதி.