புதன், 31 மார்ச், 2010

சொன்னால் ஏற்றுக்கொள்ளமாட்டாய்;
என்றாலும் -
சொல்லியிருந்தால்
ஏற்றுக்கொண்டிருப்பாயென்று
தேற்றிக்கொள்ள
சொல்லாமல் வைத்திருக்கிறேன்;
என் காதலை.

செவ்வாய், 30 மார்ச், 2010

5E

பெருவிருப்போடு

நண்பர்களிடம் பேசுகிற தருணங்களை

களவாடுகிற பேருந்துகள்

சிலவற்றைக் கொண்டது

இம்மாநகரம்

சனி, 27 மார்ச், 2010

பி டி கத்தரிக்காய்

பி டி கத்தரிக்காய் குறித்த எதிர்ப்புகளை அடக்கும் முகமாக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதியை கொஞ்சம் ஒத்தி வைத்திருக்கிறார். மொத்தமாக தீங்கற்றது என நிருபிக்கும் வரை அனுமது இல்லை என்ரிருக்கிறார். இது ஒரு சல்ஜாப்புதான். மத்திய அரசே நினைத்தாலும் இதை தடுக்க முடியாது. எதிர்ப்பை சமாளிக்க ஒரு சின்ன நாடகம். வெளியே தெரியாமலே ஒரு நாள் பி டி கத்தரி சந்தைக்கு வந்து விட்டாலும் ஆச்சர்யம் இல்லை.

இதை எதிர்ப்பவர்கள் பலரும் உண்மையான காரணத்தை சொல்லி எதிர்க்கவில்லை. அப்படி டம்மியாக எதிர்ப்பவர்களை மட்டுமே கருத்துக் கேட்பு கூட்டத்தில் அனுமதித்திருப்பார்கள்.

இங்கெ நாய்க்கடிக்கு மருந்து இல்லை. பாம்புக்கடிக்கு மருந்து பல பகுதிகளில் இல்லை. பலருக்கு குடிக்க தண்ணி இல்லை. இதெல்லாம் போய் இப்போது எதிர்காலத்தில் வரும் உணவுப்பற்றாக்குறைக்கு இப்பொதே கவலைப்பட்டு பி டி கத்தரியை வெளியிடுகிறார்கள். இதற்கு அனுமது கொடுக்க பரிந்துரை செய்த நிபுணர்கள் கூலிப்படையினர் பொல செயல்பட்டதும் இல்லாமல் வக்காலத்தும் வாங்குகிறார்கள். கத்தரி என்ற மலிவு விலை காஇகறியின் சந்தையை குறி வைத்து இறக்கப்படும் இந்த சதியை எதிர்ப்பது ஒவ்வொருவரின் கடமை. வெகு விரைவில் இது குறித்து மீன்டும் எழுதுகிறேன்.