சனி, 21 பிப்ரவரி, 2009

தமிழக சட்ட ஒழுங்கு சீர் கெட்டதா?

இரண்டு சம்பவங்கள் நமது தமிழக காவல் துறையை தலை குனிய வைத்துள்ளன. பலமுறை குனிந்த தலைதான் என்றாலும் ஒவ்வொரு முறையும் குனிய தவறுவதில்லை.

சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல். கடலூரில் தமிழ்வேந்தன் இறுதி ஊர்வலத்தின் பின்னான கலவரங்கள். முதலாவது காவல் துரையின் கொடூரப் போக்கையும் இரண்டாவது காவல்துறையின் கையாலாகாத தனத்தையும் காட்டுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளின் பின்னாலும் ஆல்வோர் இல்லை என சொல்ல முடியுமா?

காவல் துறையை அடியாள் துறையாக மாற்றி வரும் அரசு ஒன்றை மறக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது என சொல்ல இவை போதும். இவற்றால் மக்கள் படும் துயரமும் , அவர்கள் கண்ட பீதியும் தேர்தல் நேரங்களில் எதிரொலிக்கும். எதிர்கட்சிகள் இதை நினைவூட்டும்

திங்கள், 16 பிப்ரவரி, 2009

என் கண்ணீர் நதியின்

கரைகளை

உடைத்து விட்ட பெருமை

கடைசியாய்

நீ எழுதிய

அந்த மறுப்புக் கடிதத்திற்குத்தான்

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

சுத்தப் படுத்துவதை விடவும் சுத்தமாக வைத்திருப்பது எளிது.

௧1. மக்கள் வேலையை முடித்த பின்பு

௨. .2. பை நிறைய இருப்பது இந்த சமூகத்தின் குப்பைகள் தான்


௩. 3. குப்பை சேகரம்

௪4. இந்த சூரியந்தான் இதெல்லாம் பார்த்து விட்டு நிலவுக்கு தகவல் சொல்லி அனுப்பியது
5. வண்டியில் பொகிற போது கிழக்கு கடற்கரை சாலையில் ஓரிடம்
கடந்த ஞாயிறு சென்னை முதலைப் பண்ணையில் இருந்து சில கி மீ தொலைவு வரை சென்னை டிரெக்கிங் கிளப் (http://www.chennaitrekkers.org/) சார்பாக அந்த நண்பர்களுடன் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிக்காக சென்றேன்.இந்த கிளப் நிறைய சாகசப் பயணங்களை நடத்துகிறது. ஆனால் நான் கலந்து கொல்லும் முதல் நிகழ்வு இது தான். எதற்கு மெனக்கெட்டு அங்கே போய் சுத்தம் செய்ய வேண்டும்? ஆலிவ் ரிட்லீ (http://en.wikipedia.org/wiki/Olive_Ridley) என்ற ரக ஆமை ஒன்று முட்டையிட கிழக்கு கடற்கரையை நாடும் தருணம் இது (http://world-turtle-trust.org/project07.html) . எனவே இந்த சுத்தப் படுத்தும் பணியில் இவர்களும் இன்னும் நிறைய பேரும். முழுதாக எழுத நேரம் வாய்க்காததால் செய்தியை மட்டும் சொல்லி படங்கள் சிலவற்றை இணைத்து உள்ளேன். இதுவும் என் செல்போன் இல் 1.3 மெகா பிக்செல் கேமராவினால் எடுக்கப் பட்டது. மொத்தத்தில் ஒன்று புரிந்தது. சுத்தப் படுத்துவதை விடவும் சுத்தமாக வைத்திருப்பது எளிது. வெறும் 22 பேர்கள் மட்டுமே குரைந்தது இரண்டு கி மீ நீள கடற்கரையை இரண்டு மணி நெரத்தில் சுத்தம் செய்ய முடிகிர பொது நமது அரசியல் கட்சிகள் அவர்களது தொண்டர்களைக் கொண்டு என்னவெல்லாம் செய்துவிடலாம்.?
கோயில் நகரம்

௧. வரதராஜ பெருமாள் கோவில் முகப்பு

௨. ஏகாம்பரநாதர் கோவிலில்

௩. கைலாசநாதர் கோவில் முகப்பு.௪. கைலாசநாதர் கோவில்


௫. வரதராஜ பெருமாள் கோவில் குளமும் அத்திகிரி பெருமாள் கோவிலும்௬. ஒரு சுவரில் இருந்த கல்வெட்டு


௭. சுரகறேஷ்வரர் கோவில் : இதன் முஉலவர் சன்னதி வழ்க்கமான சதுர வடிவில் இல்லாமல் வட்ட வடிவில் உள்ளது.
௮. கைலாசநாதர் கோவிலில் இது போல நிறைய சிலைகள் உள்ளன.௯. கைலாசநாதர் கோயில் பிரகாரம்

இன்று வேலை விசயமாக காஞ்சிபுரம் சென்று இருந்தேன். மதியமே என் வேலை முடிந்து விட்டது. பின் கோப்பெருஞ்சோழன் அண்ணா வந்து காஞ்சிபுரம் முழுக்க தனது ராயல் என்பீல்ட் இல் கூட்டிக் கொண்டு போய் காண்பித்தார். மதியம் சாப்பிட்ட பின் தான் இரண்டு மனிக்கு மேல் எங்களின் பயணம் தொடங்கியது. இரண்டு முதல் நான்கு வரை எந்த கோவிலும் திறந்திருக்காது என்று சொன்னார். ஆனாலும் கோயில் பார்க்க போனோம். ஊரை விட்டு கொஞ்சமாக தள்ளி இருந்த கைலாசநாதர் கோயில் எனது முதல் விருப்பமாக இருந்தது. மணற்பாறைகளால் கட்டப் பட்ட, மிகப் பழைய இந்த கோயில் எனக்கு மிகவும் பிடித்தது. கையில் கேமரா இல்லை. என் சிறிய செல்போன் கேமராவில் எடுத்த படங்களை இங்கே வைக்கிறேன். பிறகு, ஏகாம்பரனாதர், சுரகேஷ்வரர், பாண்டவதூது பெருமாள், உலகளந்த பெருமாள் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் என பெரிய கொயில்கள் எல்லாமும் பார்த்தேன். பின்னொரு சந்தர்ப்பத்தில் நல்ல கேமராவோடு போகும் போது விரிவாக எழுதுகிறேன். முக்கியமாக, வரதராஜ பெருமாள் கொயிலில் உள்ள சிற்பக் கூடம் கண்டிப்பாக எழுத வேன்டியது.

புதன், 4 பிப்ரவரி, 2009

அணைகள் உடையும்

பிழைப்புகளில் நிறைய வகை உண்டு
சிலர் உழுது பிழைக்கிறார்கள்
சிலர் உடலை விற்று பிழைக்கிறார்கள்
சிலர் இரந்தும் பிழைக்கிறார்கள்.
ஆனால் உன் பிழைப்பை யாரும் பிழைக்கவில்லை.

அடுத்தவர்களின் உழைப்பில் குளிர் காய
உன் அண்ணன் சொல்லித் தந்தான்.
அடுத்தவர்களின் உணர்வில் குளிர் காய நீ கற்றுக் கொண்டாய்.

அடுத்தவன் உழைப்பை சுரண்டுவது திருட்டு.
உனது வகைமாதிரிக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

ஒரு இனமே உன் பின்னால் நின்றது
ஒரு தேசமே உன்னை நம்பியது.
துரோகிகளுக்கு தேச எல்லைகள் இல்லை.
ஈழமானாலும் இங்கேயானாலும்
ஒரே பெயர்தானென்று சொல்லி விட்டாய்.

கல்மடுவை உடைக்க வெடியொன்று போதுமானது.
இங்கேயும் ஒரு வெடி பற்றிக் கொண்டது.
வெடிக்கும் முன் உன் செங்கோல் அணைத்துவிடத் துடிக்கிறது.
அணை உடைய வெகுநாள் ஆகாது.

அவன் பெயர் தமிழன்

ஒரிசாவில் புயல் அடித்த போது
இவன் கண்கள் கலங்கின.

மும்பையில் குண்டு வெடித்த போது
இவனின் நெஞ்சு வெடித்தது.

குஜராத்தில் பூகம்பம் வந்தது
உணவு உடைகளோடு ஓடினான்

கார்கிலில் சண்டை என்றார்கள்
இங்கே உண்டியல் தூக்கினான்.

இப்போது-
அவன் பிள்ளைகள் சாகின்றன.
அவன் பெண்டுகள் மானம் காக்கவும் வழியற்று மாய்கிறார்கள்
அவன் சகோதரனோ-
பதுங்கு குழிகளையோ புதைகுழிகளையோ வெட்டிக் கொண்டிருக்கிறான்.

அவர்களின் கதறலும் அவர்களுக்கான கதறலும்
வங்காள விரிகுடாவில் கரைகிறது.

சொந்தமென்று அவனை நம்ப வைத்தவர்கள்
சும்மா இருந்தார்கள்

கொஞ்சமாவது சூடு வரட்டும்.
கொஞ்சமாவது சொரணை ஊறட்டும்
என்று-
செத்துச் சொல்லிக் காண்பித்தான் முத்துக்குமரன்.

சூடும் வரவில்லை;
சொரணையும் வரவில்லை;
கவிதைதான் வருகிறது.