திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சாரு மீதான கீற்றின் அசிங்கமான நடவடிக்கையை கண்டிக்கிறேன்


சாருவின் மனைவி நித்யானந்தாவுக்கு எழுதியதாக ஒரு கடிதத்தை நித்யானந்தா வெளியிட்டாராம். அதை கீற்றில் ஒருவர் வியாக்ஞானம் எழுதி பதிப்பித்திருக்கிறார் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15619:2011-07-17-06-08-51&catid=1:articles&Itemid=264) ஜூலை 17 இல். மிகவும் அருவருப்பான இந்தக் காரியத்துக்காக கீற்று வெட்கப்படவேண்டும். இன்னும் அது அகற்றப்படவில்லை. இதற்காக எனது கண்டனங்களை இதன் மூலம் பதிவு செய்கிறேன்.
சாரு எழுதுகிற விதத்தை வைத்து அவரின் மேல் ஒரு பயங்கரமான பிம்பம் உருவாகி இருக்கிறது. சாரு பெரிய பெண்பித்தன் என்று. அதில் உண்மை இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். அதைப்பற்றி நமக்கென்ன. நாட்டில் இது மாதிரி யாருமே செய்யவில்லையா? அதை ஒரு எழுத்தாளன் செய்துவிட்டால் தப்பா? சாரு ஒன்னும் நீதிபோதனை செய்யும் எழுத்தாளன் அல்ல. எனவே அவரின் தனிமனித ஒழுக்கம் குறித்து அவரும் அவர் குடும்பத்தினரும் கவலைப்பட வேண்டியது. மற்றவர்கள் அல்ல. சாரு குறித்து பலவித கதைகளும் உலவி வருகின்றன. அது குறித்து அவரே அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. ஒரு சாதாரண மனிதனுக்குள்ள பெரும்பாலான பிற்போக்குத்தனங்களையும் கொண்டிருக்கும் சாரு என்ற படைப்பாளி நல்லவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு யாருக்கும் இல்லை. பெண்களை வீழ்த்த ஒருவனுக்கு எழுத்தாளன் என்ற போர்வை அவசியமல்ல. இந்தக் காலத்துப் பெண்கள் அவ்வளவு அறிவிலிகள் அல்ல.

 நித்யானந்தா வெளியிட்ட கடிதம் உண்மையானதுதானா என்ற சிந்தனை இல்லாமல் இதை கீற்று வெளியிட்டிருக்கிறது. ஒரு நாலாந்தர பத்திரிக்கைக்கும் இவர்களுக்கும் என்ன வித்யாசம்? இந்தக் கடிதம் உண்மையாகவே இருந்தாலும் அது குறித்து பிரஸ்தாபிக்க கீற்றுக்கு ஏன் ஆர்வம் என்று விளங்கவில்லை. சாரு என்ற எழுத்தாளர் மேல் தார்மீக கோபமோ வன்மமோ எதுவாக இருந்தாலும் தீர்த்துக்கொள்ள வேறு நாகரீகமான வழிகள் உள்ளன. இத்தனை நாள் கழித்து வெளியிட்ட நித்யானந்தா செய்தது அசிங்கம் என்றால் கீற்று செய்ததும் அதைத்தான். இப்படியெல்லாம் எழுதுவதால் சாருவுக்கு வக்காலத்து வாங்கவில்லை. தமில்ழில் தனித்துவமிக்க எழுத்தை கொண்டிருக்கும் சாரு என்ற படைப்பாளிக்காக ஒரு தமிழ் படிக்கும் வாசகன் என்ற முறையில் எனது கண்டனத்தை பதிகிறேன்.

"இக்கடிதம் சாருவின் வீட்டுப் பிரச்சினை என்பதைவிட, அசிங்கமான அவரது அந்தப்புரத்தின் இன்னொரு பகுதியை வெளிப்படுத்துகிறது என்பதுதான் உண்மை" இப்படி எழுதியிருக்கிறார் அந்த அறிவாளி. அடுத்தவன் வீட்டு அந்தப்புரத்தில் நுழைவது அசிங்கத்திலும் அசிங்கம். இதை எழுதியவருக்கும் நித்யானந்தாவுக்கும் ஒரே நோக்கம் தான் இருக்க முடியும்.

10 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

//சாரு பெரிய பெண்பித்தன் என்று. அதில் உண்மை இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். அதைப்பற்றி நமக்கென்ன. நாட்டில் இது மாதிரி யாருமே செய்யவில்லையா? அதை ஒரு எழுத்தாளன் செய்துவிட்டால் தப்பா?//

பதிவின் முழுக்கருத்திலும் சாருவைப்போலவே நீங்களும் முன் பின் முரண்படுகிறீர்கள்.எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்பவனுக்கு சில சமூகப் பொறுப்புக்கள் இருக்கின்றன.அதை உணர்ந்து எழுத்து வித்தை செய்யும் படைப்பாளியே எழுத்தாளன் என்று தன்னை சமூகத்துக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தகுதியுடையவன் என்பது எனது நிலைப்பாடு.சாரு உலக இலக்கியம்,இசை என சில அறிமுகங்களை தமிழுக்கு தந்திருந்தாலும் இவற்றையெல்லாம் கடந்து பிம்பமாய் நிற்பது சாரு பாலியல் சரோஜா தேவி புத்தக எழுத்தாளன் என்பது.இதை நான் சொல்வதல்ல,அவர் முன்னிலையிலே சாருவே புன்முறுவல் பூக்க மிஷ்கின் உதிர்த்த பொன்மொழியும் பின் அதன் தாக்கம் உணர்ந்து தனது கோபத்தை தனது தளத்தில் வெளிப்படித்தியதும்.

மனதின் இருண்ட பக்கங்களுக்கு சரோஜாதேவி புத்தகம் தேவையெனும் பட்சத்திலும் சாருவின் சுய புலம்பல்களும்,குழப்பங்களும்,பொதுவில் சொல்லக்கூடாது என்ற சொற்களின் வாடையும் அவசியம் என்ற கரும்புள்ளியும் தேவையெனும் பட்சத்தில் சாருவின் சுய சொறிதல்களையும்,மன விகாரங்களையும் தமிழின் ஒரு பங்காக கொள்வதில் ஆட்சேபணையில்லை.

எழுத்து அனுபவங்களையும்,மனித வாழ்வின் உன்னதமான உயரங்களையும் எட்டிப்பிடிக்க வேண்டும்.அதில் சாரு,கருணாநிதி போன்றவர்கள் தோற்றவர்களே.

கடிதம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இன்னும் தவறானவன் ஆன்மீக முகமூடி போட்டுக்கொண்ட நித்ய ராஜசேகரன்.சாருவுக்கும்,அவரது மனைவிக்கும் எனது அனுதாபங்கள்.

பெயரில்லா சொன்னது…

//எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்பவனுக்கு சில சமூகப் பொறுப்புக்கள் இருக்கின்றன.அதை உணர்ந்து எழுத்து வித்தை செய்யும் படைப்பாளியே எழுத்தாளன் என்று தன்னை சமூகத்துக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தகுதியுடையவன் என்பது எனது நிலைப்பாடு.//

இது ஒரு உண்மையை ஏற்றுக்கொள்ளா அல்லது மறைக்கும் நிலைபாடு.

அஃதாவது,

(1) ஒரு எழுத்தாளன் என்ற ஆளுமையும்,
(2) அவன் சமூகத்தில் ஒரு பிரஜை என்ற ஆளுமையும்
வெவ்வேறானவை.

They can interact with each other, help each other; but they shd be taken as two different facets of a writer’s total personality.

இர‌ண்டாவ‌து ஆளுமைக்கே சமூகப்பொறுப்புகள் உண்டு.
எழுத்து என்பது தன்னிச்சையான, தனிநபர்ச் செயல். அச்செயலுக்கு எந்த அங்கீகாரமும் சமூகம் தரவேண்டியதில்லை. ப்படித்தரவேண்டுமென நினைத்து எழுதுபவன் ஒரு வியாபார நோக்கில் எழுதி பணம்புரட்டும் ஒருவகை எழுத்தாளன் மட்டுமே. இவன் பெரிய படைப்பாளியாக முடியாது.
At the same time, to live as a member of a large society is not an independent act. Because u have to accept certain norms of public and private behaviour. In other words, u bind urself. Rousseau’s quote: ‘Man is born free; and is everywhere in chains’ is applicable only to such members of society. All of us are slaves to society and to our loved ones. But a writer has the choice - either to bind himself to society or to break free. He binds in order only to get experiences; and after break, he turns the experiences into a creative art. Also, to note, even his binding is a hypocritical act; because he binds with a motive – to acquire life experiences, never really mixing with it. He remains really as an observer only He is in it, but not of it. This is said of many many writers.

எழுத்தாளன் - சமூக பிரஜை என்ற இரு ஆளுமைகளும் ஒருவனிடம் இருக்கலாம். அல்லது ஒன்று மேம்பட்டு இருக்கலாம். இரண்டுமே இருக்கும் எப்படியாவது. இல்லை எனக்கு எழுத்தாளன் என்ற ஆளுமை மட்டுமே வேண்டும் என்று சொல்லி சமூகத்தை விட்டு விலகி வாழ்ந்த எழுத்தாளர்களும் உண்டு.

சாருவைப்பொறுத்தவரை, சமூகத்தை விட்டு விலகவில்லை. தனிநபராகவும் வாழவில்லை. ஒரு கணவன், ஒரு தந்தை (பிள்ளை பெற்றிருந்தால்), ஒரு பெரிய குடும்பத்தின் உறுப்பினர் (அவருக்கு உடன்பிறந்தோருண்டு) இப்படி அவர் வாழ்கிறார். சமூகத்தில் உலவுகிறார். அப்படிப்பார்க்கும்போது மட்டுமே அவருக்குச் சமூக பொறுப்புக்கள், குடும்ப பொறுப்புக்கள் (இப்பொறுப்புக்கள் நன்றாகச் செய்யப்படவேண்டும். செய்யாத நிலையில்தான் மனைவியை அடித்தல் போன்ற செயல்கள் ஏதுவாகும்).


மாறாக‌, சாரு சித்த‌ரைப்போல‌ வாழும் த‌னிந‌ப‌ராக‌ வாழ்ந்து எழுதிக்கொண்டிருந்தால்,

"எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்பவனுக்கு சில சமூகப் பொறுப்புக்கள் இருக்கின்றன. அதை உணர்ந்து எழுத்து வித்தை செய்யும் படைப்பாளியே எழுத்தாளன் என்று தன்னை சமூகத்துக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தகுதியுடையவ‌ன்"

என்ப‌தெல்லாம் க‌ப்சா.

V need more writers in Tamil who breaks free from society or hypocritically participating in society, and 'uses' society to squeeze experiences from it for their selfish purpose namely to create fiction out of them.

Those who don't want to give such freedom to writers, will be talibanistically saying as Raja Natarajan has written here.

saarvaakan சொன்னது…

வணக்கம் சகோ,
சாருவே இக்கடிதம் குறித்து எதுவும் சொல்லவில்லை.எல்லாரும் சாருவின் லீலைகள்,இக்கடிதம் குறித்த மறந்து விட்ட வேளையில் ஞாபகப்படுத்திய பதிவுக்கு நன்றி.

ராஜ நடராஜன் சொன்னது…

//
(1) ஒரு எழுத்தாளன் என்ற ஆளுமையும்,
(2) அவன் சமூகத்தில் ஒரு பிரஜை என்ற ஆளுமையும்
வெவ்வேறானவை.//

சிம்மக்கல்!மறுபடியும் வேதாளம் மரத்துக்கு தாவிடுச்சு போல இருக்குதே:)ஆல் இன் ஆல் அழகு ராஜாவில் சாருவுக்கு அடிச்சு புடிச்சு விவாதம் செய்தவராச்சே நீங்கள்!

உங்கள் நீண்ட பின்னூட்டத்தில் முக்கியமானது அடைப்பானில் மாதிரி எழுத்தாளன் அந்நியன் விக்ரம் மாதிரி இரட்டை வேடம் போடனுமிங்கிறீங்க.எழுத்தாளன் சமூகத்தை பிரதிபலிப்பவனாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

Dress itself is a hypocricy.Be B(f)reak from your living society and let your freedom shall spread it's wings around Tamil globe.

பெயரில்லா சொன்னது…

//சிம்மக்கல்!மறுபடியும் வேதாளம் மரத்துக்கு தாவிடுச்சு போல இருக்குதே:)ஆல் இன் ஆல் அழகு ராஜாவில் சாருவுக்கு அடிச்சு புடிச்சு விவாதம் செய்தவராச்சே நீங்கள்! உங்கள் நீண்ட பின்னூட்டத்தில் முக்கியமானது அடைப்பானில் மாதிரி எழுத்தாளன் அந்நியன் விக்ரம் மாதிரி இரட்டை வேடம் போடனுமிங்கிறீங்க//

வேதாளம் ஏறவில்லை. ஒரே கருத்தே எங்கேயும். கருத்தை மாற்றினால்தான் முருங்கை மரம் ஏறியதாகச்சொல்லலாம். The bloggers All in All Raja never faces truth. They have imagined something and want others to accept that. In the Charu and the woman controversy, the blogger is related to the woman, as he himself wrote there. Can he write w/o bias ?

//இரட்டை வேடம் போடனுமிங்கிறீங்க//

உங்கள் பிரச்சினை படிப்பதிலேயே இருக்கிறது. சரியாக படிக்கவில்லையேன்? Y don’t u read properly ?

போடவேண்டுமென சொல்ல நான் ஆர்? அல்லது நீங்கள் ஆர்? இருப்பதை இருக்கிறது என்றுதான் சொல்கிறேன். எழுத்தாளர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இரு பரிமாணங்கள் இருன்தே தீரும். அவனால் தப்ப முடியாது. இல்லாவிட்டால் அவன் தலைமுறைகள் போற்றும் எழுத்தாளன் ஆக முடியாது. லட்சுமி, அனுராதா ரமணன், சிவசங்கரி, ஹம்சா தனகோபால், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஸ்குமார், to name a few, போன்று வியாபார எழுத்தாளர்களாக மட்டுமே இருக்கலாம்.

//எழுத்தாளன் சமூகத்தை பிரதிபலிப்பவனாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
//

மறுபடியும் புரிய மறுத்தல்; அல்லது தவறான புரிதல்.
நீங்கள் நினக்கவே வேண்டாம். நினைத்தல் என்றால் நீங்கள் திணிக்கிறீர்கள் என்று பொருள். இருப்பவைகளைப் பாருங்கள். இருக்கின்றனவா என்று சொன்னால் போதும். அதன்படி, நீங்கள் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் பச்சை உண்மையென்னவென்றால், எழுத்தாளர்களின் படைப்புக்கள் அவர்கள் வாழும் சமூகத்தைக் கண்டிப்பாகக் காட்டும். பின்னாளில் அவர்கள் எழுத்துக்கள் சரித்திரச் சான்றாகக்கூட எடுத்துக்கொள்ளப்படும். சங்கப்பாடல்கள் இல்லையென்றால், தொல் தமிழகம் எப்படியிருன்தது என்று சொல்ல தரவுகள் கிடையா. I have clearly written that they experience life as members of the society and also, as observers, standing out, and use them to create their fiction. Undoubtedly, their work will reflect the soceity they live in. Cant u understand this simple fact which I wrote clearly ?

ஆனால் இக்கருத்தை நீங்கள் விவாதிக்கவில்லை. மாறாக, எழுத்தாளனின் தனிநபர் வாழ்க்கையையும் அவன் எழுத்துலக வாழ்க்கையையும் போட்டு குழப்பி எழுத்தாளன் ஆர் என்ற தவறான விளக்கத்தை அளிக்கிறீர்கள் எங்கேயும் இதே குழப்பம்தான்.

கொஞ்சம் இன்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள் தனக்குத்தானே. எவ்வளவு குழம்பிப்போயிருக்கிறீர்கள் என்று தெரியும்!

கேள்வி: ஒரு பெண் எழுத்தாளரின் புதினத்தில் நாயகி ஒருவனால் பாலியல் வன்முறை கடுமையாகப் பண்ணப்படுகிறாள். எழுத்தாளர் கொஞ்சம் விரிவாக எழுத வேண்டிய கட்டாயமங்கே.

இப்போது அதைப்படிப்பவர் இன்த எழுத்தாளர் தானும் ஒரு ஆணால் கெடுக்கப்பட விரும்பினார் எனலாமா ? ஆனால், அப்படித்தான் சொன்னார்கள். பெண்கள் எழுதக்கூடாது. எனவே பெண்கள் புதினங்கள் படைக்கக்கூடாதென்றுதான் இருன்தது. ஒரு பெண் காதலைப்பற்றி எழுதுகிறாள் தன் புதினத்தில் என்றால் என்ன பொருள்? அவளால் அப்படி கற்பனை பண்ணமுடியும் என்றுதான். இல்லை அவள் கற்பனையும் அவளும் ஒன்றுதான் என்றா சொல்லமுடியும்? எனவே நடராஜன், ஒரு எழுத்தாளருக்கு இரு ஆளுமைகள் இருக்கின்றன. Freud’s theory of ‘substitute gratification’ of authors has already been repudiated. In his final years, he reversed it; and also, held that a writer has a dual personality; otherwise, he cant create.

இருக்கவேண்டுமென நான் சொல்லவில்லை. இருக்கின்றன என்றுதான் சொல்கிறேன். கூர்ன்து படிக்கவும். If u still insist that a woman writer wants to get raped because she wrote about rape of her heroin in graphic details, I cant help. Stay there.

I hav already written in all in all raja blog that I am expounding an important literary theory.

பெயரில்லா சொன்னது…

If Charu has a deplorable sexual conduct with women, he should be punished only as an individual NOT AS A WRITER

If the case goes to court, the Judge will not look into the fact that he is a writer, and tempers his judgement to favor or disfavor him for that. The judge will simply proceed in the case taking him just as an alleged accused only.

For the world, he may be a writer; for the court and law, he is just a man. Howsover high u r, the law s above u!

The court wont ask: U r a writer. Shouldn't u be a model to others ?

But the same court will ask if the accused is a teacher or a politician holding public authority:

U r a teacher. Shdn't u be a model to ur students? U r a PM, or a CM, isnt a shame u came before for abuse of power?

Natajaan, now things r clearer to u, I hope. As a writer, one needs not be a paragon of virtue or an ideal to society. He does not owe anything to society. If he likes, he writes; if he doesn't he tears away what he has written. Many writers have done that. If u insist that they hav social responsibilities, u r killing literature by imprisoning the intellectual freedom of writers.

Dualism is my basic theme everywhere.

Unknown சொன்னது…

திரு ராஜ நடராஜன் கருத்துகளோடு ஒத்துப்போகிறேன்.சிம்மக்கல் ஏன் பாதி ஆங்கிலத்திலும்,பாதி தமிழிலும் வாதிடுகிறார்.ஏதாவது ஒரு மொழியில் வாதிடலாமே.காரணம் என்ன?

Jayaprakashvel சொன்னது…

I shall post my replies tomorrow. Little occupied.

பெயரில்லா சொன்னது…

Elan

நான் சொன்னவை இலக்கியக் கோட்பாடு. அதில் என் ஒரிஜினாலிட்டி கிடையாது. ராஜ நடராஜன் எழுதிக்கொண்டிருப்பது அவர் சொந்தக் கருத்துக்கள்.

நான் ஏற்கனவே கூறப்பட்ட இலக்கியக்கோட்பாடு உண்மையா என்பதை எழுத்தாளர்களைப்பார்த்து தெரிந்தபின்னரே ஒத்துக்கொண்டு அஃதை இங்கிடுகிறேன்.

நீங்கள் ?

இவ்விலக்கியக் கோட்பாடு பொதுவாக எல்லாக் கலைஞர்களுக்கும் ஒத்துவரும். உ.ம்
வடிவேலுவின் தனிநபர் வாழ்க்கை இப்போது பரவலாகத் தெரிகிறது. அரசியலில் மூக்கை நுழைத்தது; நிலத்தகராறு என்று. இதை வைத்து அவர் காமெடியே எனக்குப்பிடிக்காது மோசம் என்று சொன்னால் எப்படியிருக்கும்? கண்ணதாசனின் தனிநபர் ஒழுக்கம் சரியில்லை. எனவே அவர் கவிதைகளும் சொத்தையென்றால் எப்படியிருக்கும் ?

ராஜ நடராஜன் அப்படித் தனித்தனியாகப் பார்க்காமல், குழப்புகிறார்.

தனிநபராகப்பார்த்தால் சாரு மோசம் அவரைப்பற்றிய செய்திகள் உண்மையெனில். எழுத்தாளராகப் பார்த்தால் அவர் எழுத்துக்கள் எப்படி என்று இலக்கிய வாசகர்களும் இலக்கியவாதிகளும் மோசமென்றாலே அது மோசம்.

கலைஞனின் தனிநபர் வாழ்க்கையையும் அவர் கலைமுகத்தையும் சேர்த்துக்குழப்பியதாலே தமிழகத்தில் நடிகர் மன்றங்கள் பெருகி, நடிகர்கள் இலகுவாக அரசியலில் புகுந்து ஆட்சியில் அமர்கிறார்கள். நடிகனுக்காகவும் அரசியல்வாதிக்காகவும் தீக்குளிக்கிறார்கள்.

தமிழர்களின் இந்த அப்பாவித்தனத்துக்காக பிற மானில, உலக மக்களால் விமர்சிக்கப்படுகிறார்கள்.

Raja Natarajan supports and wants intellectual slavery of Tamils. His argument goes that way.

Jayaprakashvel சொன்னது…

ராஜ நடராஜன் சொல்கிற படி எழுத்தாளன் சமூகப் பொறுப்போடு இருக்க வேண்டும்; அவன் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதே போல இருந்தால் மகிழ்ச்சி. சாரு அப்படி என்ன சரோஜாதேவி எழுத்தை எழுதிவிட்டார்? எல்லோரும் திட்டுகிர ஸீரோ டிகிரியை நிறைய முறை படித்திருக்கிறேன். மானாட மயிலாட என்று வீட்டுக்குள் வந்து அவிழ்த்து போட்டு ஆடுவதைக் காட்டிலும் அந்த எழுத்து ஆபாசம் அல்ல. அதை அசிங்கம் என்று பொய்யாய் ஒதுக்குகிற யாரும் அதில் வருகிற பெண்களின் வலிகளை பெண்களின் மொழியில் சொன்னதை கண்டுகொள்வதில்லை. நானறிந்த வகையில் பெண்களின் அந்தரங்க வலிகளை பெண்களே கூட இந்தளவு எழுதியதில்லை.

சாருவின் அலட்டல்கள் எனக்கும் உவப்பானது அல்ல. அது பற்றிய என் முந்தைய பதிவு இங்கே. http://mjayaprakashvel.blogspot.com/2011/01/blog-post.html அவர் அலட்டுகிறார் என்பதால் அவர் படைப்பாளி அல்ல என்று ஒதுக்கிவிட முடியாது. சாருவின் கருத்துகளோடு முரண்படலாம். சாரு ஒரு படைப்பாளி அல்ல என்பதில் முரண்கள் தேவையற்றது.

உங்கள் ஒழுக்க அளவீடுகளின் படி ஒருவன் ஒழுக்கம் கெட்டவனாக இருந்தால் அவன் சொந்த வாழ்க்கையை மனைவி மக்களை எப்படியும் அசிங்கப்படுத்துவீர்களா?

கீற்று செய்தது சராசரி நாகரீக வரம்புக்கும் மீறியது. அந்த நாகரீக மீறலை கண்டிக்கிறேன் என்பது தான் என் பதிவின் நோக்கம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. சாரு தமிழின் முக்கிய படைப்பாளி என்று நான் உறுதியாக நினைப்பதால் இதை சற்று கூடுதலாக கண்டிக்கிறான். இந்த மாதிரி ஒரு அசிங்கம் யாருக்கு நேர்ந்திருந்தாலும் கண்டிக்கத்தக்கதே. சாரு என்பதால் கீற்று பலபடிகள் இறங்கிவந்து அசிங்கப்படுத்தி ஆனந்தப்பட்டிருக்கிறது.