ஞாயிறு, 30 டிசம்பர், 2007

மிருகம்

டைட்டிலிலேயே புரியவைத்து விடுகிறார்கள். மிருகத்தனமானவனைப்பற்றிய படமென்று. ஆதி‍ மிருகமாகவே வந்து போகிறார். படத்தில் அய்யனார் என்று பெயர். பட்த்தில் பிற்பகுதிடயில் பிரசார நெடி. முற்பகுதியில் பருத்திவீர‌ன் நெடி.என்ற போதிலும் படத்தை உட்கார்ந்து பார்க்க வைத்தது சாமியின் நேர்த்தியான படமாக்கம். நல்ல திரைக்கதை. பிற்பகுதியில் வலுவிழக்கிற‌து என்றாலும்.தமிழ் சினிமாவின் வழக்கமான காட்சிகலும் நிறைய உண்டு. ஆனாலும் புதிய கிராமத்து வாசனை வீசுகிறது.ஊரில் வெகு சுலபமாக புழங்கக்கூடிய கெட்டவார்த்தைகள் எ.கா. சாண்டையகுடுக்கி, சிலேடை வசனங்கள் (some body would classify this as vulgarous double meening words. but i prefer this )எல்லாம் நன்றாக உள்ளன. கிராமத்தில் எல்லொரும் குமுதங்கல் சொல்வது போல வெள்ளந்தி மனிதர்கல் அல்ல. மகனைக் கொல்லும் அப்பாக்கள், அம்மாவைக் கொல்லும் மகன்கள் என எல்லோரும் உண்டு. பொலி காளை வைத்து பிழைப்பு நடத்தும் முதல் கதானாயகன் இவர்தான்
சபேஷ் முரளி பிண்ணனி இசை மிகவும் அருமை. வித்யாசாகர் போல நன்றாக செய்திருக்கிறார்கள்
பருத்திவீரன் முன்னால் மிருகம் படுத்து விட்டது

Shankar reply

கற்றது தமிழ் திரைப்படத்தை பற்றிய தங்களுடைய விமர்சனத்தில் எனக்கு உடன்பாடில்லை. இன்றைய தமிழ் சினிமாவின் சூழலில் இப்படி ஒரு திரைப்படத்தை தந்த இயக்குநர் ராமின் துணிச்சல் அசாதாரணமானது.ராம் இத்திரைப்பட‌த்தின் மூலமாக‌ முன்வைக்கும் சமூக க‌ருத்துக்க‌ள் யாவும் க‌வ‌னிக்கப்ப‌ட‌வேண்டிய‌வை. இன்றைய‌ ச‌முதாய‌ம் இரு வித‌மான மனநிலை கொண்ட இளைஞர்களை உருவாக்கி வருகின்றது. மிக எளிதான உழைப்பிலேயே வேலை, பணம், காதல், என அனைத்திலுமே வெற்றி பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழ்ந்து வரும் ஒரு பிரிவு. இவை அனைத்துமே கனவில் மட்டுமே சாத்தியம் என எதுவுமே கிடைக்கப்பெறாமல் வெறும் ஏக்கம், விரக்தி, என வாழ்ந்து வரும் இன்னொரு பிரிவு. ஒருவர் தன் க‌ல்லூரியில் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவே இத்த‌கைய பொருளாதார ஏற்ற‌த்தாழ்வினை நிர்ணயிக்கின்றது. இத்த‌கைய‌ போக்கு மிக‌வும் ஆப‌த்தான‌ ஒன்று."2000 வ‌ருடமாக‌ இருந்து வ‌ரும் தமிழ் ப‌டித்த‌வ‌னுக்கு 2000 ரூபாய் தான் ச‌ம்ப‌ளம்”"மெட்ராஸ்ல ரெண்டே ரெண்டு பேர்தான் இருக்காங்க... ஒன்னு ச‌த்ய‌ம் தேட்ட‌ர் உள்ள‌... இன்னொன்னு ச‌த்ய‌ம் தேட்ட‌ர் வெளிய..."என இதற்கு கார‌ண‌மான‌ சமுதாய‌த்தின் மீதான‌ ராமின் கோப‌ம்(உண்மையில் என்னுடைய கோபமும் கூட) ப‌ட‌த்தின் ப‌ல‌ காட்சிக‌ளில் தெரிகின்ற‌து."நெஜ‌மாத்தான் சொல்றியா?" என ஆனந்தி கேட்கும் ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதை. இந்த ஒரே வசனம், இடம் பெறும் ஒவ்வொரு காட்சியிலும் சிரிப்பு, சிலிர்ப்பு, அழுகை என வெவ்வேறான உணர்வுகளை ஏற்ப‌டுத்துவ‌து அற்புத‌ம். பொருளாதாரம், தாய்மொழி என பல்வேறு சமூக பிரச்சனைகளை கையாண்டு இருந்தாலும், பிர‌ச்சார‌ நெடி சிறிதும் இன்றி இத்த‌னை நேர்த்தியாக ஒரு படத்தை தந்து, ந‌ம் வருங்கால சமுதாயத்திற்கு ஓர் எச்ச‌ரிக்கையினை விடுத்திருக்கும் இய‌க்குந‌ர் ராமுக்கு நம் "டூர்ங் டாக்கிஸ்"இன் வாழ்த்துக்க‌ள்.தமிழ் சினிமாவில் நமக்கு அலுத்துப்போன சைக்கோ த‌னத்தினை ப‌ய‌ன்படுத்தாம‌ல் இய‌ல்பான‌ தளத்திலேயே க‌தையோட்ட‌ம் இருந்திருக்க‌லாம். ந‌ம் ச‌மூக‌த்தில் த‌மிழுக்கு இருக்கும் இன்றைய நிலைதான் 'க‌ற்றது த‌மிழ்'க்கு நம் திரைத்துறையில் கிடைத்திருக்கும் அங்கீகார‌மும் கூட‌...வருத்த‌த்துட‌ன்ச‌ங்கர்

கற்றது தமிழ்

ஒரு நல்ல படம் எடுக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் அரைகிணறு தான் தாண்டி இருக்கிறார்கள்.தீவிரமாக மெனக்கெட்டு யதார்தமாய் படம் எடுக்க ஆசைபட்டு சினிமா எடுத்து இருக்கிறார்கள்.குறிப்பாக சாமியார்கள் உடன் தொடர்பு அதை ஒட்டிய பாடல். மேன்சன் காட்சிகள்.மீன்டும் நாயகியை சென்னையில் சந்திப்பது. அரைவேக்காடு.ஆறுதல் ஜீவா, பாலசுப்ரமணியெம், நாயகி.நாயகியின் அறிமுக காட்சி தமிழில் நான் பார்த்த வகையில் புதுசு. ஜீவாவின் வழிசல் அழகு.ம‌ஹாராஷ்ட்ரா காட்சிக‌ல் அருமை. உண்மையில் பிரபாக‌ர் பாத்திர‌ம் ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ன். படத்தில் எனக்கு மிகம் பிடித்தது இறுதி வீடியோ காட்சி.அதில் வ‌ச‌ன‌ங்க‌ள் அருமை. ஆவ‌ர்க‌ள் சாவ‌தும், அத‌ற்கான‌ விள‌க்க‌மும் மொக்கை. போல‌ சின்ன‌ குழந்தைகளின் பெரிய‌ ம‌னுஷ‌த்த‌ன‌மான‌ க‌வித்துவ‌மான‌ வ‌ச‌ன‌ங்க‌ள் செயற்கை.உங்க‌ள் பார்வைக‌ளையும் ப‌திவு செய்க‌.

மூக்குத்தி

உழுது வைத்த செம்மண் காட்டில்
ஒற்றைக்கருவேல மரம் போல‌
தனித்து தெரிகிற‌து.......
வெட்கத்தில் சிவந்திருக்கும் அவள் முகத்தில்
அந்த...........
ஒற்றைக்கல் மூக்குத்தி.

நெய்தல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஒத்த ரசனை உடைய ஆய்வு மாணவர்களாகிய நாங்கள் நெய்தல் என்ற பெயரில் ஒரு தனிச்சுற்று திங்கள் இலக்கிய இதழை வருகிற 2008 ஜனவரியில் இருந்து நடத்த உள்ளோம்.நாலணா வரையரையுமற்ற, அதீத எளிமையான, பாசாங்குகள்‍‍-பாகுபாடுகள் இல்லாத இந்த இதழுக்கான இடைவெளிகள் தமிழ் இலக்கிய வெளியில் நிரம்ப உள்ளதாகவே கருதுகிறோம். இலக்கிய தீரத்தில் புதிய வடிவங்கள், பரிசோதனைகள் மற்றும் சமூக அக்கறையிலெலுந்த படைப்புகளுக்கு நெய்தல் களமாக விளங்கும். மேற்சொன்ன காரணங்களே இதழின் அரசியல்.ஒரு நாடோடிக்கான ஒப்பனையுடன், பள்ளம் நோக்கி பாயும் நீரின் இலகுவோடு இதழை கற்பனை செய்து கொள்ளலாம்.இதழ் எல்லோருக்குமானது. படைப்பின், தொகுப்பின் இன்ன பிற இதழின் அனைத்து முகங்களின் இகழ்ச்சி-மகிழ்ச்சி மற்றும் உழைப்பில் பங்கு கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.ஆசிரியர் குழுஇரா.முத்தெழிழன்இ.ரமெஷ்ச‌ப‌ரினாத‌ன்சவுந்திரராஜன்ஜி. மோகன்ராஜ்ம‌.கிருஷ்ணராஜ்ந‌.கோப்பெருஞ்சோழன்ஹெச். சங்கர்ம‌. ஜெய‌ப்பிர‌காஷ்வேல்அருள்தொடர்புகளுக்குநெய்தல்(ம‌.ஜெயப்பிரகாஷ்வேல்)எம். புத்தூர் அஞ்சல்தொட்டியம் வட்டம்திருச்சி மாவட்டம