வெள்ளி, 13 செப்டம்பர், 2013

தங்கமீன்கள் என்றொரு தமிழ்ப்படம்

நேற்று நங்கநல்லூர் வெற்றிவேல் திரையரங்கில் கடைசிக் காட்சியாக ஓடிக்கொண்டிருந்த தங்கமீன்கள் படத்தை நண்பர் கண்ணனுடன் சென்று பார்த்தேன். படம் பேசப்படவேண்டிய படம் என்பதை வெளியாவதற்கு முன்பே நிறைய பேசியும் எழுதியும் தீர்த்துவிட்டார்கள். உண்மையில் நல்ல படம் தான். சினிமாவின் ஆதாரகுணங்களோடு வந்திருந்தாலும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கும் என்றே நம்புகிறேன். சிலர் குடும்பமாக வந்திருந்தார்கள். அனைவரும் மிகவும் ஆர்வமுடனே பார்த்தார்கள். எக்ஸிட் கமெண்ட்களிலும் பலரும் படத்தை பாத்திரங்களை பேசினார்களே ஒழிய யாரும் படத்தை சலித்துக்கொள்ளவில்லை. சமீபத்தில் நான் கவனித்த மிக முக்கியமான ஒரு முன்னேறம் இது. இந்தப் படம் இதனாலே வெற்றிப்படமாகிறது. நல்ல படமாகவும் ஆகிறது. இதற்காக கவுதமுக்கு பாராட்டுக்கள்; ராமுக்கு இந்த வாய்ப்ப்பை வழங்கியதற்காக.

ராமின் கற்றது தமிழ் ஒரு நல்ல படமாக வேண்டி செய்யப்பட்ட படம். நல்ல படம் உருவாக வேண்டும். செய்யப்பட கூடாது என்பது என் கருத்து. தங்கமீன்களும் சற்றேறக்குறைய அதே பாணியில் இருந்தாலும் நன்றாக கொடுக்கப்பட்டிருக்கிறது. படம் நிறைய விவாதங்களை தூண்டுகிறது.

அரட்டை அரங்க - சூப்பர் சிங்கர் பாணியிலான பாண்டிராஜின் பசங்க படம் போலியான நல்லபடத்துக்கு மிகச்சரியான உதாரணம். உண்மையான அழகியலோடு எங்கேயும் இடறாமல் படைக்கப்பட்ட நல்ல படத்துக்கு தங்கமீன்கள் உதாரணம். எனக்கென்னவோ ராமை இந்தப் படத்துக்காக பாரட்டத்தோன்றவில்லை. இன்னும் மிக நல்ல படங்களை அவர் தரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அவரின் சினிமாவெறிக்கு இந்தப் படம் சாதாரணம் எனவும் கருதுகிறேன்.

ஒரு பாடலில் வறியவன் என்ற வார்த்தை வருகிறது. மிகச்சரியாக உபயோகிக்கப்பட்ட வார்த்தை. படத்துக்கு மிக நெருக்கமாக கொண்டு சேர்த்த வார்த்தை. கையில் முன்னூறு ரூபாய் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு 299க்கு ஒரு செருப்பை தேர்வு செய்து செருப்பில்லாத என் மகன் கால்களில் அணியவைத்துவிட்டு பணம் கட்டும் நேரத்தில் 20 ரூபாய் குறைந்து விட்டது ஒரு நாளில். பிறகு மகன் கால்களில் இருந்து செருப்பைக் கழட்டி அவர்களிடம் கொடுத்து விட்டேன். வறியவனாக அந்தக் கணத்தில் நான் உணர்ந்ததை வோடபோன் நாய்க்காக கல்யாணி அலையும் போது திரும்பப் பெற்றேன். நான் நடைமுறையுணர்ந்த அப்பனாகவும் கல்யாணியை ப்ரியமிக்க அப்பனாகவும் அறிந்தேன்.

வியாபார வெறியில் தலைதெறித்தாடும் சமூகக் கட்டமைப்பில் கல்யாணியின் பாத்திரம் நடைமுறைக்கு ஒவ்வாத பாத்திரமாகத்தோன்றும். குடும்ப நிலை தெளிவாக தெரிந்த நானும் என் தங்கையும் அம்மாவிடம் காசு எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து கொண்டுதான் ஒரு ஐஸைக்கூட கேட்போம்.

வழக்கமாக அம்மாயி வீட்டுக்கு போகவும் வரவும் காவிரி ஆற்றை சித்தலவாய் என்ற இடத்தில் (அங்கு அகலம் 2 கி. மீ மேல்) கடந்து பின் பஸ்ஸேரி போவோம். தண்ணீர் அதிகம் உள்ள நாட்களில் குளித்தலை பெரியார் பாலம் வழியாக பயணம். செல்வும் நேரமும் அதிகம். ஒருமுறை சித்தலவாயில் இறங்கி அம்மா எங்கள் இருவருக்கும் பூரியோ என்னவோ வாங்கி கொடுத்து விட்டு ஆற்றங்கரைக்கு போனால்...தண்ணீர் கூடி விட்டது. நடந்து கடக்க முடியாது. கொடுமைக்கு எல்லா காசும் தீர்ந்து விட்டது. பிறகு அம்மா கையோடு கொண்டு வந்திருந்த சில தேங்காய்களை ஒரு கடையில் விற்றுவிட்டு குளித்தலை சுற்றி வீடுவந்தோம். இது யதார்த்தம். நடைமுறை. ஆனால் கல்யாணி யதார்த்தததை மீறிய ஒரு கனவுடன் இருக்கிறான். வோடபோன் நாய்க்குட்டியையும் வாங்கி விடுகிறான்.

நிறைய எழுதத் தோன்றுகிறது. செல்லம்மா தங்கமீனாக போகும் தருணத்தில் குளத்தில் கால் வைத்தவுடன் நீரின் சில்லிப்பு ஒலி இதயத்தை சில கணங்கள் நிறுத்தி வைத்தது. அத்தனை தவிப்பை அது இறக்கியது. படம் நெடுகவும் காட்சிகள் மாறும் போதோ அல்லது சில அழுத்தங்கள் தேவைப்படும் இடத்திலோ மிகவும் கணத்த ஓசையை ராம் பயண்படுத்தியிருக்கிறார். ரயிலோசை, கப்பல் ஹாரன் என மிக அருமையான உபயோகங்கள் அவை.

படக்கென்று தெரிந்த குறை - இசை. டைட்டிலில் இழையும் அதே இசை நீருக்கடியிலும் தொடர்வது ஒரு ஈர்ப்பாக இல்லை. தீம் மியூசிக் என்றால் என்னவென்று யுவன் போன்றோரெல்லாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும். இதில் ரயிலோசை, கப்பல் ஹாரன் என்பனவற்றை உபயோகித்தது ராமின் இசை.
படம் நெடுகிலும் ஒரு மிகை கலையுணர்ச்சி அல்லது கவிதையுணர்ச்சி ஓடிக்கொண்டே இருக்கிறது. அது யதார்த்ததை கொஞ்சம் மிகை அழகியலோடு தந்திருக்கிறது. இது என்னைப்பொறுத்தவரை ஒரு குறைதான். ஆனால் இந்தக் குறை இல்லாமல் இருந்தால் படம் ஒரு வெகுமக்கள் படமாக ஆகி இருக்காது.
ராம் என்ற நடிகர் திரையில் இல்லாமல் பின்னால் இயக்குநராக இருந்திருந்தால் இன்னும் நல்லா வந்திருக்குமோ? இதற்கு வேறு யாரும் பொறுத்தமாக இருப்பார்களா? ஆனால் திரையில் கல்யானியை விட ராமே அதிகம் தெரிகிறார்.
ராமை திரையில் பார்க்க எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அவர் அருமையாக செய்திருக்கிறார். அதில் பிழையில்லை. ஆனால் அவரை ஒரு படைப்பாளியாக மட்டும் வைக்காமல் கலைஞனாகவும் மாற்றிய இந்த தமிழ்த்திரைச்சூழலை சபிக்காமல் இருக்க முடியவில்லை. படத்தின் குறைகளாக பலவும் பேசலாம். ஆனாலும் எல்லாவற்றையும் தாண்டி தமிழ் சினிமாவில் ஒரு தனிக்குரலாக ஒலிக்கும் தோழர் ராமின் உழைப்புக்காக.........எதையும் பேசாமலிருப்பது நல்லது.
மீண்டும் ஒருமுறை பார்த்து கோர்வையாக நிறைய எழுதுகிறேன்.


Image from: www.4tamilmedia.com with many thanks

சனி, 24 ஆகஸ்ட், 2013

மாற்று சினிமா என்னும் மாய மான்

சமீப காலமாக தமிழ் ஸ்டூடியோ அருண் உள்ளிட்டவர்கள் மாற்று சினிமா என்று பேசியும் இயங்கியும் வருகிறார்கள். வாழ்த்தலாம். ஆனாலும் என்னைப் பொறுத்தவரை மாற்று சினிமா என்ற ஒன்று நம் தமிழ் சினிமாவில் சாத்யமில்லை என்றே படுகிறது. தெரிந்தோ தெரியமலோ தமிழில் சினிமா என்பது முக்கிய கலாச்சாரக்கூறாகவே மாறிவிட்டது. மக்களின் அன்றாட வாழிவியலின் ஒரு அங்கமாகவே உள்ளது. அப்படிப்பட்ட சினிமாவில் மாற்றத்தை விரைவில் எதிர்பார்த்துவிட முடியாது. மேலாக இவர்கள் சொல்கிற வணிக சினிமாவுக்கு வெளியே நின்று கொண்டு மாற்று சினிமாவை கட்ட முடியாது.
காட்சிப்பிழை இதழ் தமிழின் வெகுஜன சினிமாவில் உள்ள காட்சிகள் படைப்புகளில் இருந்தே தமக்கான தரவுகளைப் பெற்றுக்கொண்டு கருத்துக்களை முன்வைக்கிறது. சினிமாவின் நற்கூறுகளை சொல்ல வரும் பெரும்பாலானவர்கள் மேற்கத்திய இரானிய கொரிய இன்னேரமுள்ள பிற மொழிப்படங்களை முன்வைத்தே பேசுகிற இந்த காலகட்டத்தில் பாமர சினிமா ரசிகனான என்னைப் போன்றவர்களுக்கு சினிமாவை சரியாக அறிமுகப்படுத்தி வருகிறது காட்சிப்பிழை. சகிக்கமுடியாத சில படைப்புகள் அதில் இருந்தாலும், சினிமா குறித்த முன்னெடுப்புகளின் சமீப காலத்திய பொருட்படுத்த்ததக்க மாற்றமாக இதைக் காண்கிறேன்.
உண்மையில் இவர்கள் சொல்கிற வணிக சினிமாவிலும் கலையை நெருங்கும் சில தருணங்கள் கடந்து போகின்றன (நன்றி கவுதம சித்தார்த்தனுக்கு). கரூர் ராமானூர் வெற்றியில் அமர்ந்திருந்த எனக்கு கடல்புறத்தை மிக நெருக்கமாக்கியது நீர்ப்பறவை. லூர்துசாமி தன் மகனின் குடிப்பழக்கத்தை மாற்றிய மருத்துவருக்கு மிகப்பெரிய மீனை காணிக்கையாக்கும் காட்சியும் இறுதியில் மகனின் பிணத்த புறங்கடலில் தூக்கும் காட்சியிலும் கலைக்கு மிக அருகாமையில் கொண்டு போயிருப்பார் சீனு ராமசாமி. இன்னும் அற்புதமாக பண்ணியிருக்க வேண்டியது. தவற விட்டிருக்கிறார். இப்படியாக இவர்கள் சொல்கிற குப்பைகளிலும் முத்துக்கள் உண்டு. அதில் இருந்து ஆரம்பித்தால் மிகவும் அணுக்கமாக இருக்கும்.
வெகுமக்களிடம் போகாத எந்த மாற்றமும் பழக்கமாகாது. அதேநேரத்தில் எல்லாம் வியாபாரமயமாக்கிவிட்ட இந்த பகாசுர காலகட்டத்தில் சினிமாவில் மட்டும் தனியாக மாற்றத்தை கொண்டு வர முடியாது. சாதிய சமூகத்தில் மாற்றம் கொண்டு வர விரும்புவர்கள்; சூழலியல் மாற்றம் கொண்டுவர விரும்புபவர்கள் என்று எல்லோருக்கும் இதேதான். எதிர்மறை எண்ணங்களை விதைத்து விட்டுப் போவது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. பல்வேறு தளங்களில் மாற்றத்தை விரும்பும் சக்திகள் ஒருங்கிணைந்து ஒட்டு மொத்த சமூக மறுமலர்ச்சியை உண்டாக்கும் வேலைத்திட்டத்தில் உழைக்க வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்.

இது பிராண்டுகளின் உலகம். இயற்கை வேளாண்மையா கூப்பிடு நம்மாழ்வாரை! அணுசக்தி எதிர்ப்பா அதான் உதயகுமார் இருக்காரே!!. காட்டுயிர் பாதுகாப்பா தியோடர் பாஸ்கரனைக் கேளுங்க!!! என்று மாற்றத்தை விரும்பும் இவர்களையும் பிராண்டுகளாக்கி விட்டது இந்த காலகட்டம். இப்படியான சக்திகள் ஒருங்கிணைத்து ஒரு அமைப்பின் கீழ் இயங்கும் போது சமூக மாற்றம் சாத்தியப்படும் என்று நம்புகிறேன். ஆனால் அப்படியான ஒரு வலுவான அமைப்பு இல்லை என்கிற பரிதாபகரமான நிலைமையில் இருக்கிறோம். நான் மேலோட்டமாகவும் ஆழ்ந்தும் கவனித்த வகையில் இப்போதைய பொருட்படுத்தத்தக்க எண்ணிக்கையிலான இளம் வயதினருக்கு இந்த மாதிரியான சமூக அக்கறை கொஞ்சம் துளிர்த்து வருவதாக நினைக்கிறேன். ஆனால் அவர்களெல்லாம் திசைக்கொன்றாக பிளவுண்டு கிடக்கிறார்கள். ஒருவேளை இவர்களின் பிள்ளைகள் தெளிவான திசையைக் கண்டடைந்து மிகப்பெரும் சக்தியாகலாம் என்பது என் எதிர்பார்ப்பு. அதுவரை தொடர்வோம்.

சந்ததியை நீட்டித்தல்

பரிணாம வளர்ச்சியைப் பற்றி தொழில் நிமித்தமாக அடிக்கடி படித்து வருகிறேன். ரொம்ப காலமாகவே இந்த வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம் நானும் ஒரு விலங்குதான் என்று எனக்கு நினைவுக்கு வரும்.  ஆனாலும் மனிதன் தவிர்த்த பிற விலங்குகள் நம்மளவு மூளை வளர்ச்சி அடையவில்லை. அதனால்தான் நாம் சுரண்டல், போட்டி, துரோகம், கருணை இப்படியான சகல மனிதப்பண்புகளோடும் இருக்கிறோம்.
நான் படித்தவரை பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும்- அவை எத்தனை சிறிய-பெரிய அல்லது அறிவு வளர்ந்த அல்லது வளராத உயிரினமாக இருந்தாலும் சரி-அடிப்படையாக சில உந்துதல்கள் அல்லது கடமைகள் உள்ளன.
1.       உடல் வளர்ப்பது (உணவு தேடல் அல்லது உற்பத்தி (உதாரணம்-தாவரங்கள்); உடலை பாதுகாப்பது-இருப்பிடம் பேணல்)
2.       வளர்சிதை மாற்றம் (உடலை வளர்க்க சாப்பிடுவதை செரிப்பது; உடலில் உயிர்மூலக்கூறுகளை உண்டாக்குவது மற்றும் அழிப்பது)
3.       சந்ததியை நீட்டித்தல் (தனது மரபணுக்களை சந்ததிகள் வழி பரப்பி சாகாமல் வைத்திருப்பது)
மேலுள்ள காரணிகள் மூன்றாம் காரணிதான் என்னை பெரிதும் ஈர்த்தது. ஒவ்வொரு உயிரும் மிகவும் பிரயத்தனம் எடுத்து தம் மரபணுக்களை சந்ததி வழி பரப்புகின்றன. இது ஒரு அடிப்படை உந்துதலாகவே நடக்கிறது. மரபணுக்களை கடத்தவே தாம் இந்த செயலை செய்கிறோம் என்று தெரியாமலே அடிப்படையான உந்துதலால் அந்த செயல்கள் செய்யபடுகின்றன. உறவுக்கு பின்னும் நாய்கள் பின்னிக் கொண்டிருப்பது ஆண் நாய்களின் குறி விரைத்து அடைத்துக் கொள்வதுதான் காரணம் என்ற எங்கோ படித்திருக்கிறேன். அப்படியாக இருப்பதன் மூலம் தன் விந்து மட்டும் கருப்பையை அடையவும் பிற நாய்கள் உறவு கொண்டு விந்துப் போட்டியை உருவாக்காமல் தடுக்கவும் செய்கின்றன. வாரிசு அரசியலுக்கெல்லாம் இதுதான் அடிப்படை உந்துதல் என்று நான் நம்புகிறேன். தன் சந்ததி வெற்றிகரமாக நீடித்திருக்க வேண்டும் என்ற அடிப்படை உந்துதலாகக் கூட அது இருக்கலாம். ஆனால் பிரம்மச்சர்யம் மேற்கொள்ளும் சிலர் (சாமியார்கள் உட்பட) அடிப்படை உயிர்ப்ப்பண்பையே விலக்கி வைக்கிறார்கள். அப்படியாக செய்வதன் மூலம் அவர்கள் இயற்கைக்கு மாறான ஒரு காரியத்தையே செய்கிறார்கள்.


சந்ததியை நீட்டித்தல் என்கிற விசயத்தில் மனிதர்களின் செயல்பாடுகள் என்னை மிகவும் ஆச்சர்யப்பட வைக்கின்றன. மனைவியை குழந்தைப்பேறுக்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் என்ற அதிகாலைத்தகவலோடு கிடைத்த குருவாயூர் எக்ஸ்பிரஸில் பொதுப்பெட்டியில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். கொள்ளிடம் பாலத்தின் மேல் ரயில் போகும்போது ஆண்குழந்தை என்ற தகவல் கிடைத்ததும்  சீரங்கத்தில் இறங்கிவிட்டேன். மிகவும் உணர்ச்சிப்பெருக்கான நிலை. ஆண்களுக்குத்தான் தம் சந்ததியை  நீட்டிப்பதில் பெருவிருப்பம். நானும் விதிவிலக்கல்ல. கண்களில் நீர் வந்து விட்டது. சித்திக்கு போன் போட்டு என் பாட்டனிடம் தகவல் சொல்லுமாறு சொல்லும் போது குரல் உடைந்து அழுகை எட்டிப்பார்த்தது. என்னை விடவும் என் பாட்டனுக்கு இந்த செய்தி பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்றே நம்பினேன். அது உண்மையும் கூட. 

சனி, 18 மே, 2013

பரமார்த்த குருவின் சீடர்கள்


உனக்கு ஒரு விசயம் நல்லா தெரியும் என்பதற்காகவே அதை மத்த எல்லோரிடமும் எதிர்பார்க்காதே. ஒருத்தருக்க்கு எதோ ஒன்னு தெரியலங்கறதுக்காக அவருக்கு எதுவுமே தெரியாதுன்னும் நினைக்காதே. இவை என் மனைவி சொன்ன பொன்மொழிகள். தற்போது தமிழ் ச்டூடியோ அருண் என்பவரால் அடிக்கடி குறும்படம் இயக்கி பெரும்படம் எடுததவர்கள் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகிறார்கள். ராமும் இப்படியான ஒரு கருத்தில் இஉர்ப்பதாகவும் அதற்கு அவரின் தனிப்பட்ட மற்றும் திரை வாழ்வின் சறுக்கல்கள் முக்கிய காரணம் எனவும் அபிலாஷ் எழுதியதையும் சமீபத்தில் படித்தேன்.

அருண் சொல்வது இஅவர்கள் எடுப்பது குறும்படமே அல்ல. சினிமாவே அல்ல. இவர்களாஇ சினிமா ரசனை கெட்டு விட்டது என்று. சில மாதங்கள் முன்பு நண்பர் கிருஷ்னராஜுடன் சோழமண்டலம் சென்றிருந்தேன். சில சிற்பங்களும் பல ஓவியங்களுமாக மிக அற்புதமான இடம் அது. எந்தச் சிற்பமும் எந்த ஓவியமும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் இவையெல்லாம் நல்ல படைப்புகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அவற்றின் நேர்த்தி சொன்னது.  பெருமைக்காக சொல்லிக்கொள்ளவில்லை. இப்படி பார்த்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. வெறும் கோடுகளின் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அந்தக் கோஒடுகளில் ஓவியத்தையும் கலையையும் பார்க்கும் கண்கள் இருக்கின்றன. ஆனால் இந்த சினிமாவாதிகள் சினிமாவுக்கு ஒரு ஒஉனிதம் கற்பிக்க முயன்று வருகிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. பொதுவில் மக்கள் பார்க்கவென யாரும் கலைப்படைப்புகளிஅ செய்வதில்லை. தமது உள்ளின் உந்துதல்  காரணமாகவே கலைப்படைப்புகள் நிகழ்கின்றன. எப்படியாப்பட்ட கலையானாலும் இதுதான் அடிப்படை. சினிமாவும் அப்படித்தான். மக்கள் பெரும்பாலான மக்கள் பார்ப்பது சினிமா ஒரு பொழுத்போக்கு என்பதாகத்தான். அதில் உங்களாஅல் ஒரு செய்தி சொல்ல முடிந்தால் ஒரு கலையனுபவம் கொடுக்க முடிந்தால் அது நல்லது. ஆனால் சிலர் வெறும் வணிகமாக அதை பாஅர்க்கிறார்கள். நுகர்வுக் கலாச்சாரத்தில் எதுவுமே வியாபரம் தான்.  சுற்றுச்சூழல் எழுத்துக்கள் குறித்தெல்லாம் காசு வாங்கிக் கொண்டு பயிலரங்கம் நடக்கும் தமிழ்ச்சூலலில் எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் இடம் இருக்கிறது. யாரும் யாரின் இடத்தையும் பறித்து விடப்போவது இல்லை.

ஒரு நல்ல படைப்பு என்பது தானாக நிகழ்வது. அதை யாரும் தயாரித்து விட  முடியாது. அப்படியாக நிகழ்ந்த படைப்புகளே சாகாவரம் பெற்றவை. ராமின் செய்யப்பட்ட கற்றது தமிழ் கொண்டாடப்படாதற்கு இதுவே காரணம்.அற்புதமான கலைஞர்கள் யாரும் அங்கீகாரத்துக்காக மெனக்கெட்டதில்லை. அப்படி மெனக்கெடுபவர்கள் நல்ல கலைஞர்களாக இருக்க முடியாது.

சுந்தர் சி பாண்டிராஜ் பிரதாப் போத்தன் சுரேஷ் கிருஷ்னா போன்ற போலிKஅலிடம் பாராட்டுப் பெறவும் மார்க் வாங்கவும் கோமாளி போல யூனிபார்ம் போட்டுக்கொண்டு பவ்யமாக நிற்பதும் அரங்கில் சோக இசைக்கு முகம் கொடுத்தும் படம் செய்பவன் யாரும் சுயமரியாதை உள்ள சுயம் உள்ள கலைஞனாக இருக்கவே முடியாது. அப்படியானவர்கள் யாரும் நல்ல கலைப்படைப்பை தந்து விட முடியாது. அவர்கள் வருவார்கள் போவார்கள். நல்ல படம் எடுக்க அதிகம் திறமை உள்ள ராம் போன்றவர்கள் இது குறித்தெல்லாம் யோசிக்கத்தேவை இல்லை.

எழுதவும் பகிரவும் நிறைய உள்லன. வேறொரு தூக்கம் கெட்ட நாளில் பார்ப்போம்.

பரமார்த்த குருவின் சீடர்கள்


உனக்கு ஒரு விசயம் நல்லா தெரியும் என்பதற்காகவே அதை மத்த எல்லோரிடமும் எதிர்பார்க்காதே. ஒருத்தருக்க்கு எதோ ஒன்னு தெரியலங்கறதுக்காக அவருக்கு எதுவுமே தெரியாதுன்னும் நினைக்காதே. இவை என் மனைவி சொன்ன பொன்மொழிகள். தற்போது தமிழ் ச்டூடியோ அருண் என்பவரால் அடிக்கடி குறும்படம் இயக்கி பெரும்படம் எடுததவர்கள் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகிறார்கள். ராமும் இப்படியான ஒரு கருத்தில் இஉர்ப்பதாகவும் அதற்கு அவரின் தனிப்பட்ட மற்றும் திரை வாழ்வின் சறுக்கல்கள் முக்கிய காரணம் எனவும் அபிலாஷ் எழுதியதையும் சமீபத்தில் படித்தேன்.

அருண் சொல்வது இஅவர்கள் எடுப்பது குறும்படமே அல்ல. சினிமாவே அல்ல. இவர்களாஇ சினிமா ரசனை கெட்டு விட்டது என்று. சில மாதங்கள் முன்பு நண்பர் கிருஷ்னராஜுடன் சோழமண்டலம் சென்றிருந்தேன். சில சிற்பங்களும் பல ஓவியங்களுமாக மிக அற்புதமான இடம் அது. எந்தச் சிற்பமும் எந்த ஓவியமும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் இவையெல்லாம் நல்ல படைப்புகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அவற்றின் நேர்த்தி சொன்னது.  பெருமைக்காக சொல்லிக்கொள்ளவில்லை. இப்படி பார்த்து விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. வெறும் கோடுகளின் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அந்தக் கோஒடுகளில் ஓவியத்தையும் கலையையும் பார்க்கும் கண்கள் இருக்கின்றன. ஆனால் இந்த சினிமாவாதிகள் சினிமாவுக்கு ஒரு ஒஉனிதம் கற்பிக்க முயன்று வருகிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. பொதுவில் மக்கள் பார்க்கவென யாரும் கலைப்படைப்புகளிஅ செய்வதில்லை. தமது உள்ளின் உந்துதல்  காரணமாகவே கலைப்படைப்புகள் நிகழ்கின்றன. எப்படியாப்பட்ட கலையானாலும் இதுதான் அடிப்படை. சினிமாவும் அப்படித்தான். மக்கள் பெரும்பாலான மக்கள் பார்ப்பது சினிமா ஒரு பொழுத்போக்கு என்பதாகத்தான். அதில் உங்களாஅல் ஒரு செய்தி சொல்ல முடிந்தால் ஒரு கலையனுபவம் கொடுக்க முடிந்தால் அது நல்லது. ஆனால் சிலர் வெறும் வணிகமாக அதை பாஅர்க்கிறார்கள். நுகர்வுக் கலாச்சாரத்தில் எதுவுமே வியாபரம் தான்.  சுற்றுச்சூழல் எழுத்துக்கள் குறித்தெல்லாம் காசு வாங்கிக் கொண்டு பயிலரங்கம் நடக்கும் தமிழ்ச்சூலலில் எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் இடம் இருக்கிறது. யாரும் யாரின் இடத்தையும் பறித்து விடப்போவது இல்லை.

ஒரு நல்ல படைப்பு என்பது தானாக நிகழ்வது. அதை யாரும் தயாரித்து விட  முடியாது. அப்படியாக நிகழ்ந்த படைப்புகளே சாகாவரம் பெற்றவை. ராமின் செய்யப்பட்ட கற்றது தமிழ் கொண்டாடப்படாதற்கு இதுவே காரணம்.அற்புதமான கலைஞர்கள் யாரும் அங்கீகாரத்துக்காக மெனக்கெட்டதில்லை. அப்படி மெனக்கெடுபவர்கள் நல்ல கலைஞர்களாக இருக்க முடியாது.

சுந்தர் சி பாண்டிராஜ் பிரதாப் போத்தன் சுரேஷ் கிருஷ்னா போன்ற போலிKஅலிடம் பாராட்டுப் பெறவும் மார்க் வாங்கவும் கோமாளி போல யூனிபார்ம் போட்டுக்கொண்டு பவ்யமாக நிற்பதும் அரங்கில் சோக இசைக்கு முகம் கொடுத்தும் படம் செய்பவன் யாரும் சுயமரியாதை உள்ள சுயம் உள்ள கலைஞனாக இருக்கவே முடியாது. அப்படியானவர்கள் யாரும் நல்ல கலைப்படைப்பை தந்து விட முடியாது. அவர்கள் வருவார்கள் போவார்கள். நல்ல படம் எடுக்க அதிகம் திறமை உள்ள ராம் போன்றவர்கள் இது குறித்தெல்லாம் யோசிக்கத்தேவை இல்லை.

எழுதவும் பகிரவும் நிறைய உள்லன. வேறொரு தூக்கம் கெட்ட நாளில் பார்ப்போம்.

சனி, 30 மார்ச், 2013

மரணதண்டனையும் இஸ்லாமிய சட்டங்களும்: தொடர் விவாதம்-ஒன்று


இந்த விவாதம் நண்பர் இம்ரான் நாஷித் இவர்களுக்கும் எனக்கும் சில வாரங்களாக நடந்த இ மெயில் விவாதத்தின் தொகுப்பு. மொத்தம் ஐந்து வாய்ப்புகள்; முதல் வாய்ப்பு இங்கே. அடுத்தவை பின் தொடரும்மரண தண்டனை சரியா?

 ஐந்து வாய்ப்புகள் கொண்ட இந்த விவாதத்தில் இது எனது முதல் வாய்ப்பு.  
அன்பு சகோதரர் ஜெயப்ரகாஷ் அவர்களுக்குஇறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உண்டாகட்டும். 
மரண தண்டனை சரியா தவறா என்பதை பற்றி பார்ப்பதற்கு முன் ஒரு அடிப்படையை நாம் மனதில் கொள்ள வேண்டும். எந்த நாட்டினுடைய சட்டமானாலும் அதன் முதல் நோக்கம் மக்களை நல்வழிப்படுதுவதல்ல !!! எந்த காலகட்டத்திலும் எந்த நாட்டிலும் இது இரண்டாம் பட்சம் தான். நல்வழிபடுதுவதற்கு அது ஒரு சித்தாந்தத்தையோ மத போதனைகளையோ செய்யும் கேந்திரமல்லமாறாக மக்களை ஆட்சி செய்யும் நாடு. மக்களை ஆட்சி செய்யும் நாட்டில் சட்டம் இயற்றும் போது மக்களிடையே குற்றங்கள் குறைவதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,கொடுக்கிறார்கள்.. 
குற்றங்களை குறைப்பதற்கு அவர்கள் இடும் சட்டமானதுமக்களை நல்வழிப்படுத்தத்தான் செய்யும். இது தான் அடிப்படை. 
 இஸ்லாம் சொல்லும் சட்டமானதுகுற்றங்களை  குறைக்க உதவுகிறது. இஸ்லாமிய சட்டங்களை எதிர்க்கும் இன்னபிற சட்டங்களானது குற்றங்களை குறைக்க உதவவில்லை என்கிற சாதாரண உண்மை உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தும் இது போன்ற விவாதத்திற்கு நீங்கள் வந்திருப்பதே ஆச்சர்யமான ஓன்று. 
 அடுத்துமரண தண்டனை அல்லது தூக்கு தண்டனை என்பது காட்டுமிராண்டிதனமானது என்பது உங்கள் கருத்து என்றால்அது போல ஒரு குற்றத்திற்கு ஆயுள் தண்டனை கொடுப்பதும் காட்டுமிராண்டி தனமானது என்று இன்னொருவர் வாதம் வைக்கலாம். 
 என்னப்பா !!! ஒரு கொலையை செய்தான் என்பதற்காக அவனை அவனது வாழ்நாள் முழுவதும் தனி சிறையில் அடைப்பது என்பது மனித உரிமை மீறல் இல்லையா?? என்று ஒருவர் கேட்கலாம். 
 ஒரு குற்றத்தை ஒருவன் செய்தான் என்பதற்காக ஆறு மாதம் சிறையில்அடைப்பதை கூட ஒருவர் விமர்சனம் செய்வார். அதுவும் மனித உரிமைக்கு அப்பாற்பட்டது என்று வாதம் வைப்பார். ஒரு பிக்பாகட் அடித்தான் என்பதற்காக அவனுக்கு 15 நாள் காவலா?? இது மனித உரிமைக்கு விடப்பட்ட சவால் இல்லையா?? என்று வேறொருவர் கேட்பார்.
 அதாவதுமரண தண்டனை விதிப்பது தான் காட்டுமிராண்டித்தனமானது,அதை விடுத்த வேறெந்த தண்டனையும் காட்டு மிராண்டிதனமானது இல்லை என்று வாதம் வைப்பவர்கள் அதை தர்கா ரீதியாக நிரூபிப்பதாக இருந்தால் மேற்கண்ட கேள்விகள் எழத்தான் செய்யும்.

மேலும்கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களால்பாதிப்பிற்கு  உள்ளானவர்  ஒரு புறம் இருக்க ,இது போன்ற குற்றச்செயல்கள் நிகழ்வது ஒரு சமுதாயத்தில் வாழும் அனைத்து மனிதர்களையும் எப்போதும் நிம்மதியற்ற பாதுகாப்பற்ற அச்ச நிலைக்குவழி வகுக்கும் 


உதாரனத்திற்க்கு  டெல்லியில் நடந்த அந்த கொடூரமான கற்பழிப்பு சம்பவத்தை எடுத்து கொள்ளுங்கள் அந்த பெண் இரவில் தன்  ஆண் நண்பருடன் ஊர் சுற்றியதும் அப்பெண் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதற்கு ஒரு காரணம்

 இந்த சம்பவத்தில் நபர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை சித்ரவதை செய்து கற்பழித்துள்ளனர் அந்த பெண் துடித்து கொண்டு இருந்த வேலையில் நீங்களோ நானோ இல்லை அந்த பெண் மாத்திரம் தான் இருந்துள்ளார் ,அந்த பெண்ணை கற்பழிக்கும் பொழுது அவள் எத்துனை முறை கதறி இருப்பால் எதிர்த்து போரிட்டிருப்பால் ஆனால் அந்த மனித மிருகங்கள் ஒன்று அல்ல பேரும் சேர்ந்து கற்பழித்துக் குடலை உருவிக் கொன்றுள்ளனர். இப்படிப்பட்ட மனித மிருகங்களை தூக்கிலிட வேண்டும் என்று கூறுவது எந்த விதத்திலும் நீங்கள் கூறியது போல அடிபடைவாதமோகாட்டுமிராண்டித்தனமோ கிடையாது.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவேளை உயிர் பிழைத்திருந்து கயவர்களை தூக்கிலிடுங்கள் என்று அந்த பெண்ணே உரிமை கூறினாலும் தாங்கள் அவளை நோக்கி , "என்னம்மா காடுமிராண்டிதனமா சட்டம் சொல்றன்னு" நீங்கள் அந்த பெண்ணை நோக்கி கூறுவது எந்த அளவிற்கு பகுத்தறிவு (?)வாய்ந்தது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
பாதிப்பிற்கு உள்ளான பெண்ணிற்கும் அவள் தாய் தந்தை மற்றும் குடும்பதினர்க்கே அந்த வலி தெரியும் கருத்து சொல்லும் நீங்களோ ஏன் என்னாலோ கூட முழுமையாக அனுபவிக்க முடியாது .
ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல,குற்றம் இழைத்தவர்களின் மனித உரிமையை மட்டுமே நாங்கள் பார்ப்போம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு போராடும் மனித (?)உரிமைப் போராளியாக இஸ்லாமியச் சட்டங்கள் காட்டுமிராண்டித் தனமானவை என்று கூறும் உங்கள் கருத்து அதிர்ச்சியை தான் தருகிறது .. 

சரி இவ்வளவு வேண்டாம் தாங்கள் பெரும் அளவிற்கு வன்மையாக கண்டித்த இலங்கையில் நடந்த அந்த கொடூர கொலைகள் ,மனிதநேயமற்ற அந்த காட்டுமிராண்டிதனத்தை செய்த இராஜபக்க்ஷேவை தூக்கிலிட்டால் அது மனித உரிமை மீறல், அப்படி தானே ?
அதாவது பாதிக்கபட்டவன் பாதிப்பு அரங்கேறி விட்டது இப்போ என்ன செய்ய ? , பாதிப்புக்கு உள்ளாகியவன் உயிருடன் உள்ளான்இவனை எப்படி தூக்கு தண்டனையில் இருந்து காப்பற்றலாம் என கூறுவது எந்த பகுத்தறிவோ ?

திரு .ஜெயபிரகாஷ் அவர்களே : பாதிப்புக்கு உள்ளானால் தான் அந்த வலி தெரியும் ..
இங்கு மற்று ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும் இவை போன்ற கொடூர செயல்கள் செய்திருப்பவரை கொன்றே ஆக வேண்டும் என்று இஸ்லாமிய சட்டம் கூரவி ல்லை அந்த பாதிக்கப்பட்ட குடும்பம் ,மன்னித்தால் அந்த குற்றம் புரிந்தவரை மன்னித்து விட முடியும் .
இங்கு பாதிபிர்க்கு உள்ளானவர்களிடம் தண்டிபதர்க்கான உரிமை வழங்க பட்டுள்ளதுஇவர் தான் முடிவெடுக்க வேண்டியவர்கள் நீகளோ நானோ அல்லது நாட்டின் ஜனாதிபதியோ அல்ல .
சட்டங்கள் கடுமையாக ஒரு சமுகத்தை பாதுகாப்பான நிம்மதியான வாழ்விற்கே வழிவகுக்குமே தவிர அது" சட்டங்கள் கடுமையாக இருந்தால் அந்த சமுதாயம் நாகரீகமடையவில்லை என்றுதான் அர்த்தம்" என்ற தங்கள் கருத்து எப்படி விளங்கி கொள்வது என்றே புரியவில்லை .
கொலை கற்பழிப்பு போன்ற குற்றம் செய்த மனித மிருகங்களை தண்டிக்க மரண தண்டனை விதிப்பது எந்த விதத்திலும் தவறு கிடையாது .

குற்றவாளியை மென்மையாக பாவிக்கும் பார்வை இது அறிவு முதிர்ச்சியில்ல .

ஒரு கோடி மனிதர்கள் நிம்மதியாக வாழ , 10 மனித மிருகங்களை தூக்கிலிடுவது எந்த வகையிலும் காட்டுமிராண்டி தனம் கிடையவே கிடையாது .
இவ்வாறு சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் தனி மனிதன் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும் .
தாங்கள் கூறிய "சட்டங்கள் பயப்பட அல்ல. மனிதன் பண்பட." என்பது கவிதை நடைக்கு அழகாக உள்ளதே தவிர நிஜ வாழ்விற்கு பொருந்தாத வரிகள் அவை .
மனிதம் பாதுகாப்பாக இருக்கவும் பயன்பெறவும் மனித தோல் போர்த்தி உலா வரும் மிருகங்களின் உள்ளத்தில் பயம் இருக்க வேண்டியது என்பது ஒரு தேவை என்று நான் கூறவில்லை அது கட்டாயம் என்று கூறுகிறேன்.
தூக்கு தண்டனை என்பது மனிததை மிருக இனத்திடமிருந்து காபற்றுமே தவிர அழிக்காது.

உங்களது முதல் வாய்ப்பின் போது மேலே நான் எழுப்பியுள்ள எல்லா கேள்விகளுக்கும் பதில்களை தந்து உங்கள் கருத்தை நிலைநாட்டவும்.


அன்பின் இம்ரான்


சட்டங்கள் மக்களை நல்வழிப்படுத்த அல்ல; என்றும் சட்டங்கள் மக்களை
நல்வழிப்படுத்தும் என்றும் அடுத்தடுத்த பத்திகளில் முரண்படும் உங்கள்
விவாதம் ஆச்சர்யப்பட வைக்கிறது. அரசு-நாடு-ஆட்சி-அரசாங்கம் என்பவற்றின்
தாத்பர்யம் மீதான உங்களின் முதிர்ச்சியின்மை மேலும் விவாதம்
செய்யத்தடையாக இருக்கும். நாடு சட்டம் இயற்றாது. அரசு தான் சட்டத்தை
இயற்றும். அரசு என்றால் மன்மோகன் தலைமையிலான அரசு போல. அரசாங்கம் என்பது
அரசின் அங்கம். அரசின் கொள்கை முடிவுகளை சட்டங்களை நிறைவேற்றி
பாதுகாக்கும் அரசின் துறைகள் நீதித்துறை போல. இது உங்கள் புரிதலுக்காக.

எந்த சட்டங்களும் மக்களை நல்வழிப்படுத்திவிட முடியாது. ஆயிரத்துக்கும்
மேற்பட்ட ஆண்டுகள் பாரம்பர்யமான இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் உள்ள
நாடுகளில் குற்றங்கள் குறைந்து விட்டனவா? குற்றங்களூக்கும் மேலாக மக்கள்
நல்வழியை அடைந்து விட்டார்களா? சட்டங்கள் மதிக்கப்பட வேண்டியவை. பயப்பட
வேண்டியன அல்ல. இஸ்லாமிய சட்டங்கள் அதீத குரூர தண்டனைகளை முன்வைத்து
மக்களை பயப்படுத்துகின்றன. ராணுவத்தில் தான் இத்தனை ஒழுங்கும்
கண்டிப்பும் தேவை. சிவில் சமூகத்தில் சுதந்திரம் வேண்டும். சுதந்திரம்
என்றால் கட்டற்ற காட்டுமிராண்டித்தனம் அல்ல. பொறூப்பை உணர்ந்த
அடுத்தவனுக்கு தொல்லை தராததே சுதந்திரம். அப்படியான சுதந்திரத்தை
பெயரளவேனும் பிற அரச சடங்கள் வழங்குகின்றன. சல்மான் ருஷ்டிக்கு ஃபத்வா.
தாலிபன்கள் மதக் காவலர்கள். இதுவா இஸ்லாமின் சமூக நீதி?

மனித உரிமைப்பாதுகாப்பு என்பது நம் இந்தியச்சூழலில் எனக்கு ஒரு
கெட்டவார்த்தை. மக்களை அரசிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயல்சக்திகளின்
சதிவேலைகளின் பங்காகவே நான் மனித உரிமை அரசுசார தொண்டு நிறுவனங்கள்
இவற்றை பார்க்கிறேன். மரணதண்டனிக்கு எதிரான என் வாதங்கள் மனிதநேயத்தின்
அடிப்படையில் தான். மேலாக ஒரு நாகரீக சமூகத்தை நாடும் எனக்கு அந்தச்
சமூகத்தில் மரணதண்டனை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் தேவையற்றவையாகத்
தோன்றுகின்றன.

கோவையில் சிறு பெண்ணை சீரழித்துக் கொலை செய்த மோகன்ராஜை மக்களின் அல்லது
அந்தக்குழந்தையின் சமூகத்தை திருப்திப்படுத்த சுட்டுக்கொன்றது போலீஸ்.
அப்போதும் நான் எதிர்த்தேன். மறுமடியும் சொல்கிறேன். தனிமனிதன் தப்பு
செய்தால் அது பலவீனம். அதையே அரசும் சட்டமும் செய்தால் அநீதி.

டெல்லி சம்பவம் பற்றி. இதுவரை எத்தனை பெண்களை அப்படிக்கொன்று
இருப்பார்கள்? எத்தனை தண்டனைகள்? இருந்தும் குற்றங்கள் குறைய வில்லை.
பூலான் தேவி அனுபவிக்காத கொடுமைகளா? அவர் திருப்பி கொடுத்ததை
பார்த்துமாவது திருந்தினார்களா? மாட்டார்கள். வெறும் பயம் மட்டுமே மனிதனை
குற்றத்தில் இருந்து விலக்கிவைக்காது. மனத்தெளிவும் நாகரீகமும் வளரும்
போதுதான் குற்றங்கள் குறையும். இவற்றை எந்த மரண தண்டனையும் ஏற்படுத்தி
விட முடியாது. அந்த 6 பேரை தூக்கிலிட்ட பின்பு டெல்லியிலோ வேறெங்குமோ
இப்படி நடக்காது என்று யார் உத்தரவாதம் தருவார்கள்? இதெல்லாம் வெறும்
ஆவேசப்பேச்சுக்கள். நிதானிப்பவன் இப்படி பேசமாட்டான்.

பாதிப்புக்கு உள்ளானால் மட்டும் தான் வலி தெரியும் என்று இம்ரான் நாசித்
எத்தனை பாதிப்புக்கு உள்ளாகி வலியை தெரிந்துள்ளீர்கள்? இதெல்லாம் விவாதம்
செய்ய சரியாக இருக்கும். உண்மை நிலை என்னவென்றால் பகுத்தறியும் எல்லா
மனிதனுக்கும் மற்றவனின் வலி கண்டிப்பாக தெரியும்.

குற்றவாளிக்கு பாதிக்கப்பட்ட குடும்பம் தண்டனை விதிக்கலாம்-விலக்கலாம்
என்பது இஸ்லாமிய சட்டத்தின் மேன்மையென சொல்கிற என் சகோதரர்களே அதுதான்
இஸ்லாமிய சட்டத்தின் ஆகப்பெரும் பலவீனம். சட்ட்டங்கள் எல்லாருக்கும்
பொதுவில் இருக்க வேண்டியவை. அது நெகிழும் தன்மையோடிருந்தால் அது
சட்டமல்ல. சம்பிரதாயம்.

சட்டங்களின் கடுமை-நாகரீக சமூகம் குறித்து.
பொது இடத்தில் சிறிநீர் கழிக்காமல் இருப்பது; நாலு பேர் இருக்கிற
இடத்தில் எச்சில் துப்பாமல் இருப்பது; பஸ்சில் டிக்கெட் எடுத்து பயணம்
செய்வது இப்படி சமூகத்துக்கான நாகரீகம் இருக்கிறது. இதை மீறுபவர்களுக்கு
சட்டமும் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் குறைய வேண்டுமானால் சட்டம் மட்டும்
போதாது. நாகரீகம் வளர வேண்டும். இதே போலத்தான் பிற பெரிய குற்றங்களும்;
கற்பழிக்காமல் இருப்பது ஒரு சமூக மனிதனின் அடிப்படைக்கடமை. அதை விடுத்து
அவ்வாறு செய்பவன் சமூகத்தின் வியாதி. அத்ற்கு அவன் மட்டுமே காரணம் அல்ல.
காலங்காலமாக ஆணாதிக்கத்தை போற்றி வரும் ஒரு சமூகத்தின் வெளிப்பாடே அந்தக்
காமவெறியன்.

அந்த 10 மிருகங்களை அழித்தால் நாட்டில் கோடி மக்கள் நிம்மதியாக
இருப்பார்கள் என்கிற உங்கள் கருத்தையே வேறு வரிகளில் சமூகத்தின்
மனசாட்சியை திருப்திப்படுத்த  என்று சொல்லி அஃப்சல் குருவை
தூக்கிலேற்றிவிட்டார்கள். அஃப்சல் குரு அஜ்மல் கஸாப், பேரறிவாளன் அவ்வளவு
ஏன் ராஜபக்‌ஷே உட்பட யாரும் அரசால் கொல்லப்படக்கூடாது. சண்டையில்
சாவதற்கும் ஒரு சமூகத்தால் சாவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

குண்டு வைத்தால் தடா பொடா தேசியப்பாதுகாப்பு சட்டம் துக்குதண்டனை என்று
எத்தனையோ மிரட்டும் அங்கங்கள் இருந்தும் குண்டுகள் வெடிப்பது
குறைந்துள்ளதா? இஸ்லாமிய சட்டங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில்
உள்ள இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்புகள் நடப்பதிலையா? பயத்தை விதைப்பதால்
நீங்கள் ஒன்றையும் அறுவடை செய்து விட முடியாது.

குற்றங்கள் ஏன் நடக்கின்றன என்பதைக் கண்டறிந்து காரணிகளை சரி செய்யாமல்
குற்றம் செய்தவனைக் கொண்று விட்டால் அந்தக் குற்றத்தை அங்கீகரித்தது
போலாகும். எதனால் குற்றம் நடந்தது, மீண்டும் நடக்காமல் இருக்க என்ன செய்ய
வேண்டும் என்று யோசிப்பதுதான் அறிவு.

உங்களின் கருத்துக்களை எதிர்நோக்கி உள்ளேன். வாழ்த்துக்கள்.

புதன், 20 மார்ச், 2013

பரதேசி-பாலாவின் முதல் படம்


பரதேசி-பாலாவின் முதல் படம்
பரதேசி-பாலாவின் முதல் படம்
சில காலமாக படங்களை திரையரங்கம் சென்று பார்க்க முடியாத அளவுக்கு நேர நெருக்கடியில் இருக்கிறேன். ஊருக்குப் போனால் மட்டுமே படங்கள் பார்ப்பது என்றாகி விட்டது. கடந்த திங்கள் அன்று கரூர் பொன் அமுதாவில் முருகேசன் மாமாவுடன் பரதேசி பார்த்தேன். முடிந்து வெளியில் வரும்போது சொன்னேன்; இந்தப் படம் விருதுகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்று.
இந்தப் பதிவு பரதேசிக்கான விமர்சனம் அல்ல. படத்தைப் பார்க்க என் பரிந்துரை.
பாலா என்ற படைப்பாளியின் மற்றெல்லா படங்களைக்காட்டிலும் இந்தப் படம் மக்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதால் இதை பாலாவின் முதல் படம் என்கிறேன். மற்ற படங்கள் அவருக்கான பயிற்சி.
படத்தைப் பற்றி பலவிதமான எதிர்க்கருத்துகள் உலவுகின்றன. நீங்கள் கிராமத்தில் வாழ்ந்தவராக-வாழ்பவராக இருந்தால் அவசியம் பார்க்கவேண்டிய படம். எதிர்க்கருத்துகள் பேசுபவர்கள் பெரும்பாலும் நகரவாசிகளாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது. என்னென்னவோ சொல்கிறார்கள். கேமரா, இசை, இந்துத்துவம், சாதியம் என்று பல தளங்களில் பாலாவின் இந்தப் பரதேசி படம் விமர்சன்ங்களுக்கு ஆளாகி வருகிறது. இந்தப் பதிவு அந்த விமர்சன்ங்கள் எதையும் மறுக்கவோ வக்காலத்து வாங்கவோ அல்ல.
எல்லோரும் சொல்வதைபோல இந்தப் படம் வெறுமனே தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் அவலத்தை மட்டும் சொல்லிப்போகவில்லை. எதோ ஒரு காரணத்துக்காக புலம் பெயரும் யாவரும் அனுபவிக்கும் வாதைகளை தேயிலைத்தோட்ட பிண்ணனியில் இந்தப் படத்தில் பார்க்கிறேன். இயல்பான கிராம வாழ்வின் எளிமையான கொண்டாட்ட வாழ்வை அழுத்தமாக பதிவு செய்யும் முற்பாதியின் தலைகீழ் தொடர்ச்சியாக அங்கிருந்து காசுக்காக புலம் பெயரும் மக்களின் அடிமை வாழ்வை பிற்பாதியில் தனக்கே உரிய குரூரக்காட்சிகளால் சொல்லிப்போகிறார் பாலா. அந்த மக்கள் பஞ்சத்துக்காக போவதாக காட்சிகள் இல்லை. இருக்கிற வாழ்வில் இருந்து மேலெழும்பும் முகமாக அவர்கள் புலம் பெயர்வதும் அதனால் அவர்கள் படும் துயருமே பட்த்தின் மையப்புள்ளி. இடைவேளைக்கு முன்னதான அந்த நெடிய அற்புதமான பாடலில் ஒரு வரி-ஊரைத்தேடி ஊரை விட்டு ஊர் போகுதே என்று. அதுதான் படத்தின் ஆன்மா.
கருத்த கண்ணி-படத்தின் உண்மையான கதை நாயகி. இயக்குநரின் மொழியை பேசுபவள். பட்த்தின் துவக்கத்தில் மொத்த பட்த்திலும் பேரழகியாக பெருமகிழ்வானவளாக அறிமுகமாகி பட்த்தின் இடைவேளையில் ஒரு இருண்மைத்தன்மையை முகத்தில் காட்டி படம் நகர நகர மெய்யழகு அழிந்து கடைசியில் மரித்தும் போகிற அவளது பாத்திரம் இயக்குநர் சொல்வதை சொல்லிச் செல்கிறது.
பாலா தன் முந்தைய எல்லா படங்களிலும் அய்யர்கள் சினிமாக்காரர்கள் போன்றோரை மிகவும் கேவலமாக சித்தரித்து கிண்டலடித்தே பழக்கப்பட்டவர். இந்த முறை மதம் மாற்றும் கிறிஸ்தவர்களை சகிக்கமுடியாத வகையில் கிண்டலடித்து இருக்கிறார்.
வால்பாறையில் ஒரு வருடம் வாழ்த்திருக்கிறேன். அடகுக் கடைகளே அதிகம். கூலி தரும் நாளில் கந்து வட்டிக்காரர்கள்  தனிவரிசையில் நின்று வாங்கிப் போவார்கள். பலப்பல கட்சிகள் உள்ள இந்தக் காலத்திலும் இதுதான் நிலை. அடிமைத்தனம் என்பது நம் ரத்த்தில் ஊறியது. அது பயம், விசுவாசம், பாதுகாப்பு என பல வடிவங்களில் காலங்காலமாக வாழ்ந்து வருகிறது. வேலூர்க்கோட்டையில் முதல் முதலாக நுழையும் போது ஒரு வெள்ளைக்கார தளபதி நினைத்திருக்கிறார்- இங்குள்ள மக்கள் ஆளுக்கு ஒரு கல்லை எறிந்தால் கூட நம் சின்னப் படை சின்னா பின்னமாகி விடும் என்று. ஆனால் அப்படி நடக்கவில்லை. ஆயிரம் லட்சம் என பல எண்ணிக்கைகளில் சகோதரர்கள் கொல்லப்பட்ட போது சினிமா கிரிக்கெட் என அந்தக் குறையும் இல்லாமல் அநேகம் பேர் இருந்தோம். அப்படியான வழக்கமான் ஒரு தமிழ்ச்சமூகம் அங்கே ஆனைமலையில் பட்ட துன்பங்களை பதிவு செய்திருக்கும் வகையில் தமிழின் மிக முக்கியமான படங்களின் வரிசையில் பரதேசியும் சேர்கிறது. பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து முதல் முறையாக ஒரு மக்களுக்கான படம் வந்திருக்கிறது. இதை பாலு மகேந்திராவே விரும்பியிருக்க மாட்டார்.
மிக நீண்ட பதிவாக எழுத வேண்டியது. நேர நெருக்கடி காரணமாக முடிக்க வேண்டி உள்ளது.
கலை-அறிமுகம் அருமை. என்ன ஒரு நேர்த்தி என்ன ஒரு மெனக்கெடல்? அட்டகாசம்.
செழியன் பாலாவின் கண்களை கடன் வாங்கி ஒளிப்பதிவு செய்திருப்பார் போல. பட்த்தின் ஆன்மாவை உயிரூட்டிய ரத்த ஓட்டமாக இவரின் உழைப்பு. வாழ்த்துக்கள் தோழர்.
இளையராஜா இல்லாவிட்டால் என்ன? எட்டுத்திக்கும் சென்று ஈட்டி வந்ததை ஜி.வி பிரகாஷ் கொட்டியிருக்கிறார்.
நியாயம்மாரே என ராசா அரற்றும் அந்த இறுதிக்காட்சியில் புதிய அடிமைகள் வரும் வரிசையில் தன் துணையையும் மகனையும் பார்க்க நேர்ந்தது எப்பேர்ப்பட்ட குரூரம்? அந்தச் சிறுவன் என் மகன் சாயலில் மகன் கலரில் இருக்கிறான் என்ற நினைப்பே என்னை கொல்கிறது. அப்படியான சூழலில் வாழ நேர்ந்திருக்கும் ஒருவனுக்கு அந்தக் கொடூரம் எப்படி இருந்திருக்கும்? அய்யோ....
அடக்குமுறைகளின், அடிமைத்தளைகளின் படி நிலை; பெண் சமத்துவம்; மதத்தின் பேராலான சுரண்டல், காதல் என பலதரப்பட்ட தளங்களின் வழியே பயணித்து யதார்த்தத்தின் குரூரம் முகத்தில் அறையும் படி முடியும் பாலாவின் இந்த முதல் படத்தை பார்ப்பது இதுவே கடைசி. 

images from : http://chennai365.com/events/director-balas-paradesi-audio-launch-invite-stills/


புதன், 6 மார்ச், 2013

சாவேஸ்-அடிப்படைவாதிகளின் அங்கலாய்ப்பு

விடுதலைப்புலிகளை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது; ஈழ விடுதலையை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது; ராஜபக்‌ஷேவை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது இவை எல்லாம் தமிழர்களுக்கு ஒற்றை நோக்கில் இருக்கலாம். சர்வதேச கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் பலவித பரிமாணங்களை கொண்டவை. ஒருவர் ஆதரிக்கிறார் எதிர்க்கிறார் என்பதற்காக அவரின் மற்ற பங்களிப்புகளை மறப்பது கண்மூடித்தனம். மார்கண்டேய கட்ஜு பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்த முடியாது என்றதற்கும் இன்று பலரும் சாவேஸ் ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவளித்ததை சுட்டிக்காட்சி தம்மை அறவாதிகள் போல ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுவதற்கும் வித்யாசம் நிறைய உள்ளது. பால் தாக்கரே அப்பட்டமான அடிப்படை வாதி. சாவேஸ் அப்படியல்ல. ஒரு தூய்மையான இவர்கள் அளவுகோல்களின் படி முழுமையான போராளி அல்லவெனினும் லத்தீன் அமேரிக்க நாடுகளின் சுயமரியாதை மக்களின் நல்வாழ்வு குறித்த அவரின் பங்களிப்புகளை ஒருவரும் வசதிக்காக கூட மறக்கக்கூடாத ஒன்று. சுபாஷ் சந்திரபோஸ் ஹிட்லர் சந்திப்புக்காக நேதாஜியையும் இந்து அபிமானத்துக்காக பாரதியையும் விலக்கி வைத்து பேசுவது சாவேஸை புறக்கணிப்பது இவை எல்லாம் அடிப்ப்டைவாதத்தின் ஆரம்ப கட்ட அறிகுறிகள். சந்தர்ப்பவாதம் செய்கிறார் என்று திருமாவளவனை கேலி செய்பவர்களையும் நான் இந்தப் பட்டியலில் வைக்கிறேன். இப்படியானவர்களிடம் மிகுந்த எச்சரிக்கை தேவை. சமூகத்தின் நோய்களாக மாறும் தன்மை கொண்டவர்கள்.