திங்கள், 11 ஜூலை, 2011

மதுபான பொருட்களின் விலையேற்றம்: ஒழுக்கக்கேடான தமிழக அரசு





ரொம்ப நாட்களாக எதுவும் எழுதவில்லை. எதில் இருந்து ஆரம்பிப்பது என்ற சிறு தயக்கம். அது நேற்று தொலைக்காட்சியில் ஒரு செய்தியை கேட்டபோது மறைந்து விட்டது. மதுபானங்களின் விலையை முன்னறிவிப்பின்றி அரசு உயர்த்தியுள்ளது. குவாட்டருக்கு ஐந்து ஆFப்புக்கு பத்து fபுல்லுக்கு இருபது என அநியாய விலை உயர்வு. அதுவும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி. சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை ஊழியர்களே மூடிவிட்டதாக சன் நியூஸ் சொன்னது. காரணம் மதியம் விலையுயர்த்தி விட்டு காலை விற்ற சரக்குக்கும் அதே விலைப்பட்டியல் படி பணம் கேட்டார்களாம் அதிகாரிகள்.

இது மட்டும் இல்லை. இது மாதிரியான எல்லா விலை உயர்வுகளுக்கும் இவர்கள் சொல்லும் அடிப்படை காரணம் பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம். பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலையுயர்வை காரணம் காட்டி விலையேற்றி வந்தன மைய அரசுகள். ஆனால் இப்போதை மைய அரசு ஒரு படி மேலே போய் இனி பெட்ரோலிய பொருட்களின் விலையை நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம் என நாயை அவிழ்த்து விட்டுவிட்டது. விளைவு கச்சா எண்ணெயின் விலை குறைவு பற்றிய கவலை எதுவும் இல்லாமல் பலமுறை விலையேற்றம் நடந்துவருகிறது.
இது மாதிரியான மக்கள் விரோத அரசுகள் இப்படித்தான் செய்யும். அதிலும் முந்தைய மற்றும் இன்னாள் தமிழக அரசுகள் இன்னும் கொடூரமானவை. மிகவும் சல்லித்தனமானவை. மாநகரப் பேருந்துகளில் அறிவிக்கப்படாத கட்டணக் கொள்ளை நடத்துகின்றன. எங்கும் வெள்ளைப்பலகை பேருந்துகளே இல்லை (இவற்றில் குறைந்த பட்ச கட்டணம் ரூபாய் ரெண்டு). ஏழை மக்கள் அதிகம் புழங்கும் எல்லாப் பகுதிகளிலும் சொகுசுப் பேருந்துகளும் M வரிசைப்பேருந்துகளும் அலைந்து மக்களைக் கொள்ளையடித்து வருகின்றன. இதனினும் மேலாக கையில் சீட்டு கிழித்து கொடுக்கும் நடத்துனர்கள் புதியவர்களிடம் விருப்பம் போல விலையேற்றி கொடுப்பதை நானே அனுபவித்திருக்கிறேன். மெசினில் கொடுக்கும் டிக்கெட்டில் ஊர் பெயர் இருக்கும். கையில் கொடுப்பதில் இருக்காது. இதனால் மூன்று ரூபாய் பயணத்துக்கு நான்கு ரூபாய் டிக்கெட் கொடுப்பதெல்லாம் நடக்கிறது. இது கண்டிப்பாக நடத்துனர்கள் செய்யும் திருட்டு அல்ல. அவர்களின் மேல் திணிக்கப் படும் அதிகாரிகளின் லாபவெறி. இது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே உரித்தான குணம் .
சேவைத்துறையில் உள்ள அரசு நிறுவன்ங்கள் ஏன் லாபம் சம்பாதிக்க வேண்டும்? அன்றாடக் கூலிகளிடம் ஐம்பது பைசா கொள்ளையடித்து அல்லது பிச்சை எடுத்துத்தான் இந்த அரசை நடத்த வேண்டுமா? டாஸ்மாக் ஊழியர்களும் இது போல லாபம் சம்பாதிக்க நிர்பந்திக்கப் படுபவர்கள் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை (அவர்கள் அரசிடம் திருடுவதும் உண்டு/குடிமகன்களை ஏமாற்றுபவர்களும் உண்டு.). டாஸ்மாக் பார்களில் ஒரு தண்ணீர்ப்பொட்டலத்தின் விலையென்ன என்ரு விசாரித்துப் பாருங்கள். பிரபஞ்சன், சாரு நிவேதிதா அ. மார்க்ஸ் முதலானோர் டாஸ்மாக் பார்களின் சுகாதாரக் கேடு பற்றியும் இழி நிலை பற்றியும் எழுதியும் பேசியும் வருகிறார்கள். வரவேற்கத்தக்கது. குடிகாரர்கள் என்று இழித்துப் பேசப்படும் அவர்கள் தான் இந்த அரசு இயந்திரத்தின் சக்கரங்களை ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு இப்படி சரக்கு விற்று சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அதன் லாபவெறி அப்படி செய்யத்தூண்டுகிறது.
மதுபான பொருட்களின் விலையேற்றம் வெறும் குடிகாரர்களை மட்டும் பாதிப்பதல்ல. அது நல்லறம் பேண வேண்டிய அரசின் குணக்கேட்டின் மற்றுமொரு எடுத்துக்காட்டு.

16 கருத்துகள்:

Jayadev Das சொன்னது…

\\குடிகாரர்கள் என்று இழித்துப் பேசப்படும் அவர்கள் தான் இந்த அரசு இயந்திரத்தின் சக்கரங்களை ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். \\ இதை பரிதாபம் என்று சொல்வதா, கேவலம் என்று சொல்வதா? மதுவை விற்பதே ஒழுக்கக் கேடான செயல். விலையை ஏற்றுவதால் அல்ல!!

குண்டுசட்டி சொன்னது…

\\"மதியம் விலையுயர்த்தி விட்டு காலை விற்ற சரக்குக்கும் அதே விலைப்பட்டியல் படி பணம் கேட்டார்களாம் அதிகாரிகள்."\\

-
அதிகாரிகள் காலையில் சரக்கு அடித்துவிட்டு மதியம் மப்பு தெளிந்த பிறகு விலைப்பட்டியல் வெளியீடுயிருபார்கள்!!!

\\"சேவைத்துறையில் உள்ள அரசு நிறுவன்ங்கள் ஏன் லாபம் சம்பாதிக்க வேண்டும்? அன்றாடக் கூலிகளிடம் ஐம்பது பைசா கொள்ளையடித்து அல்லது பிச்சை எடுத்துத்தான் இந்த அரசை நடத்த வேண்டுமா?"\\
-
நாளைய அரசு, 20 சதவீத இட ஒதுக்கீடு சலுகைகள் குடிகாரர்களின் வாரிசுக்கு வழங்கலாம்

எல் கே சொன்னது…

இது லாபம் சம்பாதிக்க அல்ல .. அரசு சேவை செய்யணும் அதுக்கு காசு எங்க இருந்து வரும்...

Jayaprakashvel சொன்னது…

எஸ். கே

அரசுக்கு வருவாய் ஈட்ட பல வழிகள் உள்ளன. அரசு மணல் திருடி விற்கிறது. அரசு ஏரிகளை பட்டா போட்டு பணக்காரர்களுக்கு கொடுக்கிறது.

நாட்டில் எவ்வளவு வரி ஏய்ப்பு நடக்கிறது? எவ்வளவு ஊழல் நடக்கிறது? வரிகள் அரசுக்கு வரவேண்டிய கட்டணங்கள் ஒழுங்காக வந்தாலே நாட்டை நல்லபடியாக நடத்திப் போகலாம்.

Jayaprakashvel சொன்னது…

@@
மதுவை விற்பதே ஒழுக்கக் கேடான செயல்.
@@

மது குடிப்பதும் விற்பதும் தயாரிப்பதும் ஒழுக்கக் கேடு அல்ல. அப்படியான ஒரு போலியான பொதுபிம்பம் இங்கே இருக்கிறது. நாள் தவறாமல் சீரியல் பார்ப்பது போலத்தான் குடிப்பழக்கமும். சிலர் அதை கொண்டாடுகிறார்கள். சிலர் அதில் ஆறுதல் தேடுகிறார்கள். சிலர் அதை அனுபவிக்கிறார்கள். குடியை எந்த அளவுக்கு வைத்துக் கொல்வது என்பது ஒவ்வொரு தனி நபரின் நாகரீக வரம்பைப் பொறுத்தது. அதை பொதுவாக கெட்ட பழக்கம் என்று சொல்வது ஏற்பதற்கில்லை. செல்போன் போலத்தான் குடிப்பழக்கமும். ஆளைப் பொறுத்தது.

Jayadev Das சொன்னது…

\\அப்படியான ஒரு போலியான பொதுபிம்பம் இங்கே இருக்கிறது.\\ ரொம்ப சாமர்த்தியமான பதில்!! அது சரி, "குடி குடியைக் கெடுக்கும்"-னு எதுக்கு சார் போர்டு வைக்கிறாங்க?

Techie Sandilyan சொன்னது…

I completely disaggree with your post.

Techie Sandilyan சொன்னது…

I completely disagree with your post.. This Liquor Addicts are not going to stop drinking nor they are going to worry about the mere price hike..

Jayaprakashvel சொன்னது…

சில்லறையாக கொடுக்கவும் என்று பேருந்துகளில் எழுதிப் போட்டிருப்பது போலத்தான் இதுவும். ஒரு சம்பிரதாயம். அரசுக்கும் தெரியும். இவர்க்ள் குடிக்காவிட்டால் அரசின் குடி கெட்டுவிடும் என்று.

Jayaprakashvel சொன்னது…

@@@
I completely disaggree with your post.
@@@
I am sorry. U didnt received my point or I failed to make u understand. I didnt say that this price hike will affect drinkers only. I object the atrocity of the government

மதுரை சரவணன் சொன்னது…

puthusaa irukku seithi.. pakirvukku vaalththukkal

மதுரை சரவணன் சொன்னது…

puthusaa irukku seithi.. pakirvukku vaalththukkal

bandhu சொன்னது…

நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும், மது பானங்கள் மற்றும் சிகரெட் விலை உயர்வை எதிர்த்து பெரிய அளவில் எப்போதும் எதிர்ப்பு வராது. அவைகளுக்கு உள்ள Social Taboo வே இதற்கு காரணம். இது உலகெங்கும் உள்ள கதை தான்!

அருள் சொன்னது…

bandhu கூறியது...

// //மது பானங்கள் மற்றும் சிகரெட் விலை உயர்வை எதிர்த்து பெரிய அளவில் எப்போதும் எதிர்ப்பு வராது. அவைகளுக்கு உள்ள Social Taboo வே இதற்கு காரணம். இது உலகெங்கும் உள்ள கதை தான்!// //

பதிவும், அதற்கான பின்னூட்டமும் தவறான கருத்தை முன்வைக்கின்றன.

புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபானங்களின் விலையை உயர்த்துவதால் ஒரு கேடும் இல்லை - மக்களின் உடல் நலத்தை காப்பாற்றுதல், அரசுக்கு வருவாய் என இருவகைகளிலும் நன்மைதான். இதனால், தீமை என்று எதுவுமே இல்லை.

ஏழைகளின் பணம் பறிபோகிறது என்பதும் ஆதாரமற்ற கருத்து. குடிகாரர்கள் குடிக்கும் மதுவின் அளவுதான் உண்மையில் குறையும். இதனால் ஏழைகளுக்கு நன்மைதான். பணம் அதிகம் உள்ளவர்கள்தான் அதிகம் குடிப்பார்கள்.

Jayaprakashvel சொன்னது…

@@@பதிவும், அதற்கான பின்னூட்டமும் தவறான கருத்தை முன்வைக்கின்றன. @@@

ஒவ்வொருவருக்கும் கருத்து வேறுபடலாம். நான் எழுதியத்ன சாரம் அரசு இதை விற்பதே தவறு என்பதும் மேலும் சொல்லாமல் கொள்ளாமல் விலை ஏற்றுவதும் மற்றும் தவறு என்பது. மேலும் நான் சொன்ன பேருந்து கட்டண உதாரனம் நீங்கள் கணக்கில் எடுத்துப் பாருங்கள். மக்களிடம் இப்படி எட்டணா கொள்ளையடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு என்ன வந்தது?

ஏழை மக்களிடம் தான் அரசு பணத்தைப் பிடுங்கும். எத்தனை விவசாயிகள் நகையை நிலத்தை கூட்டுறவு வங்கிகளிலேயே அடமானம் வைத்து மீட்க முடியாமல் ஏலத்தில் இழந்து விட்டு வாடுகிறார்கள் தெரியுமா? அதுவும் தமிழ்னாட்டில். சமூகத்தில் சுரண்டிப்பிழப்பதையே தொழிலாகக் கொண்ட எத்தனை தொழில் முனைவோர்கள் முதலாளிகள் அரசு வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருடி தின்றுவிட்டு நட்ட கணக்கு காட்டி ஏமாற்றுகிறார்கள் தெரியுமா?

ஒரு சாமான்யன் ஒரு நாள் தாமதமாக மின்கட்டனம் அல்லது தொலைபேசி கட்டனம் செலுத்தினால் இணைப்பு பிடுங்கப் படுகிரது. அரசியல்வாதிகளுக்கும் பணக்காரர்களுக்கும் இதே நடைமுறைதானா? யோசிக்கவும்.

Jayaprakashvel சொன்னது…

குடிப்பது தவறு அல்ல. குடித்துவிட்டும் குடிப்பதற்கும் என்ன செய்கிறோம் என்பதில் தான் உள்ளது தப்பும் சரியும். அரசு குடி குடியை கெடுக்கும் என்று போட்டு விட்டு சரக்கு விக்க வேண்டிய கட்டாயம் என்ன? லாப வெறிதான். அதைத்தான் என் பதிவில் எழுதியுள்ளேன். குடி குடியை கெடுக்கும் என்று அரசுக்கு தெரிந்தால் மக்கள் நலனுக்காக அதை விற்காமல் தான் இருக்கட்டுமே? வெறும் பணக்காரர்கள் மட்டும் உயர்தர விடுதிகளில் குடித்து விட்டு போகட்டும் என்று விட்டு விடலாமே? ஏன் அரசு கீழ்மட்டத்துக்கு வந்து சரக்கு விக்கனும்? பனம் சம்பாதிக்கும் குயுக்திதானே ஒழிய வேறொன்றும் இல்லை.

கேரளாவில் காலங்காலமாக அயல்னாட்டு மது ரகங்கள், சாராயம், கள்ளு இந்த மூன்றும் விற்று வருகிறார்கள். மக்கள் அங்கே கெட்டொழிந்தா போய்விட்டார்கள். கேரளாவை உயர்த்தி எழுதவில்லை. இங்கே ஒரு ஒப்புமை பாண்ணிப் பாருங்கள். கள்ளு சாராயக் கடைகளில் எளிய வறிய மக்கள் குடிக்கப் போவார்கள். பத்தி இருபது ரூபாயில் முடிக்க வேண்டியதை இப்பொதைய அரசுகளின் லாப வெறி காரணாமாகெ எழுபது என்பது செலவு செய்கிறார்கள். இதுதான் அரசின் யோக்யதையா? அங்கே கள்ளும் சாராயமும் விஸ்கியும் ஒரே ஊரில் விற்கும் போது இங்கே விற்றால் என்ன?