செவ்வாய், 24 ஜூன், 2008

தசாவதாரம்

கமல்ஹாசன் பத்து வேடங்கள் செய்ய நினைத்தது தவறில்லை. ஆனால் பத்து முகமூடிகள் தேவையில்லை. முகமூடிக்குள் மறைந்திருக்கும் முகத்தால் என்ன நடிப்பை காட்டிவிட முடியும்? ஒப்பனை செய்வதோடு நின்று இருக்கலாம். நவராத்திரியில் சிவாஜி ஒன்பது வேடம் போட்டார். நடிப்பில் வித்யாசம் காடட்டினார். கமல் அது போலக் கூட செய்யவில்லை. அபத்தமான காமெடிகள். லாகிக் இல்லாத காட்சி அமைப்புகள். இரண்டு நாடுகளின் தலைவர்கள் தலையிடும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்ப்பட்ட ஒரு வழக்கில் நான்கே நான்கு போலீஸ்காரர்கள் இரண்டு டம்மி எப் பி இ. கொடுமை. கதாநாயகிக்கு கடைசி வரை பெருமாள்தான் பெரிது. வைரஸ் பற்றிய பதைப்பு துளியும் இல்லை. கபிலன் பாவம். கவிதை வருமளவு நடிப்பு வரவில்லை. வலிந்து ரெண்டு கவிதை வேறு. படத்தில் நல்ல விஷயம் டூயட் இல்லை. கமலின் குரல் மீண்டும் இனிமையாகி விட்டது. இசை பூமியை ஆளட்டும்.

வெள்ளி, 6 ஜூன், 2008

உத்தப்புரம்

கீற்று என்ற இணைய தளத்தின் உதவியால் http://www.keetru.com/ உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் (their usage. I have some concerns on this term) தொடர்பாக தொடர்ந்து படிக்க முடிந்தது. அதைப்பற்றிய வினைகள் எதிர்வினைகள் எல்லாம் தொடர்ந்து வந்த போது வேறொரு சமயத்தில் மனுஷ்யபுத்திரன் வேறொரு விஷயம் சம்பந்தமாக தன் வலைப்பதிவில் எழுதியது நினைவுக்கு வந்தது. அந்தப் பதிவு இன்று இந்த நிகழ்வுக்கும் பொருந்தும் என்று நான் கருதுகிறேன். அதை இத்துடன் தந்து உள்ளேன். அவர்எழுதியது இந்த நிகழ்வைப்ப்பற்றி அல்ல என்பதை அழுத்தமாய்ச்சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.

http://uyirmmai.blogspot.com/search?updated-min=2005-01-01T00%3A00%3A00-08%3A00&updated-max=2006-01-01T00%3A00%3A00-08%3A00&max-results=34

மொழிப் போராட்டம், வெண்மணிப் படுகொலை, நெருக்கடி நிலை, தர்மபுரியில் நக்சல்பாரி இளைஞர்கள் மீது எம்.ஜி.ஆர் ஆட்சி நடத்திய சட்டவிரோத கொலைகள், சாதிக் கலவரங்கள், தலித்துகள் மீதான படுகொலைகள், இந்தியா முழுக்க இந்துத்துவ சக்திகள் சிறுபான்மையினர் மீது நடத்திவரும் தாக்குதல்கள், கடந்த சில ஆண்டுகளில் ஜெயலலிதா அரசு ஆடிய பல்வேறு கோரத் தாண்டவங்கள் என எத்தனையோ பிரச்சினைகளில் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் ஒரு வாக்கியம் கூட எழுதியதில்லை. எந்த அரங்கிலும் இதைப் பற்றி மூச்சுவிட்டதில்லை. இதை பற்றியெல்லாம் பேசாமல் இருப்பதற்கு ஒருவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால் திடீரென பொங்கி எழும் சமூக ஆவேசம்தான் இங்கே பிரச்சினையாகிறது. இந்த ஆவேசத்திற்கு பின்னிருப்பது ஒரு சமூக பிரச்சினையா அல்லது சமூகத்தில் தன்னுடைய இடம் குறித்த பிரச்சினையா?

உங்களுக்கு என்ன தோன்றுகிறது என பதிவு செய்யுங்கள்.

வருகை

தொலைதூர வளைவில்
உன் வருகை
தாள் தேடும் பேனா.