வியாழன், 21 ஜனவரி, 2010

பாதி கிழிக்கப்பட்ட
நாட்காட்டிக்கு
இரும்புப்பற்கள் இருக்குமென்று
ஐந்து வயதில் பிரகதீஷ்வரனுக்குத் தெரியாது.

விளையாடிய அவன் விரல்களை
அவை கிழித்து வைக்க...
கோபம் வந்தவனாய்
மூன்று பற்களுக்கும் ஒரே அடியென
வைத்தவனின்
கை ரத்தத்தில்
மீதமிருந்த நாள்கள் நனைந்தன.

கழிந்து போகாமலே
இருந்திருக்கக் கூடாதா
கடந்து போன அந்த நாட்கள்?

புலம்பிக் கொட்ட
எல்லோருக்கும் கதைகள் உண்டு.
சலிக்காமல் கேட்கும்
செவிகள் சிலருக்கு மட்டுமே.