செவ்வாய், 29 செப்டம்பர், 2009

நான்கு வழிச்சாலைகள்


இடம் : சித்தலவாய்

இப்போதெல்லாம் நாட்டின் பல இடங்களில் சாலை போட்டுக்கொண்டும் இருக்கின்ற சாலைகளை அகலப்படுத்தியும் வருகிறார்கள். சாலைகள் மேம்பாடு தேவையான ஒன்றுதான். ஆனாலும் இது போன்ற திட்டங்களினால் வயதான மரங்கள் பழைமையான கட்டடங்கள் எளிய மக்களின் குடியிருப்புகள் அழிக்கப்படுகின்றன. சில மாதங்கள் முன்பு திருச்சி கரூர் சாலையில் போன பொது இந்த படங்களை எடுத்தேன். அந்த சாலை நெடுகிலும் நான்கு வழிச்சாலைகள் பணிக்காக மரங்களும் வீடுகளும் அகற்றப்பட்டு வருகின்றன. போர் நடக்கும் பகுதி போல உள்ளது. மிகவும் வருத்தமான விஷயம் தான் என்றாலும் முன்னேற்றப் பணிகளுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்துதான் ஆகவேண்டும்.

திங்கள், 28 செப்டம்பர், 2009

வேடிக்கை பார்த்தவன்

இங்கே எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது. வெறும் எழுத்து என்ன செய்துவிட முடியும் என்ற அவநம்பிக்கை தான் அதற்கு காரணம். ஈழத்தில் என் சகோதரர்கள் சாவுடன் போராடியபோது இங்கே நான் என் வேலைக்காக போராடினேன். அவர்களுக்காக எதுவும் செய்யத்துணியாமல் செய்திகளை கேட்டுக் கொண்டிருந்தேன். மிகப்பல காலமாக என்னுள் ஒரு கனவு இருந்தது. மலரும் தமிழ் ஈழத்தில் ஒரு எளிய ஆசிரியராக கொஞ்ச காலமேனும் வேலை செய்ய வேண்டும் என்று. இப்போது மலரும் தமிழ் ஈழத்தில் கால் வைக்க எனக்கு அருகதை உள்ளதா என் தெரியவில்லை. என்றாலும் தமிழ் ஈழம் மலரட்டும். என் மக்கள் அங்கே சமாதானத்துடனும் சுதந்திரத்துடனும் மகிழ்வாய் வாழட்டும் .