வியாழன், 12 ஜனவரி, 2012

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

கரங்களை இழந்த ஈழத்துக் குழந்தைகளுக்கும்
இனிக்கட்டும் செங்கரும்பு.

கணவன்களை இழந்த ஈழத்துப் பெண்களுக்கும்
பொழியட்டும் புது மஞ்சள்

வயல்களை இழந்த ஈழத்து விவசாயிகளுக்கும்
பொங்கட்டும் புத்தரிசி

உள்ளோருக்கும், இல்லாருக்கும் எல்லாருக்கும் பொதுவென
முகிழட்டும் தைப்பொங்கல்.

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.