சனி, 26 ஜூன், 2010

இந்திய கெளபாய் உலகம்


சிம்புதேவன் இயக்கியிருக்கும் இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் படத்தின் விளம்பரத்தில் இந்திய கெளபாய் உலகம் என்று வருகிறது. இந்த ரீதியிலான முந்தைய படங்கள் ஒன்றிரண்டைத்தவிர அதிகம் பார்த்ததில்லை. சமீபத்தில் குயிக் கன் முருகன் என்ற படம் வந்தது. அதையும் பார்க்கவில்லை. இந்த கெளபாய் உலகம் என்ற வரியை ஒட்டியே இந்தப் பதிவு.

சிம்புதேவனின் படத்தை- மிகவும் மெனக்கெட்டிருப்பார்கள் என்ற காரணத்தால், குறைத்துச் சொல்ல உறுத்தலாக உள்ளது. ஆங்கிலத்தில் வந்த பெரும்பாலான கெளபாய் படங்களை பார்த்திருக்கிறேன். உடைகள், இடங்கள், சில உத்திகள் என அதை பிரதிபலிப்பது போல வந்திருக்கும் சிம்பு தேவனது படம் மேற்சொன்னவற்றால் மட்டும் கெளபாய் படமாக ஆகிவிட முடியாது. கெளபாய் படங்களில் வருகிற ஒரு தெனாவெட்டான, ரொமான்டிக்கான அதிரடிகள் இந்தப் படத்தில் இல்லை. காமெடியாக சொல்ல கெளபாய் படம் எடுத்திருக்க தேவை இல்லை. ஆனால் படத்தில் வருகிற இடங்கள் அவர்களின் உடைகள், உபயோகிக்கும் பொருட்கள் செவ்விந்தியர்கள் என மிகுந்த உழைப்பை படத்திற்காக செலவு செய்திருக்கிறார்கள். லாரன்ஸ் ஸ்டைலானவர்தான் என்றாலும் அவரிடம் இருக்கிற ஒரு சிணுங்கல்தனமான பேச்சுத்தொணி இந்தப் படத்துக்கு பெரிய குறை. படத்தில் விஜய் அல்லது பிரபு தேவா நடித்து இருந்தால் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்.


கொஞ்ச நாட்களுக்கு முன்பு பண்டி சரோஜ்குமார் இயக்கி வெளிவந்த போர்க்களம் என்ற படத்தை இந்திய கெளபாய் படமாக சொல்லலாம் என தோன்றுகிறது. கெளபாய் பட நாயகர்களுக்கேயான அசிரத்தையான உடல்மொழி, அந்தப் படத்தில் நாயகனுக்கு. கெளபாய் படங்களைப்போலவே மிக கொஞ்சமான நடிகர்கள். எல்லாவற்றிக்கும் மேலாக இந்தப் படத்தின் கதை. மிகவும் ஸ்டைலிஷான படமாக்கம். படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. இயக்குனர் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்.

இந்த இரண்டு படங்களையும் எனது ஊரின் அருகிலுள்ள தொட்டியத்தில் இரு வேறு திரையரங்குகளில் பார்த்தேன். ஊரில் படம் பார்க்க போகும் போது எனக்கு துணையாய் வர இரண்டு நண்பர்கள் உண்டு. அதில் ஒருவன் படம் பார்ப்பான். இன்னொருவன் கடின உழைப்பாளி. அதனால் உடன் வந்து எப்போதும் தூங்குவான். இந்த இரண்டு படங்களின் போதும் இருவரும் தூங்கி விட்டனர். இந்த இரு படங்களையும் பார்த்த அரங்குகள் மிக மோசமான தரத்திலானவை. போர்க்களம் படம் மிக மிக இருட்டாகவே இருந்தது. படமே அப்படியா திரை அப்படியா என தெரியவில்லை.

4 கருத்துகள்:

Swengnr சொன்னது…

நல்ல ஒரு பட்டிமன்றம் நடத்தி உள்ளீர்கள்.நன்றி

Jayaprakashvel சொன்னது…

Thanks for the comments

துரோகி சொன்னது…

போர்க்களம் எனக்கும் பிடித்த படம் தான், சில மாற்று கருத்துகள் உண்டு, படத்தின் Lighting ஒரு விதமான black - ல இருக்கும்,stylish making ஆனா,படம்தான் ஓடல்ல!

Jayaprakashvel சொன்னது…

ஒடாவிட்டாலும் உங்களுக்கும் எனக்கும் பிடித்ததே. உண்மையில் நல்ல படம்.