செவ்வாய், 8 ஜூன், 2010

இன்று

எத்தனை அடிகள் குழிகள் வெட்டினோம்

என்ற கணக்கை மறந்து விட்டார்கள்.


நாளைய உறக்கம் எந்த நிலத்திலோ

என்ற கவலையை மறந்து விட்டார்கள்.


பகலெல்லாம் பட்ட வாதைகளை

இரவின் மடியில் இறக்கிவைத்துவிட்டார்கள்.


சுந்தரத்தெலுங்கினில் பாட்டிசைத்து

தகரச்சட்டிகளின் தாளமிணைத்து

வீடுகளற்ற

இந்தப் புறநகரப்பெருநிலத்தை-

இசையால் நனைத்து

சொந்த ஊருக்கு அவர்கள் நீந்திப்போகிறார்கள்.

9 கருத்துகள்:

நளினி சங்கர் சொன்னது…

really touched jp...
will put comment on this in tamil soon...

நளினி சங்கர் சொன்னது…

why there is no title for this?

நளினி சங்கர் சொன்னது…

//சுந்தரத்தெலுங்கினில் பாட்டிசைத்து… //

எடுத்தாளுதல் ஒரு கலை.
இங்கு கச்சிதமா பொருந்தி இருக்கு ஜேபி.

//வீடுகளற்ற இந்தப் புறநகரப்பெருநிலத்தை- இசையால் நனைத்து சொந்த ஊருக்கு அவர்கள் நீந்திப்போகிறார்கள்.//

எதற்காக இவ்வளவு தூரம் வந்து இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அவங்களுடைய ஒரு நாள் கூலி எவ்வளவு இருக்கும். என தொடர்ச்சியாக அவர்களைப்பற்றிய கேள்விகள் மனதில் எழுந்தவாறே உள்ளன.

அவ்வளவு உழைப்புக்குப் பிறகும் அவர்கள் தங்கியிருக்கும் வீதியை அடைந்ததும் அடுப்பினை பற்றவைத்து சமையல் செய்து கொண்டு இருப்பதையும் நான் பலமுறை கண்டிருக்கிறேன். அப்படி ஒரு சமையலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு ஒலித்துக்கொண்டிருந்த ஒரு தெலுங்குப் பாடலே உங்களை இந்தக்கவிதையை எழுதச் சொல்லியிருக்குமோ!

Jayaprakashvel சொன்னது…

சங்கர்,
ஆளே இல்லாத இடத்துல யாருக்க்குடா டீ ஆத்தறன்னு என்னை யாரும் கேட்க முடியாதபடி நீங்க என் கவிதைகளை படிக்கறீங்க.
என் வசிப்பிடம் அருகே சில ஆந்திர மானிலத்து கூலித்தொழிலாளிகள் கொஞ்ச நாளாக தங்கி இருக்கிறார்கள். இந்தக் கவிதையை எழுதிய அன்று இரவு சுமார் பத்து இருக்கும். அறைக்குள் செல்போன் சிக்னல் சரியாக இல்லாததால் மாடிக்குபோய் பேசினேன். அப்போது சிலர் பாடுகிறது காதில் விழுந்தது. கவனித்துப்பார்த்ததில் அந்த தொழிலாளிகள் பாடிக்கொன்டு இருந்தார்கள்.தெலுங்கில். மிக சத்தமாக. கவிதையின் கதை இதுதான்.
மிகவும் அருமையான தலைப்பாக இருக்க வேண்டும் என்பதால் இன்னும் வைக்கவில்லை. நல்லதாக தோணும் போது எழுதனும். இன்னும் இந்தக் கவிதை அவர்கள் குடும்பத்தோடு இருந்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறதா என தெரியவில்லை. உண்மையில் சாலை ஓஅர குழிகள் பறிக்கும் அவர்கள் குடும்பத்தோடு சின்னச்சின்ன குழந்தைகளோடு தான் வேலை பார்க்கிறரள். நீங்கல் சொன்னது போல மாலையில் விறகு கொண்டு வெளியில் அடுப்பு மூட்டி சமைக்கிறார்கள். இதே போல வாழ்க்கையை தமிழர்கள் குறிப்பாக பெரம்பலூர் அரியலுர் மக்கள் கேரளாவில் வாழ்ந்து வருகிறார்கள். இதுபோல தினக்கூலிகள் கொத்தடிமைகள் போல எங்கெங்கும் உண்டு. சில மாதங்களுக்கு முன்பு பீஹார் மானில தொழிலாளிகல் சுமார் பத்து பேர் நாமக்கல் அருகே ஒரு தொழிற்சாலை தீ விபத்தில் இறந்தார்கள். அனாமத்தாக இதுபோல வாழ்பவர்கள் நிறைய. மத்திய தர உணவகங்களில் நேபாள பூட்டனிய இளைஞ்னர்கல் இப்படி இருக்கிறார்கள். விரைவில் நெடிய கட்டுரை ஒண்ரை இதை ஒட்டி எழுத உள்ளேன்.

நளினி சங்கர் சொன்னது…

நாம் ஏற்கனவே இவர்களைப் பற்றி பேசிய நினைவு இருக்கின்றது ஜேபி. உங்கள் கட்டுரையை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறேன்.

வெளிமாநிலத்திற்கு வந்து தெருவில் வசிக்கப் பழகிபோய்விட்ட இவர்களின் சொந்த மண்ணின் வாழ்க்கை நிச்சயம் இதைவிட பரிதாபமான ஒன்றானதாக இருக்கும்.

இது நிரந்தரமல்ல. விரைவில் ஊர் திரும்புவோம் என்கிற நம்பிக்கை மட்டுமே அவர்கள் இங்கு காலம் தள்ளிக்கொண்டிருப்பதற்கான காரணமாக இருக்குக்கூடும் என உள்மனம் சொல்லுகின்றது.

பணத்தின் தேவை
போகிற போக்கில்
எல்லோரையும் அகதிகள் ஆக்கிடும் போல ஜேபி. இந்த கணத்தில் நம் pdf(post doctroal research)நண்பர்களின் வாழ்க்கையும் நினைவுக்கு வருகின்றது.

'தற்கால அகதிகள்' தலைப்பு எப்படி இருக்கு? ரொம்ப மெனக்கிட்டு யோசனை செய்து கிடைத்த தலைப்பு அல்ல. அதானால் தூக்கி எறிய யோசிக்க வேண்டாம்.

முடிவில் ஒரு ஜோக்;
////ஆளே இல்லாத இடத்துல யாருக்க்குடா டீ ஆத்தறன்னு என்னை யாரும் கேட்க முடியாதபடி நீங்க என் கவிதைகளை படிக்கறீங்க./////

தீவிர இலக்கியவாதிகள் மட்டுமே வந்து தேநீர் அருந்திவிட்டு செல்லும் தேநீர் கடை இப்படிதான் இருக்கும் ஜேபி.

நளினி சங்கர் சொன்னது…

//'தற்கால அகதிகள்' தலைப்பு எப்படி இருக்கு? //

பின்னூட்டம் எழுதும் போது திடீர்னு தோனுச்சு ஜேபி. அதான் ட்ப்னு சொல்லிட்டன். ஆனா உங்க கவிதைக்கான தலைப்பை பற்றி நீங்க ஏதும் என்னிடம் கேட்காதபோது நானே இதுபோல் முந்திக்கொண்டது சற்று அநாகரீகமாக தோன்றுகின்றது. மன்னிக்கவும்.

Jayaprakashvel சொன்னது…

சங்கர்
மன்னிப்பும் நன்றியும் நான் நெருக்கமான நண்பர்களிடம் நான் தவிர்க்க நினைகிற வார்த்தைகள். அவர்களும் என்னிடம் அந்த வார்த்தைகளை தவிர்க்க விரும்புவேன். நீங்கள் எனக்கு நெருக்கமான நண்பர்.
இப்பொது தலைப்பு பற்றி
தற்கால அகதிகள் என்ற தலைப்பு எனக்கு சரியாகப்படவில்லை. என்றாலும் எனக்கு தலைப்பு சொல்ல நீங்கள் முனைந்தது மகிழ்ச்சியான விசயம். இதை எழுதும் போது ஆந்திரத்து அடிமாடுகள் என்ற தலைப்பு என் மனதுக்கு பட்டது. அதுவும் எனக்கு சரியாகப்படவில்லை. ஊரை விட்டு பெயர்ந்து வந்திருக்கும் சொகத்தை மட்டும் அல்ல அவர்கள் ஒப்பந்தக்காரர்களால் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் அந்தத் தலைப்பி சொல்ல வேன்ண்டும் என்பது என் விருப்பம். அது வரை காத்திருப்போம்.

நளினி சங்கர் சொன்னது…

if i think about the title "tharkaala agathigal" now. I can feel that it will be never suitable to this nice poem. As you said you wanted to insist their exploitations let me wait for the appropriate title.

Jayaprakashvel சொன்னது…

Yes shankar. i may even leave thsi with out a title.