செவ்வாய், 29 ஜூன், 2010

காஷ்மீரில் நடந்து வரும் அடக்குமுறைகள்

காஷ்மீரில் நடந்து வரும் அரசின் அடக்குமுறைகள், அரசப்படைகளின் அத்துமீறல்கள் இந்தியாவை வேறெந்த உலக பிரச்சனையிலும் கருத்து சொல்லவும் கூடாத தகுதிக்கு இறக்கி வருகின்றன. கடந்த சில நாட்களாக காஷ்மீரில் ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் போராட்டக்காரர்களுக்கும் ராணுவப்படையினருக்குமான (CRPF) மோதல்கலின் விளைவாக CRPF சுட்டதில் இது வரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

(http://timesofindia.indiatimes.com/india/JK-on-boil-as-CRPF-kills-2-protesters/articleshow/6103486.cms

http://timesofindia.indiatimes.com/india/Violence-spreads-to-south-Kashmir-3-killed-in-Anantnag/articleshow/6106570.cms )

எல்லோரும் மிக இளம் வயதினர் என்பது மிகவும் வருந்ததக்க ஒன்று. போராட்டக்காரர்களின் நோக்கம் மற்றும் அவர்கள் நடந்து கொண்ட முறை என்பதை விடவும் இங்கே மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது துப்பாக்கிசூடுகள் நடத்தப்படுவது தான். முதல் நாளில் ஒரு சிறுவனும் இளைஞனும் கொல்லப்பட்ட பின்பு கொந்தளிப்படைந்திருக்கும் மக்கள் மீது தொடர்ச்சியாக துப்பாக்கிசூடுகள் நடத்துவது அரசின் பயங்கரவாதப் போக்கை காட்டுகிறது. காஷ்மீர் இந்தியாவின் பகுதி என்று தம்பட்டம் அடிக்கும் இந்திய அரசு அங்குள்ள மக்களீன் மீது அளவுக்கதிகமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது மகா மட்டரகமான காரியம். ஒரு முறை டெல்லி போகும்போது ரயிலில் ஒரு ராணுவீரர் பேசிக்கொண்டு வந்தார். முன்பெல்லாம் காஷ்மீரில் விசாரணைக்காக மக்களை மிகவும் தைரியமாக மிரட்டுவோம். இப்போது ஊடகங்கள் வலுத்த பின்பு மனித உரிமைகள் வலியுறுத்தப்படுவதன் காரணமாக மக்களை வெகு எச்சரிக்கையாக விசாரிக்க வேண்டி இருக்கிறது என வருத்தப் பட்டுக் கொண்டார். உண்மையில் அவரைவிட எனக்குத்தான் வருத்தமாகிப் போனது. வேறொரு சமயத்தில் அலியான்ஸ் பிரென்ச் இல் ஈழத்தில் நடக்கும் அடக்குமுறைகள் தொடர்பான ஒரு ஆவணப்பட திரையிடலின் போது ஒரு காஷ்மீரத்து இளைஞன் நூற்றுக்கனக்கான ஆண்டுகளாக என் குடும்பம் வசிக்கிற என் ஊரில் என் வழிபாட்டுத்தளத்திற்கு போக நான் ரானுவத்தின் விசாரனைகளுக்கு உட்பட வேண்டி இருக்கிறது. இந்தியாவுக்குள்ளேயெ நாங்கள் இப்படி கஷ்டப் படும் போது வெளியில் உள்ளவர்களை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? என்றான். ஈழக்கொடுமைகள் பேசப்படும் அளவுக்கு இங்கே யாரும் எங்கள் துன்பங்களை பேசுவதில்லை என குறைபட்டுக் கொண்டார். அவரின் பேச்சு முழுவதும் ஒத்துக்கொள்ளக் கூடியது அல்ல என்றாலும் காஷ்மீர மக்கள் படும் துயரங்கள் நமது கண்களை அடைவதில்லை என்பது வருத்தத்தோடு ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று.

1 கருத்து:

C.Janagar சொன்னது…

பைத்தியக்காரத்தனம். இலங்கை பிரச்சனையையும் காஷ்மீர் பிரச்சனையும் போட்டு குழப்பிக் கொள்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். சிங்கள ஜனாதிபதி,ராணுவம்,போலிஸ் என்று முழுக்க பேராதிக்கம் செய்யும் அரசும்
முஸ்லிம் முதல்வர், பாதி முஸ்லிம் போலிஸ்,பாதி முஸ்லிம் ராணுவம்,தேர்தல் என்றெல்லாம் இயங்கும் காஷ்மீரும் ஒன்றா?