வெள்ளி, 26 டிசம்பர், 2008

பாரதி ஒரு முற்றுப் பெறாத சகாப்தம் 1


http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5278282608014400729&na=1&nst=1 என்ற ஆர்குட் அரங்கில்
பாரதியை பற்றிய விமர்சனங்களுக்கு எனது பதில் பதிவுகளை இங்கே பதிகிறேன். அங்கே எனது நிறைய பதிவுகள்அழித்தொழிக்கப் பட்டன. அதற்காக எஞ்சியவற்றை காக்க இந்த இடுகை .



பாரதிக்கு நான் குடை பிடிக்க முழுமுதற் காரணம் மனிதர்களை நான் அவர்களின் பலவீனங்களோடு ஏற்றுக்கொள்வது தான். பாரதி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவன் அல்ல. அதுபோல பாரதி எங்கும் தன்னை எல்லாம் சரியாக சொல்பவன் எனவில்லை. அவனின் படைப்பாற்றலை படைப்பின் தரத்தை வெகு கர்வத்துடன் கொண்ட்டடியவ. வேறொரு நண்பர் சொன்னது போல இந்த நவீன உலகின் அளவுகோல்களைக் கொண்டு பாரதியை அளக்க முற்படுவது நுஉறு வருடங்கள் முன்பு தங்கம் ஓரணா என்று இன்று அங்கலாய்ப்பதற்கு சமம். கொண்டாடியவன். அவன் பிறந்து வளர்ந்த சமுதாயம், அவனை வாட்டி வதைத்த வறுமை இவற்றின் இடையில் மனித குலத்தை பெரிதும் நேசித்த அவன் எழுத்துக்களை வைத்துப் பாருங்கள். அவனின் இந்து மத அபிமானம் வர்ணாசிரம கருத்துகள் என நீங்கள் சொல்வன எல்லாம் அவன் பார்வையில் வேறு. அதை மறுப்பதற்கில்லை . அவன் வாழ்ந்த காலத்திl அவனிலும் மேலாய் சிந்தித்த செயலாற்றிய யாராவது ஒருவரை எனக்கு அடையாளம் காட்டுங்கள். எனக்கு நிறைய படிப்பறிவு இல்லை. தெரிந்து கொள்கிறேன். போக அவன் வாழ்ந்த காலம் ரொம்ப கொஞ்சம். அவன் எழுதியது ரொம்ப. ஒவ்வொன்றும் அவன் வெவ்வேறு மனநிலையில் எழுதியதாக இருக்கலாம். வெள்ளையர்களை எதிர்த்து எழுதியவன் வேல்ஸ் இளவரசருக்கு வாழ்த்துப்பா எழுது உள்ளான் . அதற்காக அவனை ஆங்கிலேயரின் அடிவருடி என்று முத்திரை குத்தி விட முடியுமா? அவன் மனித நேயம் அல்ல உயிர் நேயத்தைப் பாருங்கள். எவன் எழுதினான் அப்போது இப்படி? அல்லது இப்போது?பாரதியின் படைப்புகளை படிக்க அவற்றின் எழுத்தப்பட்ட காலத்தையும் கவனித்தில் கொள்ளவும்.

பாரதி காலத்தை மீறி கனவு கண்ட , காலத்தை மீறி சிந்தித்த பிறவிக் கலைஞன் . அவன் வேறொரு நபரை ஆகவே முடியாது. அவன் எழுத்துக்களை வெறும் கவிதைகள் அல்ல எல்லா தர படிப்புகளையும் அவன் வாழ்ந்த காலத்தோடு ஒப்பிட்டு படியுங்கள். பாரதிக்கு சமமான அவன் காலத்திய தமிழ் படைப்பாளி ஒரு நபரைக் காட்டுங்கள். வேறு யாரும் இல்லாததால் அவனை ஏத்திக் கொண்டாடவில்லை. அவனின் தனித்தன்மையை சொல்லவே இதை எழுதினேன்.

பாரதி மன்னிப்புக்கடிதம் கொடுத்து வெளியே வந்தது மறைக்கைப்படாத ஒன்று. அதற்காக பாரதி பார்ப்பான் என்பதற்காக வெட்கப்பட வேண்டியது இல்லை. அது ராஜ தந்திரம் இல்லை தான். அது ஒரு கஷ்டப்பட்ட மனிதன் தன் வாழ்வை தக்க வைத்துக் கொள்ள மேற்கொண்ட நடவடிக்கியாக இருக்கலாம். மேலும் பாரதி விடுதலை வீரனாக இருந்தே ஆக வேண்டும் என்பது கட்டாயமா? அவன் எடுத்த தொட்ட விசயங்கள் மிகப்பல. அதில் ஒன்று விடுதலை போராட்டம்.

மொத்தமாக சொல்வதென்றால்பாரதி ஒரு அவதாரம் அல்ல. ஒரு சாதாரண மனிதன் தான். ஆனால் காலத்தை மீறிய கனவுகளில் வாழ்ந்த ஒரு மகாகவிஞன். உங்கள் வார்த்தை சத்தியம் அவன் மகாகவிஞன் தான். நீங்கள் அந்த க ஹ வாக இருந்தால் kuda தப்பில்லை. உங்களுக்கு ஹ பிடிக்கிறது என்றால் நீங்கள் அவனில் உள்ள பார்ப்பன பாரதியை மட்டும் பார்த்து இருக்கிறீர்கள். பாரதி மிகச்சில ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவன். தனது நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றியவன். அனால் எந்த காலத்தும் தான் ஒரு மகா படைப்பாளி என்பதை மறக்கவே இல்லை. காந்தி பிரிட்டனில் படித்ததும் தென் ஆபிரிக்காவில் தொழில் செய்ததும் இந்திய விடுதலைக்காக தயார் செய்து கொள்ள அல்ல. ஒரு நேரத்தில் அவருக்கு இந்திய விடுதலைக்காக துணிந்து பாடுபட எண்ணம் தோன்றி இருக்கிறது. பாரதி kuda நிவேதிதா வை சந்திக்கும் முன்பு தனது மனைவிக்கு சம மரியாதை கொடுத்தது இல்லை. அதற்காக ஆணாதிக்கவாதி என்று முத்திரை குத்துவீர்களா? ஜப்பான் மற்றும் ஜெர்மனி உதவியை தேடிய போஸ் அவர்களை உங்கள் அகராதியில் எந்த வார்த்தை கொண்டு விளிபபீர்கள்? பாரதி தொடந்து மாறிக்கொண்டே இருந்தவன். காலவரிசைப்படி அவன் படிப்புகளை படியுங்கள். பாரதி ஒரு முடிவுபெறாத சகாப்தம். இன்னும் பாரதிக்கான தேவை இருக்கிறது. பாரதியில் எந்த பாரதியை எடுத்துக்கொண்டால் நமக்கு நல்லது என பார்த்து எடுத்துக்கொள்வோம். உங்களுக்கு உவப்பான பாரதி குஉட இருக்கிறார். திறந்த மனதோடு படித்துப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை: