வெள்ளி, 26 டிசம்பர், 2008

தமிழுக்கு கவிதையை அறிமுகப் படுத்தியன் அவன். செய்யுள் எழுது யாப்பில் உழன்று பொழிப்பாசிரியர் தேவைப்பட்ட தமிழ் இலக்கியத்தில் பழகு தமிழில் எழுதினான். இசையோடு பாடினான். வண்டி இழுத்தவர்கள் அவன் ரசிகர்கள் வடை விற்றவர்கள் அவன் ரசிகர்கள். பு விற்றவர்கள் அவன் ரசிகர்கள். மொத்தத்தில் சாமான்ய மக்களுக்காக எழுதினான் அவர் புரட்சி செய்யவில்லை. யார் புரட்சி செய்தார்கள் என்று ஆராயவும் வேண்டாம். நான் ஒன்றே ஒன்றை பலதரம் சொன்னேன். அவன் மக்களை உயிர்களை நேசித்தான். அது புரட்சியா என்று ஆராய வேண்டியது இல்லை.

விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே தொண்டுன தன்னை பராசக்திக் கென்றுந் தொடர்ந்திடுவேன் பண்டைச் சிறுமைகள் போக்கி யென்னாவிற் பழுத்த சுவைத் தெண்டமிழ்ப் பாடலொரு கோடி மேவிடச் செய்குவையே (விநாயகர் நான்மணி மாலை பாடல் 30 )சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்சுருதிகள் கேளீரோ?-பலபித்த மதங்களி லேதடு மாறிப்பெருமை யழிவீரோ? 3மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்துவெறுங் கதைகள் சேர்த்துப்-பலகள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறைகாட்டவும் வல்லீரோ? 9 ( அறிவே தெய்வம் ).என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும் (காணி நிலம் வேண்டும் )நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய்? - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதியவுயி ராக்கி - எனக் கேதுங் கவலையறச் செய்து - மதி தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் (32. யோக சக்தி)மண்ணிலார்க்குந் துயறின்றிச் செய்வேன், வறுமை யென்பதை வண்மிசை மாய்ப்பேன். (காளி தருவாள்)காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்; (ஐய பேரிகை)இந்த எல்லா பாடல்களும் உணர்த்துவன என்ன?பாரதியின் ஆரிய பற்று சமஸ்கிருத பற்று பார்ப்பனகுறு இவை மறுக்கவில்லை. இதன் காரணமாக அவன் விளக்கப் பட வேண்டியவன் அல்ல. அவன் வாழ்ந்த சமுக அமைப்பில் அவன் அப்படி எழுதினான். அதில் இருந்து விடுபடவும் முயன்றவன். இதற்கு அவன் கடவுளர்க்கு வேண்டிய மேல் காட்டிய இரு பகுதிகள் சான்று. தான் வாழ்ந்த காலத்தை மீறி கனவு கண்டவன். அவன் வாழ்ந்த காலத்தில் மற்றவர்கள் பேசாத பெரிய பொருள்களை பேச தலைப்பட்டவன். அதனாலேயே இன்னும் பேசப்படுகிறவன். பார்ப்பான் என்பதற்காக அவன் பேசப்படவில்லை. எந்த இந்து இயக்கமோ இல்லை பார்ப்பன தலைவனோ பாரதியை தலையில் வைத்துக் கொண்டாடவில்லை. நீங்கள் மேற்கோள் காட்டுகிற வரிகளை எவரும் கொண்டாடவில்லை. நீங்களே தேடித்தான் எடுத்தீர்கள்.

1 கருத்து:

deesuresh சொன்னது…

அவன் எழுதிய வாழ்க நீ எம்மான் இல் காந்தியைப் புகழ்ந்ததைப் போல் பாரதியையும் வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம் என்று புகழலாம். அதில் தவறொன்றுமில்லை