ஞாயிறு, 22 நவம்பர், 2009

என்ன கொடுமை சரவணன் இது?

முல்லை பெரியாறு அணை பிரசனை தொடர்பாக போராட்டம் அறிவித்த திமுக மத்திய aமைச்சர் ராசா அலுவலகத்தில் சி பி ஐ விசாரணை நடந்த பின்பு பின்வாங்கியது. ராதாபுரத்தில் பேருண்டு நிலையத்தில் காமராசர் பெயரும் அவர் மாறும் கக்கன் சிலையை நிறுவ கோரி அதிமுக போராடுகிறது. இவர்களின் பொற்கால ஆட்சியில் எத்தனை இடங்களுக்கு காமராசர் பெயரையும் எத்தனை இடங்களில் கக்கன் சிலையும் வைத்தார்கள். ஆனாலும் திமிக செய்வதும் அநியாயம். முத்துவேலர் அஞ்சுகம் பெயர் வைப்பது முன்பு அன்னை சத்யா ஜே ஜெயலிலதா பெயர்களில் போக்குவரத்து கழகம் தொடங்கியது போலாகி விட்டது. பி தி கத்தரி பற்றிய பிரச்சனை எழுந்த வுடன் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அதை மக்கள் மன்றத்தில் விவாதத்திற்கும் கருத்து கேட்புக்கும் வைத்தார். இரு மாநிலங்களில் தீராத ஒரு பிரச்சனையில் தன்னிச்சையாக கேரளத்திற்கு சாதகாமா அணை கட்ட ஆய்வு நடத்த ஒப்புதல் வழங்கி உள்ளது எந்த நியாயம்? பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் இந்த கேள்வி ஒன்றை தவிர வேறு எதை வேண்டுமானாலும் கேளுங்கள் என்கிறார்? என்ன கொடுமை சரவணன் இது?
கொஞ்ச நாட்களாக ஜூனியர் விகடன் வாசித்து வருகிறேன். நன்றி நண்பர் முத்துவுக்கு. முற்போக்கு இதழ்கள் என்று சொல்பவைகள் kuda பதிவு செய்யாத அரசு சார்ந்த துறைகளில் நிலவும் தில்லு முல்லுகளை எழுதி வருகிறார்கள். தொடர்ச்சியாக படித்ததில் ஒன்று தெளிவாக புரிந்தது. ஆளும்கட்சி எதிர்கட்சி எதற்கும் மக்கள் நலனில் அக்கறை இல்லை.

கருத்துகள் இல்லை: