வெள்ளி, 1 ஏப்ரல், 2011

மிஸ்பா- ஒரு சாமுராய்


கடந்த சில நாட்களாக எழுதுகிற மன நிலையில் இல்லை. இருந்தாலும் இந்த சில நாட்களில் நான் எழுத வேண்டும் என்று நினைத்த இரு விசயங்களை மிகச் சுருக்கமாக எழுதுகிறேன்.

1. வைகோ என்ற மனிதருக்கு நடந்த நம்பிக்கை துரோகம்

இதை உண்மையில் நம்பிக்கை துரோகம் என்பதா வேறு எதாவது உளரசியல் நலன்கலை முன்வைத்து இப்படி ஒதுங்கிக் கொண்டார்களா அல்லது ஒதுக்கப் பட்டார்களா என்று மிகச் சரியாக விளங்கவில்லை. ஒரு சாதாரண அரசியல் ஆர்வலனின் பார்வையில் இந்த விசயத்தில் வைகோவுக்காக என் வருத்தங்களைத் தெரிவிக்கவே விரும்புகிறேன். வைகோவும் தவறுகளும் துரோகங்களும் செய்தவர்தான். ஆனால் ஒரு தலைவர் என்கிற வகையில் தமிழகத்தின் இரண்டு தலையாய தலைவலிகளுக்கு அடுத்தது மக்களில் பொதுவானவர்களும் ஒத்துக் கொள்ளும் தலைவர் வைகோ. அப்படிப்ப்ட்ட வைகோ தன்னால் எந்த அளவுக்கு தவறான முடிவுகள் எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு எடுத்தாலும் அரசியல் காரணங்களுக்கு அப்பாற்பட்டு சில மக்கள் போராட்டங்களையும் சில மக்களுக்கான போராட்டங்களையும் செய்தவர் வைகோ. தோல்வியே பிரதானமாக இருந்த போதிலும் தனக்கென தொண்டர்களைக் கொண்ட ஒரே கட்சி மதிமுக தான். அது போக தமிழர்களின் வரலாற்றுக் கடமையான தமிழீழப் போராட்டங்களை ஆதரித்தவரும் (விமர்சனங்கள் நிறைய உண்டு) அந்த கடமையின் நடமாடும் வடிவமாக தன்ன்னை முன்னிறுத்தி தமிழகத்தில் அந்த கடமையை உயிர்ப்போடு வைத்திருப்பவருமான வைகோவின் தோல்விகள் அவருக்கு மட்டும் அல்ல. தமிழக மக்கள் எல்லோருக்கும் அந்த துயரத்தில் பங்கு உண்டு.

2. மிஸ்பா உல் ஹக் எனும் சுத்த வீரனின் ஆட்டம்.

இந்த வருட கிரிக்கெட் உல்கக் கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் என்று எழுதி இருந்தேன். அதை நான் விரும்பவும் செய்தேன். ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா ஓரளவு சிறப்பாக விளையாடியதாலும் சில பாகிஸ்தானிய பேட்ஸ்மேன்களின் பொறுப்பின்மையாலும் தோற்று விட்டது. இப்போதெல்லாம் வெகு அரிதாகத்தான் கிரிக்கெட் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த குறிப்பிட்ட போட்டி மறக்க முடியாத போட்டியாகி விட்டது. காரணம் மிஸ்பா உல் ஹக். ஒரு பெரிய தேசத்தின் மிகப்பெரும் மக்கள் திரள் நடுவே ஒற்றை ஆளாக எதிரில் இருக்கும் ஆட்டக்காரனையும் தவிர்த்து தனியொருவனாக ஒட்டு மொத்த இந்திய அணியினருக்கும் இந்திய அணியின் ரசிகர்களுக்கும் 49.2 ஓவர் வரை கிலி கிலப்பிய மிஸ்பா உல் ஹக் ஒரு மாவீரன் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த கடைசி ஜாஹிர்கான் ஓவரில் முதல் இரண்டு பந்துகள் ரண்களாக போகாத பின்பு தான் இந்தியர்கள் வெற்றிக் கூச்சல் போட்டார்கள். வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். அதற்கு முந்தைய ஓவர்களில் மிஸ்பாவின் உறுதியைப் பார்த்த மொஹாலி ஸ்டேடிய மக்கள் வாயடைத்துப் போய் தான் இருந்தார்கள். கடைசியாக உமர் குல் இருக்கும் வரை கூட இந்தியா ஜெயித்து விடும் என்று யாருக்கும் நம்பிக்கை இல்லை. காரணம் மிஸ்பா. அந்த கடைசி ஓவரில் எல்லொருக்கும் எழுந்த பயமே மிஸ்பாவின் துணிவுக்கும் திறமைக்கும் சான்று. என்னவொரு உறுதி. ஜெயிப்பதற்கு வழியே இல்லை. எதிரணியினர் பதினோரு பேர் மட்டும் அல்ல. மொத்த மொஹாலி ஸ்டேடியமும் இந்திய அணிதான் என்ற நிலை. இப்படி இருந்தாலும் அணியின் வெற்றிக்காக இறுதி வரை தளராமல் போராடிய மிஸ்பாவுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்படாவிட்டாலும் அந்த ஆட்டத்தின் நாயகன் இதே நிலமையில் தோல்வி உறுதி செய்யப்பட்ட நிலையில் தனியாக ஆடிக் கொண்டிருந்த சேவாக் எப்படி பயந்து அடி வாங்கி ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டார் என்பதை முன்பு பார்த்திருக்கிறேன்.

மிஸ்பா- ஒரு சாமுராய்.

கருத்துகள் இல்லை: