புதன், 27 அக்டோபர், 2010

காஷ்மீர மக்களின் விடுதலைப் போராட்டங்கள் வெல்லட்டும்

காஷ்மீர மக்களின் விடுதலைக்கான போராட்டங்களை எல்லா இந்திய அரசுகளும் நசுக்கியே வந்திருக்கின்றன. இங்கே ஈழப்போராட்டத்தை ஆதரிக்கிறவர்கள் கூட இது பற்றி வாய் திறப்பதில்லை. ஆனால் அந்த மக்களிடையே கனன்று வந்த விடுதலைத்தீ கடந்த சில மாதங்களாக கொழுந்து விட்டெறிகிறது. அங்கே மக்கள் பிரிவிணையை கோரவில்லை; ீவிரவாதிகள் தான் தூண்டி வருகிறார்கள் என்று பேசி வந்த நடு நிலைமை பொய்யர்களும் வாயடைத்துக் கொள்ளும்படி செய்து விட்டன இளம்வயதினரும் பெண்களும் முன் நிற்கிற சமீப கால போராட்டங்கள். கற்களை வீசீத்தாக்கும் அந்த மக்களின் போராட்ட உக்கிரம் இந்திய ராணுவத்தை மட்டுமன்றி மைய அரசையும் அசைத்து விட்டது. அமைச்சர் ப. சிதம்பரம் பொய்யாகவேனும் சில பரிகாரங்களை முன் வைக்குமளவு வைத்து விட்டது. இப்பொது ஆஸாதி பற்றி பேசியதற்காக பா ஜ க அருந்ததி ராய் மீது புகார் அளித்துள்ளது. இது ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் விரும்பிய ஒன்றுதான். ஆள்பவர்கள் ஆதலால் வெளிப்படையாக விரோதம் பாராட்ட முடியாதல்லவா.அருந்ததி ராய் பற்றிப் புகார் அளிக்கும் பா ஜ கா காஷ்மீர் இன்னும் இந்தியாவுடன் இணையவில்லை என்ற உண்மையை சட்ட மன்றத்தில் பேசிய முதல் ஓமர் அப்துல்லா பற்றி என்ன சொல்லும்? இந்தியா வல்லரசாகிறது என்று சன் டி வி அரட்டை அரங்கில் பலர் பேசிக் கேட்டு இருக்கிறேன். ஒரு சர்வதேச வஸ்தாது போல எழுத்தாளர்களை-அவர்களின் கருத்துரிமையை பறிக்கும்- மறுக்கும் இந்தியாவிலுள்ள மைய அரசும் பல மானில அரசுகளும் அந்த வல்லரசு அந்தஸ்தை இந்தியாவுக்கு அளித்து விட்டன. திபெத்திய அகதிகளுக்கு தனியுரிமை அளித்து தலாஇலாமாவுக்கு தனியுரிமை அளித்து காப்பாற்றி வரும் இந்த அரசுகள் வங்க தேச வறிய அகதிகளை விரட்டி அடிக்கின்றன. உணவகங்களில் நேபாளி தொழிலாளிகளை பார்க்கும் போதெல்லாம் நமது அரசுகளின் நேபாள கம்யூனிஸ்ட் அரசு மீதான சதிவேலைகள் தான் நினைவுக்கு வருகின்றன. ஈழ அகதிகளை ஒடுக்கி வருகிறது. சீனாவிடம் மல்லு கட்ட திபெத்திய அகதிகளை தாஜா பன்னும் தரங்கெட்ட வெலையை செய்து வரும் எல்லா அரசுகளும் இலங்கை ஈழ அகதிகளை கண்டுகொள்ளாமல் இருப்பதில் வியப்பேதுமில்லை.

இங்கே காணும் படங்கள் கர்நாடகாவில் உள்ள ஒரு திபெத்திய குடியிருப்பில் உள்ள மடம். திபெத்தியர்களும் அகதிகள். ஈழத்தமிழர்களும் அகதிகள். ஈழ அகதிகளின் முகாம்கள் எப்படி உள்ளன. திபெத்திய அகதிகளின் முகாம்கள் எப்படி உள்ளன என்று யோசிக்கவே இந்தப் படங்கள். தந்து செல்போனில் எடுத்த படங்களை கொடுத்த நண்பர் செந்திலுக்கு நன்றிகள்.

3 கருத்துகள்:

nerkuppai thumbi சொன்னது…

A good attempt to cover a sixtythree-year old issue.

please furnish link for "folowing"
and ur e-mail please to:
nerkuppai.thumbi@gmsil.com; web page: makaranthapezhai.blogspot.com

நளினி சங்கர் சொன்னது…

அருந்ததிராய்-காஷ்மீர் விடுதலை என கட்டுரை ஆரம்பித்து எங்கெங்கெங்கோ போதே ஜே.பி. பின்னி பெடல் எடுத்திருக்கிங்க.

தினத்தந்தியில் அருந்ததிராயின் கருத்துக்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்திருப்பதை பார்த்தேன்.

ஞானி,சாரு, ரவிக்குமார் மட்டுமே இதுவரை பேசியுள்ளனர்.

நீங்க சொன்னமாதிரி இந்தியா வல்லரசு ஆகிடுமோன்னு பயமா இருக்கு ஜே.பி

இந்தியாவின் இன்றைய சூழலுக்கு intellectuals are only the reason. They won't open their mouth untill their own trouser tore.

Jayaprakashvel சொன்னது…

திருமாவளவன் மிக சில விசயங்களில் மட்டும் தெரிவு செய்து கருத்து வழங்குகிறார். ரவிக்குமாரும் அப்படியே. இதெல்லாம் வருந்த வேண்டிய விசயங்கள். இருவரும் சாதாரண அரசியல்வாதிகள் அல்ல. விஷயம் தெரிந்தவர்கள். அவர்களே இப்படி செய்யும் போது வருந்துவதை தவிர வேறென்ன செய்வது. எல்லாம் தி மு க வின் செல்வாக்கு. இந்திய ஒரு வல்லரசு வெறியில் தான் போய்க் கொண்டு இருக்கிறது.