புதன், 27 அக்டோபர், 2010

கனவுகளின் பெருவேந்தன்

கனவுகளின் தெருவில்
காணாமல் போனவன் நான்.
கனவுகளின் கானகத்தில்
வேட்டையாடும் பிராணியும் நான்.

வாயிலிருந்து ஒழுகும்
பற்பசை நுரையென
படுக்கையின் விளிம்பெல்லாம்
கனவுகள்.

கனவுகளைக் கொன்றழிக்கும் உத்வேகத்துடன்
உறங்கப் போகிறேன்.
உன் கைகள் படப் பட...
கனவுகள் கரைவதாய்-
இப்போதொரு கனவு
கண்டு கொண்டிருக்கிறேன்.

2 கருத்துகள்:

மாணிக் சொன்னது…

கவிதை மிக நன்று. ரொம்ப ரசிச்சேன்.

Jayaprakashvel சொன்னது…

மாணிக் நீங்க நல்லாருக்குன்னு சொன்னா கண்டிப்பா இது நல்ல கவிதைதான். நனறி.