செவ்வாய், 25 மே, 2010

மன்னிக்க வேண்டுகிறேன்

சிறிய பொத்தானை அழுத்தினால் போதும்;
வானொலிப்பெட்டி பாடுவதை நிறுத்தி விடும்.

மெலிதாக அதட்டினல் போதும்;
குழந்தைகள் அழுவதையும் நிறுத்தி விடும்.

கொஞ்சமாக நீரூற்றினால் போதும்;
கொதிக்கும் பால் கூட அடங்கி விடும்.

துன்பம் வடிக்கும் மனசுக்கு
துயரம் துடைக்கும் சொற்கள் வேண்டும்.

கண்ணீரை ஏந்திக்கொள்ள
மலர்ந்த சில கரங்கள் வேண்டும்

சோகம் சுமக்க
சலிக்காத சில செவிகள் வேண்டும்

காயங்களின் மேல்
சில கண்ணீர்த்துளிகளாவது விழ வேண்டும்

பின்
மன்னிப்பு நிழலில்
மறக்க வைக்கும் உறக்கமும் வேண்டும்.

மனிதனாய் வாழ்ந்து மரித்தும் போகலாம்.

4 கருத்துகள்:

நளினி சங்கர் சொன்னது…

//சோகம் சுமக்க
சலிக்காத சில செவிகள் வேண்டும்

காயங்களின் மேல்
சில கண்ணீர்த்துளிகளாவது விழ வேண்டும்

பின்
மன்னிப்பு நிழலில்
மறக்க வைக்கும் உறக்கமும் வேண்டும்.

மனிதனாய் வாழ்ந்து மரித்தும் போகலாம்//

படித்து முடித்தபோது அரிதாக நிகழும் மிகவும் நெருக்கமான் நண்பன் ஒருவனுடன் இரவெல்லாம் தூங்காமல் பேசிக்கொண்டிருந்த பரவசம் ஏற்படுகின்றது.

இந்த கவிதையை இரண்டாவது முறை படித்தபோது ஒரு பாடலுக்கான எல்லா அம்சங்களும் இதில் இருப்பதைப் போன்று உள்ளது. உண்மைதானா?

Jayaprakashvel சொன்னது…

சில கவிதைகள் நான் எழுதியவற்றுள் எந்த தடையும் இல்லாமல் திருத்தங்கள் இல்லாஅல் ஒரே எட்டில் எழுதபட்டவை. மேற்படி கவிதை அந்த வகையானது. இன்னமும் முழுதாக முடிக்காத சில கவிதைகள் உள்ளன. பாடல் போல இருந்தால் இன்னும் மகிழ்ச்சி. ஒரு நண்பனுடன் நிகழ்ந்த வன்மமான சன்டையை முன்னுள்ள கவிதையும் அதை அடுத்த சில தினங்களில் நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டு என் தவறை உணர்ந்தததை இந்தக் கவிதயிலும் எழுத முயனு இருக்கிறேன்.

Jayaprakashvel சொன்னது…

அரிதாக நிகழும்
மிகவும் நெருக்கமான்
நண்பன் ஒருவனுடன்
இரவெல்லாம்
தூங்காமல்
பேசிக்கொண்டிருந்த பரவசம்----

இது கவிதை தானே

நளினி சங்கர் சொன்னது…

நீங்க சொன்னா அது கண்டிப்பா கவிதைதான் ஜேபி.

அத விடுங்க... இந்த கவிதையை எழுத உங்களை நிர்பந்தித்த அந்த சூழலை நீங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடும் முன்னரே

//அரிதாக நிகழும்
மிகவும் நெருக்கமான்
நண்பன் ஒருவனுடன்
இரவெல்லாம்
தூங்காமல்
பேசிக்கொண்டிருந்த பரவசம்...//

என நான் ஓரளவு கனித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கின்றது. எப்படி இது நடந்துச்சுனு யோசிச்சு பதிலயும் கண்டுபிடுச்சிட்டன் ஜேபி.