புதன், 12 மே, 2010

அவர்கள் அதை கோபம் என்பார்கள்

ஏரிகளைக் குடித்து
ஊர்கள் பெருகும் போது-
வீடுகளைக் குடிக்க
மழைநீர் பெருகும்.

மரங்களை வெட்டி
வனங்களைத் தின்னும் போது-
வயல்களை நெரிக்க
பாலையின் விரல்கள் நீளும்.

உழைப்பவர் வாட…
ஒன்றுமில்லாதவர் வாட…
இந்தக் காலம்
இப்படியே தொடரும்போது-
வலிய இரும்புக் கதவுகள் நொறுக்கப்பட்டு
உன் சொகுசான வீடு சூறையாடப் படும்.

அவர்கள் அதை கோபம் என்பார்கள்;
நீ அட்டுழியம் என்பாய்;
அரசாங்கம் வன்முறை என்று சொல்லும்;
காவல்துறை கலகம் என்று சொல்லும்;
ஆனால் அதுவே-
புரட்சியாகவும் இருக்கலாம்.

2 கருத்துகள்:

முனைவர் இரா. முத்தெழிலன், M.Sc., Ph.D., சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
நளினி சங்கர் சொன்னது…

வேலு பாய் இன்றிலிருந்து புரட்சிக்கவி என்று அழைக்கப்படுவார்.