புதன், 14 அக்டோபர், 2009

முதல்வர் அடிக்கும் அவசர கால அரசியல் கூத்து

இன்றைய தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் ஒரு செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது. முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்கள் இன்று முதல் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப் படுவார்கள் என்றும் முதல் கட்டமாக 58000 அல்லது 52000 தமிழர்கள் குடியமர்த்தப் படுவதாகவும் முதல்வர் கருணாநிதி அறிவித்து இருக்கிறார். நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இல் ராஜபக்சே கண்ணிவெடிகளை அகற்றும் வரை மக்கள் முகாம்களை விட்டு அனுப்பப் போவதில்லை எனவும் முகாம்களின் நிலை தரம் உயர்த்தப் படும் என்று தெரிவித்து இருந்தார். தமிழ் எம் பிக்கள் வரும் போது மனக் குறையோடு வந்ததாகவும் திரும்பும் போதே மன நிறைவுடன் திரும்பியதாகவும் ஒரு இலங்கை அரசு அதிகாரி தெரிவித்து உள்ளார் . இலங்கை என்ன தமிழ்நாடா? முதல்வர் வழக்கம் போல தன்னிஷ்டப்படி அறிவிப்புகள் செய்கிறார். இந்த பத்து எம் பி களின் நற்சான்றிதல்களை ஐ நா சபையிடம் ராஜபக்சே காண்பிப்பார் என விஜயகாந்த் சொன்னதுதான் நடக்கும் போல தெரிகிறது. உலகத் தமிழ் மாநாடு நடத்த தனக்கு தகுதி இருக்கிறது என்று காட்டிக்கொள்ள முதல்வர் அடிக்கும் இந்த அவசர கால அரசியல் கூத்து மிகவும் வேதனை அளிக்கிறது. திருமாவளவன் மீண்டும் மீண்டும் தன்னையே கேவலப் படுத்திக் கொள்கிறார்.

கருத்துகள் இல்லை: