புதன், 17 ஆகஸ்ட், 2016

சிறீலங்காவின் தேசியத் தற்கொலை

பிரமிள் எழுதிய “சிறீலங்காவின் தேசியத் தற்கொலை” என்ற சிறிய நூலைப்படித்திருக்கிறேன். அதில் சிங்களர்களின் தமிழர்கள் மீதான வெறுப்புணர்வுக்கு வரலாற்று ரீதியான காரணங்களை தம் பார்வையில் வைக்கிறார். சோழ மன்னர்களின் மேலாதிக்கமே சிங்களர்கள் தமிழர்கள் மீது பயமும் வெறுப்பும் கொள்ள வைத்தது என்கிறார். தமிழர்கள் பின்பற்றிய இந்து மதமும் சோழர்கள் காலந்தொட்டு நிறுவப்பட்ட இந்துக்கோயில்களும் அவர்கள் வெறுப்பு நிலைக்க காரணமாகி விட்டது என்றும் சொல்கிறார். போதாக்குறைக்கு பிரபாகரனின் இயக்கப் பெயர் கரிகாலன்.
இன்னமும் ஒரு செய்தி சொல்கிறார். ஒரு ஆரம்ப கால சிங்கள அரசன் பெண் கேட்டு பாண்டிய நாட்டு அரசனுக்கு தூதனிப்பி இருக்கிறார். தமிழகத்தில் அவருக்கு பெண் கொடுக்கப்படவில்லை. விடாமுயற்சியோடு கேரளத்தில் இருந்து அரசகுடும்ப பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறார். அந்தப் பெண்ணோடு நிறைய கேரளத்தவர் சிறீலங்கா போனராம். சிங்களப் பெண்களின் பாரம்பரிய உடையும் சில நாட்டுப்புற கலை வடிவங்களும் கேரள பண்பாட்டை ஒத்துள்ளன என்றும் சொல்கிறார். அவர் சொன்னது போக சமீப காலத்திலும் இந்த வரலாற்றுத் தொடர்பு அறுபடவில்லை என்றெ நாம் கண்டிருக்கிறோம்.
தடம் இதழில் ஜெயமோகன் தமிழ் மக்கள் இந்துக்கள், வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு மற்றும் சிறீலங்காவில் நடந்தது இனப்படுகொலை அல்ல போன்றவற்றை வரலாற்றுரீதியான தர்க்க நியாயங்களோடு நிறுவுகிறார்.
Disclaimer: மேலே சொன்ன இரண்டும் தனித்தனி செய்திகள். இரண்டுக்கும் துளியும் தொடர்பில்லை.

கருத்துகள் இல்லை: