புதன், 6 மார்ச், 2013

சாவேஸ்-அடிப்படைவாதிகளின் அங்கலாய்ப்பு

விடுதலைப்புலிகளை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது; ஈழ விடுதலையை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது; ராஜபக்‌ஷேவை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது இவை எல்லாம் தமிழர்களுக்கு ஒற்றை நோக்கில் இருக்கலாம். சர்வதேச கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் பலவித பரிமாணங்களை கொண்டவை. ஒருவர் ஆதரிக்கிறார் எதிர்க்கிறார் என்பதற்காக அவரின் மற்ற பங்களிப்புகளை மறப்பது கண்மூடித்தனம். மார்கண்டேய கட்ஜு பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்த முடியாது என்றதற்கும் இன்று பலரும் சாவேஸ் ராஜபக்‌ஷேவுக்கு ஆதரவளித்ததை சுட்டிக்காட்சி தம்மை அறவாதிகள் போல ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுவதற்கும் வித்யாசம் நிறைய உள்ளது. பால் தாக்கரே அப்பட்டமான அடிப்படை வாதி. சாவேஸ் அப்படியல்ல. ஒரு தூய்மையான இவர்கள் அளவுகோல்களின் படி முழுமையான போராளி அல்லவெனினும் லத்தீன் அமேரிக்க நாடுகளின் சுயமரியாதை மக்களின் நல்வாழ்வு குறித்த அவரின் பங்களிப்புகளை ஒருவரும் வசதிக்காக கூட மறக்கக்கூடாத ஒன்று. சுபாஷ் சந்திரபோஸ் ஹிட்லர் சந்திப்புக்காக நேதாஜியையும் இந்து அபிமானத்துக்காக பாரதியையும் விலக்கி வைத்து பேசுவது சாவேஸை புறக்கணிப்பது இவை எல்லாம் அடிப்ப்டைவாதத்தின் ஆரம்ப கட்ட அறிகுறிகள். சந்தர்ப்பவாதம் செய்கிறார் என்று திருமாவளவனை கேலி செய்பவர்களையும் நான் இந்தப் பட்டியலில் வைக்கிறேன். இப்படியானவர்களிடம் மிகுந்த எச்சரிக்கை தேவை. சமூகத்தின் நோய்களாக மாறும் தன்மை கொண்டவர்கள்.

கருத்துகள் இல்லை: