திங்கள், 3 செப்டம்பர், 2012

சமூகப்பாதுகாப்பு

எழுதியே (திட்டியே) ஆக வேண்டிய நிறைய விசயங்கள் காத்திருப்பில் உள்ளன. விரைவில் எழுதனும். அதுக்கு முன்னதாக ஒரு முன்னோட்டம். வெளி நாடுகளில்  இருப்பதாக சிலாகிக்கப்படுகிற இந்தியாவில் இருக்கிறதாவென சந்தேகப்படுகிற ஒன்று- சமூகப்பாதுகாப்பு. தாம்பரம் சிறுமலர் ஸ்ருதியும் கஸ்தூரிபா மருத்துவமனையில் முகமெல்லாம் குதறப்பட்டு (இந்த வார்த்தைகளுக்காக அந்த சின்ன உயிர் என்னையும் மன்னிப்பதாக; எப்போது நினைத்தாலும் கண்ணீர் வருகிறது) பெயரிடப்படும் முன்னே இறந்த சின்னஞ்சிறு மலர் இவர்களெல்லாம் நம் சமுதாயத்தின் மனசாட்சி. செத்து விட்ட ஒன்று. எத்தனை எத்தனை அலட்சியாமான உயிரிழப்புகள்? திடீரென கார்க் கதவு திறக்கப்பட்டதால் அருகில் வண்டியில் தாத்தாவுடன் போன குழந்த அடிபட்டு இறந்தது. ஆழ்குழாய்க் கிணறுகளில் அடிக்கடி குழந்தைகள் மாட்டி இறக்கின்றன. என்ன மாதிரியான தேசத்தில் நாம் வசிக்கிறோம்? ஒரு மனிதன் எத்தனை எத்தனை வேதனைகளை அனுபவிப்பது?மழை பொய்த்து கடன் நெருக்கியதில் மூச்சடக்கி இறக்கிறான் விவசாயி; மணலையும் தண்ணீரையும் மண்ணையும் குப்பையயும் கல்லையும் திருடுகிறார்கள்; அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் அப்பட்டமாக கொள்ளையடிக்கிறார்கள்; செய்த வேலைக்கு கூலியை கேட்டால் சுட்டுக்கொல்கிறார்கள்; (ரெட்டணை தமிழ் நாடு); வாழுமிடத்தை ஏனடா கெடுக்குரீர்களென்றால் அவன் தேசத்துக்கெதிராக போர் தொடுத்தவன் ஆகிறான்; என்ன உலகமடா இது?  கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு போனால் ஒன்றும் பிரச்சனையில்லை; எதையாவது கேட்டால், பார்த்தால், படித்தால் கொஞ்சமாவது கோபம் வருகிறது; எதுவும் செய்யாமல் இருப்பது மனதுக்கு பெரும் உறுத்தலாக இருக்கிறது. 

கருத்துகள் இல்லை: