நடிகர் சச்சின் டெண்டுல்கர் இரண்டு கோடி ரூபாய் வரிவிலக்கு பெற்றார்
கடந்த வாரம் ஒரு பழைய புதிய வாரப்பத்திரிக்கையில் ஒரு செய்தி பார்த்தேன். எந்த பத்திரிக்கை என்று நினைவு இல்லை. சச்சின் டெண்டுல்கர் தான் தொழில்முறை கிரிக்கெட் ஆட்டக்காரர் அல்ல என்றும் தொழில்முறையில் தாம் ஒரு நடிகன் என்றும் சொல்லி விளம்பரங்களில் சம்பாதித்த வருமானத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வரிவிலக்கு பெற்றுள்ளார். இது பற்றிய ஆங்கிலச் செய்தியின் இணைப்பு இங்கே. http://in.finance.yahoo.com/news/Actor-Sachin-Gets-Tax-Break-yahoofinancein-2344146558.html
பணக்காரர்களின் பண வெறிக்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது என்பதற்கு இதைவிடவும் பெரிய எடுத்துக் காட்டு இருந்துவிடமுடியாது. சச்சினை ஒரு கடவுளுக்கு நிகராக இந்திய கிரிக்கெட் பைத்தியங்களும் ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள். நாடாளுமன்றத்தில் பாராட்டுப்பத்திரம் வாசிக்கப் படுகிறது. இத்தனையும் அவரின் கிரிக்கெட் சாதனைகளுக்குத்தான். ஆனால் தனக்கு அடையாளாமான அந்த தொழிலையே மறைத்து தாம் ஒரு தொழில் முறை கிரிக்கெட்காரன் அல்ல என்று பொய் சொல்லி வரிவிலக்கு பெறுகிறார் எனும் போது அவரின் பண வெறியை என்னென்று சொல்வது? அவரது பணவசதிக்கு வெறும் பிசாத்து காசு ரெண்டு கோடிக்காக இப்படியொரு பொய் சொல்ல வேண்டுமா?
ஆனால் என்ன நடந்தாலும் எத்தனை முறை நடந்தாலும் கிரிக்கெட் மீதான மோகமும் வெறியும் இந்தியாவில் குறையாது. ஐ.பி.எல் விளையாடுவதில் காட்டும் ஆர்வத்தை கொஞ்சமும் காட்டாமல் இங்கிலாந்தில் தோற்கிறது இந்தியா பெயரிலான அணி. இது அரசின் அணி அல்ல. ஒரு பணம் சம்பாதிக்கும் நிறுவனத்தின் அணி. அதை நாட்டுப்பற்றோடு தொடர்பு படுத்து கொடியையும் போட்டு எத்தனை எத்தனை மோசடிகள்.
இப்படிப்பட்ட அர்பணிப்பு மிகுந்த நேர்மையான நடிகருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டுமென்று பலரும் கோரி வருவது நியாயம் தான். நடிகர் சச்சின் டெண்டுல்கர் பாரத் ரத்னா விருதுக்கு தகுதியானவர்தான்.
Thanks to www.4to40.com for royalty free image.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக