செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

தமிழகம் மராட்டிய மாநிலம் போலாகுமா?

கொஞ்ச நாட்களாக எதுவும் இங்கே எழுதவில்லை. கொஞ்சம் பணிச்சுமை கூடிவிட்டது. என்றாலும் எழுத நிறைய சங்கதிகள் கூடிவிட்டன.


முக்கியாமான ஒன்று. கடந்த வாரத்தில் ஒரு செய்தி படித்தேன். கோயமுத்தூரில் ஒருஇரண்டு வயது குழந்தையை வன்கலவிக்கு ஆட்படுத்திய பீஹாரைச்சேர்ந்த இருதொழிலாளர்களை (அதில் ஒருவர் சிறுவன்) கைது செய்திருக்கிறார்கள். கடந்த வருடம்கோவை புற நகரில் ஒரு பீஹார் மாநிலத்து தொழிலாளியை கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட செய்தியையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்கிறேன். இங்கேஎனக்கு நெருடலான விசயம் எந்தவொரு பிடிப்பும் ஆதாரமும் அற்று இவர்கள் இங்கேவேலை செய்வது தான். கடந்த வருடத்தில் நாமக்கல்லில் ஒரிசா பீஹாரை சேர்ந்தசுமார் எட்டு தொழிலாளர்கள் ஒரு ஆலைத்தீ விபத்தில் கொல்லப்பட்டார்கள். கடந்தவாரத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட வட இந்திய தொழிலாளர்கள் கொத்தடிமையாகஇருந்து மீட்கப்பட்டனர். இப்போது தமிழகத்தின் இண்டு இடுக்குகள் பட்டிதொட்டிகளிலெல்லாம் இந்த தொழிலாளர்கள் இருக்கிறார்கள். நகரத்தின் அத்தனைஉயர்தர மத்திய தர கீழ்த்தர உணவகங்களுலும் இவர்களே பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மிகக் குறைவுதான். இரண்டு விதங்களிலும்இந்த தொழிலாளர்களின் நிலை அபாயகரமானது. இவர்கள் ஏதேனும் தவறுகள்குற்றச்செயல்கள் புரிந்தாலும் தேடிப்பிடிப்பது சிரமமாகிவிடும். இவர்களுக்கு ஏதேனும்நடந்தாலும் எதுவும் நடக்காதது போல மூடி மறைக்கப்படும். எந்த கீழ்மட்டதொழிலாளிக்கு எது நடந்தாலும் ஆயிரங்களிலேயே அதை மூடி மறைப்பதுமுதலாளிகளுக்கு பிறவிப்பழக்கம். இவர்களைப்போல சொந்த பந்தங்களில்லாமல்வாழ்பவர்களுக்கு எது நடந்தாலும் அது பெரிதாக கண்டு கொள்ளப்படாது. உணவகங்களில் இவர்கள் தமிழில் பேசுகிறார்கள். ஆனால் பேருந்துகளில் இவர்கள்மிக சத்தமாக தமது மொழிகளில் பேசிக்கொள்வதை இங்குள்ள எளிய மக்கள்அச்சத்துடனே கவனித்து வருகிறார்கள். அதிகாரம் மிக்க நடத்துனர்களில் சிலர்இவர்கள் இந்தியில் பேசும் போது வலுக்கட்டாயமாக தமிழில் பதில் சொல்வது அல்லதுகண்டு கொள்ளாமல் இருப்பதும் நடக்கிறது. இது ஒரு வகைதான். இப்படிபலவகைகளில் இவர்களின் மீதான சிறு அச்சமும் வெறுப்பும் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இவர்கள் மேலே குறிப்பிட்டது போல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மக்களே கொடுக்கிற தண்டனைகள் மிக கொடூரமாக அமையலாம். முதலாளிகளின் லாப வெறிக்கும், தமது தீராத வறுமையின் கொடூரப்பிடியிலிருந்துதப்பிக்க சிறு ஆறுதலாகவும் சொற்ப கூலிக்கு இங்கே வந்து உழைக்கிற இவர்களைமுறைப்படுத்த வேண்டியது அவசியாமான ஒன்றாகிறது. இல்லாவிடில் ஈழத்தில்பெங்களூருவில் தமிழர்கள் மீது நடந்தது (காரண காரியங்கள் வேறு; இங்கே சொல்லவருவது தாக்குதல் குறித்து மட்டுமே) தமிழக தமிழர்களால் இவர்களுக்கும் நேரலாம். மும்பையில் பிற வட இந்தியர்களுக்கு நடந்ததை போலவும் நடக்கலாம். அதைதவிர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் முதலாளிகளுக்கும் உள்ளது.

கருத்துகள் இல்லை: