வியாழன், 21 ஜனவரி, 2010

பாதி கிழிக்கப்பட்ட
நாட்காட்டிக்கு
இரும்புப்பற்கள் இருக்குமென்று
ஐந்து வயதில் பிரகதீஷ்வரனுக்குத் தெரியாது.

விளையாடிய அவன் விரல்களை
அவை கிழித்து வைக்க...
கோபம் வந்தவனாய்
மூன்று பற்களுக்கும் ஒரே அடியென
வைத்தவனின்
கை ரத்தத்தில்
மீதமிருந்த நாள்கள் நனைந்தன.

கழிந்து போகாமலே
இருந்திருக்கக் கூடாதா
கடந்து போன அந்த நாட்கள்?

2 கருத்துகள்:

ஷங்கர் சொன்னது…

சூப்பர் ஜெ.பி...

கலக்கி இருக்கிங்க...

உங்கள் கவிதையிலே எனக்கு இதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு.

Jayaprakashvel சொன்னது…

இதற்கான நன்றி நண்பன் பால்ராமுக்குத்தான். இந்த நிகழ்வை சொன்னது அவன் தான். சொல்லி ஏழு வருடம் ஆகிறது. இப்பொதுதான் எழுதினேன்.