எழுதுவதை சமூகக் கடமையாக கருதுகிறவன் நான். எனது கருத்துருக்கள், அரசியல் மற்றும் பார்வைகள் மனித சமுதாய வரலாற்றின் நெடிய பக்கக்களில் இருந்து இரவல் பெறப்பட்டவை. அவற்றை எனது மொழியில் எனக்குப் பிடித்த ரகங்களில் எழுதுகிறேன். நிறைய பேர்களால் படிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
ஞாயிறு, 30 டிசம்பர், 2007
Shankar reply
கற்றது தமிழ் திரைப்படத்தை பற்றிய தங்களுடைய விமர்சனத்தில் எனக்கு உடன்பாடில்லை. இன்றைய தமிழ் சினிமாவின் சூழலில் இப்படி ஒரு திரைப்படத்தை தந்த இயக்குநர் ராமின் துணிச்சல் அசாதாரணமானது.ராம் இத்திரைப்படத்தின் மூலமாக முன்வைக்கும் சமூக கருத்துக்கள் யாவும் கவனிக்கப்படவேண்டியவை. இன்றைய சமுதாயம் இரு விதமான மனநிலை கொண்ட இளைஞர்களை உருவாக்கி வருகின்றது. மிக எளிதான உழைப்பிலேயே வேலை, பணம், காதல், என அனைத்திலுமே வெற்றி பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழ்ந்து வரும் ஒரு பிரிவு. இவை அனைத்துமே கனவில் மட்டுமே சாத்தியம் என எதுவுமே கிடைக்கப்பெறாமல் வெறும் ஏக்கம், விரக்தி, என வாழ்ந்து வரும் இன்னொரு பிரிவு. ஒருவர் தன் கல்லூரியில் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவே இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வினை நிர்ணயிக்கின்றது. இத்தகைய போக்கு மிகவும் ஆபத்தான ஒன்று."2000 வருடமாக இருந்து வரும் தமிழ் படித்தவனுக்கு 2000 ரூபாய் தான் சம்பளம்”"மெட்ராஸ்ல ரெண்டே ரெண்டு பேர்தான் இருக்காங்க... ஒன்னு சத்யம் தேட்டர் உள்ள... இன்னொன்னு சத்யம் தேட்டர் வெளிய..."என இதற்கு காரணமான சமுதாயத்தின் மீதான ராமின் கோபம்(உண்மையில் என்னுடைய கோபமும் கூட) படத்தின் பல காட்சிகளில் தெரிகின்றது."நெஜமாத்தான் சொல்றியா?" என ஆனந்தி கேட்கும் ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதை. இந்த ஒரே வசனம், இடம் பெறும் ஒவ்வொரு காட்சியிலும் சிரிப்பு, சிலிர்ப்பு, அழுகை என வெவ்வேறான உணர்வுகளை ஏற்படுத்துவது அற்புதம். பொருளாதாரம், தாய்மொழி என பல்வேறு சமூக பிரச்சனைகளை கையாண்டு இருந்தாலும், பிரச்சார நெடி சிறிதும் இன்றி இத்தனை நேர்த்தியாக ஒரு படத்தை தந்து, நம் வருங்கால சமுதாயத்திற்கு ஓர் எச்சரிக்கையினை விடுத்திருக்கும் இயக்குநர் ராமுக்கு நம் "டூர்ங் டாக்கிஸ்"இன் வாழ்த்துக்கள்.தமிழ் சினிமாவில் நமக்கு அலுத்துப்போன சைக்கோ தனத்தினை பயன்படுத்தாமல் இயல்பான தளத்திலேயே கதையோட்டம் இருந்திருக்கலாம். நம் சமூகத்தில் தமிழுக்கு இருக்கும் இன்றைய நிலைதான் 'கற்றது தமிழ்'க்கு நம் திரைத்துறையில் கிடைத்திருக்கும் அங்கீகாரமும் கூட...வருத்தத்துடன்சங்கர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக