எழுதுவதை சமூகக் கடமையாக கருதுகிறவன் நான். எனது கருத்துருக்கள், அரசியல் மற்றும் பார்வைகள் மனித சமுதாய வரலாற்றின் நெடிய பக்கக்களில் இருந்து இரவல் பெறப்பட்டவை. அவற்றை எனது மொழியில் எனக்குப் பிடித்த ரகங்களில் எழுதுகிறேன். நிறைய பேர்களால் படிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
ஞாயிறு, 30 டிசம்பர், 2007
கற்றது தமிழ்
ஒரு நல்ல படம் எடுக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் அரைகிணறு தான் தாண்டி இருக்கிறார்கள்.தீவிரமாக மெனக்கெட்டு யதார்தமாய் படம் எடுக்க ஆசைபட்டு சினிமா எடுத்து இருக்கிறார்கள்.குறிப்பாக சாமியார்கள் உடன் தொடர்பு அதை ஒட்டிய பாடல். மேன்சன் காட்சிகள்.மீன்டும் நாயகியை சென்னையில் சந்திப்பது. அரைவேக்காடு.ஆறுதல் ஜீவா, பாலசுப்ரமணியெம், நாயகி.நாயகியின் அறிமுக காட்சி தமிழில் நான் பார்த்த வகையில் புதுசு. ஜீவாவின் வழிசல் அழகு.மஹாராஷ்ட்ரா காட்சிகல் அருமை. உண்மையில் பிரபாகர் பாத்திரம் ரொம்ப நல்லவன். படத்தில் எனக்கு மிகம் பிடித்தது இறுதி வீடியோ காட்சி.அதில் வசனங்கள் அருமை. ஆவர்கள் சாவதும், அதற்கான விளக்கமும் மொக்கை. போல சின்ன குழந்தைகளின் பெரிய மனுஷத்தனமான கவித்துவமான வசனங்கள் செயற்கை.உங்கள் பார்வைகளையும் பதிவு செய்க.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக