எழுதுவதை சமூகக் கடமையாக கருதுகிறவன் நான். எனது கருத்துருக்கள், அரசியல் மற்றும் பார்வைகள் மனித சமுதாய வரலாற்றின் நெடிய பக்கக்களில் இருந்து இரவல் பெறப்பட்டவை. அவற்றை எனது மொழியில் எனக்குப் பிடித்த ரகங்களில் எழுதுகிறேன். நிறைய பேர்களால் படிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
ஞாயிறு, 30 டிசம்பர், 2007
நெய்தல்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஒத்த ரசனை உடைய ஆய்வு மாணவர்களாகிய நாங்கள் நெய்தல் என்ற பெயரில் ஒரு தனிச்சுற்று திங்கள் இலக்கிய இதழை வருகிற 2008 ஜனவரியில் இருந்து நடத்த உள்ளோம்.நாலணா வரையரையுமற்ற, அதீத எளிமையான, பாசாங்குகள்-பாகுபாடுகள் இல்லாத இந்த இதழுக்கான இடைவெளிகள் தமிழ் இலக்கிய வெளியில் நிரம்ப உள்ளதாகவே கருதுகிறோம். இலக்கிய தீரத்தில் புதிய வடிவங்கள், பரிசோதனைகள் மற்றும் சமூக அக்கறையிலெலுந்த படைப்புகளுக்கு நெய்தல் களமாக விளங்கும். மேற்சொன்ன காரணங்களே இதழின் அரசியல்.ஒரு நாடோடிக்கான ஒப்பனையுடன், பள்ளம் நோக்கி பாயும் நீரின் இலகுவோடு இதழை கற்பனை செய்து கொள்ளலாம்.இதழ் எல்லோருக்குமானது. படைப்பின், தொகுப்பின் இன்ன பிற இதழின் அனைத்து முகங்களின் இகழ்ச்சி-மகிழ்ச்சி மற்றும் உழைப்பில் பங்கு கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.ஆசிரியர் குழுஇரா.முத்தெழிழன்இ.ரமெஷ்சபரினாதன்சவுந்திரராஜன்ஜி. மோகன்ராஜ்ம.கிருஷ்ணராஜ்ந.கோப்பெருஞ்சோழன்ஹெச். சங்கர்ம. ஜெயப்பிரகாஷ்வேல்அருள்தொடர்புகளுக்குநெய்தல்(ம.ஜெயப்பிரகாஷ்வேல்)எம். புத்தூர் அஞ்சல்தொட்டியம் வட்டம்திருச்சி மாவட்டம
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக