
இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (Indian Medical Association-IMA) என்பது சுமார் இரண்டு லட்சம் இந்திய மருத்துவர்களைக் கொண்ட ஒரு சங்கம் போன்ற அமைப்பு இது ஒரு சாதனை செய்திருக்கிறது. உலகத்திலேயே முதல்முறையாக உணவுப் பொருட்களை அங்கீகரித்த முதல் மருத்துவர்களின் கூட்டமைப்பு என்ற சாதனைதான் அது. சுமார் இரன்டரை கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு பெப்சி கம்பெனியின் குவாக்கர் ஓட்ஸ் மற்றும் ட்ராப்பிக்கானா என்ற பழக்கூழ் இவை இரண்டிலும் IMA வின் லச்சினையை மூன்று ஆண்டுகளுக்கு உபயோகித்துக் கொள்ளும் வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தததை போட்டுக் கொண்டுள்ளது. இது 2011 வரை தொடரும். இதில் ட்ராப்பிக்கானா குழந்தைகளில் உடல் பருமனை தூண்டுவதாகவும் ஒரு ஆய்வு சொல்கிறது. இந்த ஒப்பந்தம் மருத்துவ நெறிகளுக்கு முரணானது என்று 2008 லியே இந்த அமைப்பின் மையக் குழு உறுப்பினர் டாக்டர். பாபு என்பவர் இந்திய மருத்துவ கழகத்திடம் (Medical Council of India-MCI) புகார் அளித்தார். இன்னும் கொஞ்சம் எளிதாக இந்த பிரச்சனை பற்றி சொல்ல முயல்கிறேன். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்பது ஒரு சங்கம். அவர்களே சில படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கினால்? அப்படித்தான் செய்திருக்கிறது IMA. இதை விசாரிக்க MCI சில காலம் எடுத்துக் கொண்டது. IMA வை கேள்வி கேட்க தனக்கு அதிகாரம் உள்ளதா என்பதில் அதற்கு கொஞ்சம் சந்தேகம். இடையில் மனித உரிமைகள் ஆணையம் IMA வுக்கு கேள்வி எழுப்பிய பின் தான் MCI சுறுசுறுப்பானது. MCI என்பது ஒரு சட்டப்பூர்வமான தனியதிகாரம் கொண்ட அமைப்பு. கேத்தன் சேத்தி என்ற இதன் முன்னாள் தலைவர்தான் முறைகேடாக மருத்துவக் கல்ல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய வகையில் டன் கணக்கில் தங்கம் வைத்திருந்து சமீபத்தில் பரபரப்பு கிளப்பினார். இது பற்றி விசாரணைகள் மெதுவாக நடந்து 2010 இல் தான் IMA வுக்கு நோட்டிஸ் வழங்கப் பட்டது. அவர்களும் முதலில் அது ஒரு ஊட்டச்சத்து விழிப்புணர்வுக்கான ஒப்பந்தம் தான் அதுவென்று சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் MCI அதை ஒப்புக் கொள்ளவில்லை. இப்பொது IMA ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தவறானது என்பதையும் ஒப்புக் கொண்டு விட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால் பெப்சி நிறுவனத்துக்கு பெரிய தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பயப்படுகிறது. இது மாதிரி அமெரிக்காவில் 1988 இல் அமெரிக்க மருத்துவர்களின் கூட்டமைப்பு ஒரு மருத்து உபகரணத்துக்கு அங்கீகாரம் வழங்கிய பிரச்சனையில் சன்பீம் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறிக்க சுமார் 45 கோடிகல் இந்திய மதிப்பில் கொடுக்க வேண்டி இருந்தது. அப்படி பெரிய தொகை கொடுக்க முடியாது என்பதால் IMA இன்னமும் அந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள வில்லை. MCI கடைசியாக சீக்கிரம் அந்த ஒப்பந்தத்தை உடைக்குமாறு சொல்லி இருக்கிறது. ஆனால் அப்படி உடைக்க முடியாத நிலையில் IMA உள்ளது.
இந்த ஒட்டு மொத்த பிரச்சனையிலும் இறண்டு நெருடல்கல் எனக்கு எழுகின்றன. இப்படி தனக்கு சம்பந்தமில்லாத அதிகாரமில்லாத ஒன்றை அங்கீகரிக்க IMA வுக்கு எப்படி தைரியம் வந்தது? . IMA இந்த ஒன்றோடு நின்று விடவில்லை. டெட்டால், லைஸால், அக்குவாகார்டு, பாம்ப்பர் நாப்கின்கள் மற்றும் ஓடோமாஸ் என அதன் அங்கீகார லீலைகள் போய்க்கொண்டே இருக்கிறது. IMA வுக்கு தெரியாவிட்டாலும் கண்டிப்பாக பெப்சிக்கு தெரிந்திருக்கும். தனது பொருட்களின் விளம்பரத்துக்காக வியாபார வெறியோடு இப்படி ஒரு முறைகேட்டில் அது இறங்கி உள்ளது.
சில ஆண்டுகள் முன்பாக ப்ரான்ச் ஆயில் விளம்பரத்தில் சென்னை பல்கலைக் கழகத்தால் சான்றளிக்கப் பட்டது என்ற விளம்பரம் வந்தது. அப்போது அங்கெ ஆய்வு செய்து கொண்டிருந்தேன். விசாரிக்கும் போது அந்த ஆயில் உண்மையிலேயே பரிசோதிக்கப் பட்டு நல்ல முடிவுகளையே தந்திருந்தது. அந்த ஆய்வின் முடிவை சாண் றிதழ் என்ற தோரணையில் அந்த நிறுவனம் விளம்பரப்படுத்துக் கொண்டது. அவர்களால் அங்கீகரிக்கப் பட்டது இவர்களால் அங்கீகரிக்கப் பட்டது என்ற ரீதியிலான விளம்பரங்கள் நுகர்வோரை ஈர்க்கும். ஆனால் அந்த பொருளை அங்கீகரிக்க அதிகாரம் தகுதி உண்டாவென மக்களுக்கு எப்படி தெரியும்?. அதை எல்லாம் விசாரிக்க முறையான சட்டங்கள் நம்மிடமில்லை. அதற்கான சட்டங்கள் போட இன்னும் நம் அரசுகள் தயாராக இல்லை என்பது மிகவும் வருந்த வேண்டிய ஒன்று.
பள்ளிக்குழந்தைகளை கால்டாக்சி ஓட்டுனர் கடத்தினால் இனிமேல் கால்டாக்சி ஓட்டுனர்களை கண்காணிக்க அரசு புதிய விதிமுறைகள் போடும். கடத்தலை இதனால் தடுத்து விட முடியாது. பழைய ஜோக் ஒன்று உள்ளது. ஒருவன் தினமும் கடத்தி வருகிறான் என்று தெரிய வரும். காவலர்களும் தினமும் அவனையும் வாகனத்தையும் சோதனை செய்வார்கள். ஒன்றும் தேறாது. ஆனால் அவன் கடத்தியது வாகனங்களை என்று தெரியாது அவர்களுக்கு. அப்படியான வகையில் ஒவ்வொன்றாக விதம் விதமான முறைகேடுகளில் இறங்கி வரும் வியாபார நிறுவங்களின் மொத்த நோக்கம் வியாபார, லாப வெறிதானென்று அரசுக்கு தெரியாமலில்லை. ஆனால் அவர்கள் போடுகிற எச்சில் சோற்றுக்கு காத்துக் கிடைக்கும் காக்கைகளின் கும்பல் போல ஆளும் வர்க்கம் இருக்கும் வரை இதை மாற்ற முடியாது.
News links: http://timesofindia.indiatimes.com/india/Watchdog-outlaws-IMA-endorsements/articleshow/6856172.cms
4 கருத்துகள்:
நல்ல பதிவு. நிறைய செய்திகள் ... நடை அருமை. பாராட்டுக்கள்
நனறி சரவணன்
இப்பதான் படித்தேன் ஜே.பி. வேதனையான செய்தி. மக்களின் நுகர்பொருள் தொடர்பான விழிப்புணர்வு மிக மோசமாக உள்ளது. இன்னொரு புறம் இதுபோன்ற சம்பவங்கள் (நீங்கள் சொல்லாமல் இருந்தால் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவே.) நாம் நம்பிக்கொண்டிருக்கும் சான்றிதழ்களின் மீது குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. ரொம்ப படிச்சிட்டதா நினைச்சிட்ருக்க என் நிலமையே இப்படி என்றால்... இன்னும் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் நிலைமை நினைத்தால் வேதனையாக உள்ளது ஜே.பி.
இது போல பல விசயங்கள் ஆங்கில செய்தி தாள்களில் செய்தி சானல்களில் வருகின்றன. தமிழ் பத்திரிக்கைகளும் செய்தி தாள்களும் செய்தி சானல்களும் இவற்றை எல்லாம் சட்டை செய்வதே இல்லை. அதனாலேயெ பொது மக்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை. மிகவும் மோசமான சூழல் இது. தெரிந்த நாமாவது முடிந்த வரை மற்றவர்களுக்கு தெரியச் செய்வோம்.
கருத்துரையிடுக