செவ்வாய், 26 ஏப்ரல், 2011

ஜான் டேவிட் - இன்னுமொரு ஆயுள்தண்டனை தேவையா?



கடந்த வாரத்தில் இந்த வார ஆரம்பத்தில் ஜான் டேவிட் மறுபடியும் செய்திகளில் அடிபட்ட வண்ணம் உள்ளார். நாவரசு கொலை வழக்கில் ஒரு ஆயுள் தண்டனையை அனுபவித்து விட்டு சில வருடங்கள் வெளியில் முகம் Justify Fullதெரியாமல் சகஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். சமீபத்தில் இவரது இரட்டை ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து மீண்டு செய்திகளில் அடிபட்டார். கரூரில் உள்ள அவரின் சொந்த வீடு காட்டப்பட்டது. அவரின் பெற்றோர் வீட்டைப் பூட்டிச்சென்று விட்டதாக சொன்னார்கள். அவரை வலைவீசி தேடுவதாக சொன்னார்கள். பாஸ்போர்ட் முடக்கம், சொந்த பெயரில் பாஸ்போர்ட் இல்லை என சகட்டு மெனிக்கு தகவல்கள் உலா வந்தன. இப்போது அவர் கடலூர் கோர்ர்டில் சரணடைந்து விட்டார். இதையும் இந்த தின வகையறா தமில் செய்தித்தாள்கள் மிகவும் நாகரீகமற்ற வகையில் செய்திகள் வெளியிடுகின்றன.

படிக்கப் படிக்க கோபம் தான் வந்தது. அவர் வெளி நாட்டுக்கு தப்பியோடி விட்டார் என்றும் பாதிரியாராகி விட்டாரென்றும் பல கதைகள் முன்பு உலவின. ஆனால் அவர் ஜான் மாரிமுத்து என்ற பெயரில் ஒரு BPஓ நிறுவனத்தில் மிகவும் நல்ல விதமாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் நுனி நாக்கு ஆங்கில புலமையை மிகவும் அங்கலாய்ப்போடு தினகரன் நாளிதழ் எழுதியது. அதில் பெண்களை வசியப்படுத்துபவனின் கெடு கட்ட தனத்துக்கு ஒப்பானதொரு தொணிஏ எனக்குத் தெரிந்தது. இந்த மாதிரி இரண்டு ரூபாய்க்கு விற்கப்படும் நாளிதழ்களை படிப்போர் நிரைய. அவர்களுக்கு இந்த செய்திகல் தப்பான பிம்பத்தை உருவாக்குகின்ரன. ஜான் டேவிட் வெளியில் வந்து எதாவது சட்டவிரோத மக்கல் விரோத காரியங்களில் ஈடு பட்டு இப்போது மீண்டும் மாட்டிக் கொண்டாலாவது பெசலாம். அவர் பாவம் போல அமைதியாக வேலை தான் பார்த்து வந்துள்ளார். அவரின் ஒரு ஆயுட்கால சிறைவாசம் கண்டிப்பாக அவருக்குப் போதுமானது என்பது என் எண்ணம். திருந்தி வாழ்பரை மறுபடியும் பழைய குற்றத்துக்கக சிறையிலடைப்பது சரியல்ல என்றே படுகிறது. காவிரி தண்ணிக்கும், முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கும் பாலாறு பிரச்சனைகலுக்கும் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யாத தமிலக அரசு ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை எதிர்த்து என்னவெல்லாம் பன்னி வருகிறது. தனி மனிதரான ஜான் டேவிட்டையும் இந்த அரசின் கொடுங்கரங்கள் விட்டு வைக்கவில்லை. ஒரு தலைமுறையையே சிறையில் கழித்து விட்ட நளினி முருகன் பேரறிவாளனெல்லாம் சிறையிலேயே வாடுவதால் இந்த அரசுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது? தா கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க முடியாத அரசு இங்கெ ஏன் இப்படி ஆட்டம் போடுகிறது? எனது ஆதங்கத்தை ஒட்டிய வேறு ஒரு பதிவையும் கீழுள்ள இணைப்பில் படியுங்கள்.

ஜான் பாண்டியனும், ஜான் டேவிட்டும்!


18 கருத்துகள்:

yoghi சொன்னது…

என்னதான் சமாதானம் சொன்னாலும் உச்சனீதிமன்ர தீர்ப்பு சரி என்ரு என் மனதிர்க்கு படுகிரடது

Seshadri சொன்னது…

i think you are related with john david.

law should not be unbiased.

bandhu சொன்னது…

//நாவரசு கொலை வழக்கில் ஒரு ஆயுள் தண்டனையை அனுபவித்து விட்டு//
இல்லை. ஆயுள் தண்டனையை முழுமையாக அனுபவிக்கவில்லை. பாதியில் உயர் நீதி மன்றத்தில் விடுதலை செய்யப்பட்டார்

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

திருந்தினாலுமே தப்பு செய்தவர் தண்டனை அனுபவிப்பது மற்றவருக்கு முன்னுதாரணமே..

என்னதான் ஜான் டேவிட் திருந்தினாலும் சில விஷயங்கள் மக்களால் ஜீரணிக்க முடியாதுதான்..

அவர் இன்று தன் கடின உழைப்பாலும் நற்செயல்களாலும் மேலாளர் அளவுக்கு உயர்ந்திருந்தாலும், சட்டத்தை மதித்து சரணடைந்திருப்பது நன்று..

சிறையில் இருந்துகொண்டே மேற்படிப்பு படிக்க ஏற்பாடு செய்யலாம், கணினி சம்பந்தப்பட்ட வேலை கூட தரலாம் அவர் நன்னடத்தைக்கு பரிசாக..

சமூகத்துக்கு முன்னுதாரணமாக இருக்கவாவது சட்டப்படி அளித்த தண்டனையை அனுபவித்தே தீரணும் .. அதற்கான மனப்பக்குவம் அடைவது மட்டுமே ஜான் டேவிட் செய்துகொள்ளவேண்டியது.. கூட இருப்பவர்களும் அதற்கான ஊக்கம் தரலாம்.. அவர் நம்பிய கடவுள் அடையாத துன்பங்களா?..

சிறையிலிருந்தே சாதிக்க முடியும் மனம் விசாலாமாயிருந்தால்.. மனம்தான் காரணம் . மாளிகையிலிருந்தும் நிம்மதியில்லாமல் இருப்போர் எத்தனை பேர்.?..

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=32403ஆந்திராவில் கைதிகளுக்கு கால்சென்டர் வேலை

Jayaprakashvel சொன்னது…

@@@ சமூகத்துக்கு முன்னுதாரணமாக இருக்கவாவது சட்டப்படி அளித்த தண்டனையை அனுபவித்தே தீரணும் .. அதற்கான மனப்பக்குவம் அடைவது மட்டுமே ஜான் டேவிட் செய்துகொள்ளவேண்டியது.. @@@

இது சரியான வாதமகத் தெரிகிறது. என்றாலும் திருந்தி வாழ முயல்கிர ஒரு மனிதனை மீண்டும் சிறையில் அடைப்பது ஒரு நாகரீகமான சமூகத்தின் செயல் அல்ல. நாம் இன்னும் நாகரீகம் அடையவில்லை என்றாலும் கொஞ்சம் முயற்சி செய்யலாம். இந்த சட்டப்படி என்ற வார்த்தை எனக்கு நெருடலாக இருக்கிறது. சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. நான் க்டொஉத்த இணைப்பில் ஜான் டேவிட் ஜான் பான்டியன் ஒப்பீட்டை ஒரு முறை படித்துப் பாருங்கள். எத்தனையொ குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பி அல்லது தள்ளி வைத்து விட்டு அரசியல்வாதிகளாக கல்வி நிறுவன நிதி நிறுவன முதளாலிகளாக உலாவருகிற இந்த நாட்டில் சட்டம் எல்லோருக்கும் பொதுவென்பது பசப்புவாதம்.

மருந்தில கலப்படம் செய்தவர்கள், குழந்தைகள் உணவுப்பொருளில் கலப்படம் செய்தவர்கள், சவப்பெட்டியில் ஊழல் செய்தவர்கள், அனாதைகளது ஆதரவுப் பணத்துக்கு லஞ்சம் வாங்குபவர்கள் இப்படி எண்ணற்ற கொடிய குற்றங்களை ஒபிடும் போது ஜான் டேவிட் செய்தது பெரிய குற்றமே அனாலும் அவரே அந்த தண்டனை போதும் என்றெண்ணி முறையிட்டு சகஜ வாழ்க்கைக்கு திரும்ப முயல்கையில் நாம் அவரை குறைந்த பட்சம் மனதலவிலாவது ஆதரிக்க வேண்டும் என்பது என் எண்ணம். நான் சொல்வது சட்டம் சம்பந்தப் பட்டது அல்ல. மனித வாழ்வியல் அறம் சார்ந்தது.

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிகள். முரண்கள் இருப்பின் மேற்கொண்டு பேசுவோம்.

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

சட்டம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.//

அதை பற்றி நாம் இப்போது ஒப்பீடு செய்து கவலைப்படக்கூடாது..

தபு செய்தவர் யாராக இருப்பினும், என் பிள்ளையாக இருந்தாலுமே சட்டத்தின் முன் நிற்கணும் என்பதே நாம் நம் உலகுக்கு செய்யும் நன்மையாக இருக்கமுடியும்..

சிறை செல்வதை ஏன் எல்லாரும் பெரிய அவமானமாகவோ பயத்தோடோ எண்ணணும்.. நல்லெண்ணம் , வாழ்க்கையில் எளிமை, தெளிவடைந்தோருக்கு எல்லா இடமும் ஒன்றே.. சிறையிலிருந்து பலர் மிகச்சிறந்த படைப்புகள் உருவாக்கியுள்ளனர்..

நான் தவறு செய்தேன் நான் தண்டனை அனுபவிக்க போகிறேன் என பெருமையாக சொல்லக்கூடிய காலம் எப்ப வரும்.. அப்படி நம் வாரிசுகளை பழக்குவோமா?..

மதம் பர்ரி சொல்லித்தர கட்டாயமாக கோவிலுக்கு , மசூதிக்கு, ஆலயத்துக்கு அழைத்து செல்பவர்களில் எத்தனை பேர் மனிதத்தன்மையை சொல்லித்தருகிறோம்.?.

சிறை சென்றாலும் கூட அற்புதங்களை நிகழ்த்திக்காட்டும் வல்லமையை குற்றவாளிகளுக்கு தருவோம்..

ஜான் டேவிட் கு இறக்கப்பட்டால் எல்லா குற்றவாளிகளையும் வெளியே விடலாமே..?

பலர் திருந்தியிருப்பார்களே?.. வருந்தியிருப்பார்களே.. செய்யாத தண்டனைக்காக பல குடும்பம் , குழந்தைகள் இன்று தெருவில் நிற்குதே.. சமூகத்தால் புறக்கணிக்கபடுகிறார்களே.. என்ன பதில் வைத்துள்ளோம் அவர்கள் அனைவருக்கும்,.?

சட்டம் கடுமையாக இருந்துமே பயப்படாமல் கொலைகள் நடக்கும்போது சட்டம் இப்படி இறக்கப்படுமானால்.?..

Let us teach our kids " Its O.K to make mistakes & learn in hard way.. sometimes.. But lets also explain the consequences they have to bear..

மாற்றம் நம் ஒவ்வொருவரிலிருந்தும் வரணும்..பாரபட்சமே கூடாது இதில்..

Jayaprakashvel சொன்னது…

சட்டம் ஒரே மாதிரி இருப்பதில்லை என்றாலும் மனிதத்தன்மையின் அடிப்படையில் செய்த தப்புக்கு தண்டனை அனுபவிப்பது சரி என்கிற உங்கள் கருத்தை ஏற்கிறேன். இந்த வகையில் ஜான் டேவிட் மேல்முறையீட்டில் சாட்சியங்கள் சரியாக இலலை என்பதாலேயே அவரது தண்டனை ரத்து செய்யப் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். இது உண்மையிலேயே தப்புதான். என்றாலும் நிங்கள் சொல்கிற அதே மனிதத்தன்மையின் அடிப்படையில் இது நாள் வரையிலான அவரின் சிறை தண்டனையே போதுமானது என்று ஒரு பரிவின் அடிப்படியில் நம்புகிறேன். நீங்க சொல்றது போல எல்லோருக்கும் இந்தக் கருணை வாய்ப்பதில்லை. அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கு. வாழ்ந்து தான் பார்க்கட்டுமே.
குற்றம் செய்யக் கூடாது என்ற மனமாற்றம் தண்டனைகள் கடுமையானால் மட்டும் வந்து விடாது. அது ஒரு பண்பாட்டுச் செழுமையின் அடையாளம். நம் தமிழ் சமுகம் அப்படியான ஒரு செழுமைக்கு திரும்ப வேண்டும் என்பதே என் விருப்பம்.

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

நம் தமிழ் சமுகம் அப்படியான ஒரு செழுமைக்கு திரும்ப வேண்டும் என்பதே என் விருப்பம்.//

நிச்சயமா ஏற்புடையதே.. ஆனால் இன்னும் கீழிரங்கி செல்கிறது.. :((.. இன்றைய என் பதிவை பாருங்கள் புரியும்..

----


ஏழை என்ற இளக்காரம்?.

http://punnagaithesam.blogspot.com/2011/04/blog-post_27.html

தருமி சொன்னது…

இந்தப் பதிவை வாசித்த பின் உங்களைப் பார்த்து சிரிக்கத்தான் தோன்றுகிறது. யார்மேல் உங்களுக்கு இப்படி ஒரு கருணை?

//அவர் இன்று தன் கடின உழைப்பாலும் நற்செயல்களாலும் மேலாளர் அளவுக்கு உயர்ந்திருந்தாலும்,//

பின்னீட்டீங்க!

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

நாவரசு நம் வீட்டு பிள்ளையாக இருந்தால் இதே கருணை ஜான் டேவிட் மீது வருமா என நாம் நம்மை கேட்டுக்கொள்ளணும்..

Jayaprakashvel சொன்னது…

அப்படி ஜான் டேவிட் ஒரு முப்பதாண்டுகள் சிறையில் இருந்து விட்டால் நாவரசு திரும்ப வந்து விடுவாரா? அவர் அப்படி முப்பதாண்டுகள் சிறையில் கஷ்டப்படுவதை பேராசிரியர் பொன்னுசாமி சந்தோசமாக எடுத்துக் கொள்வர் என்றால் அவரும் ஒரு விதத்தில் மன நோயாளியே. அடுத்தவன் கஷ்டத்தில் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கிறது என்றால் என்ன அது?

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

அவர் அப்படி முப்பதாண்டுகள் சிறையில் கஷ்டப்படுவதை பேராசிரியர் பொன்னுசாமி சந்தோசமாக எடுத்துக் கொள்வர் என்றால் அவரும் ஒரு விதத்தில் மன நோயாளியே. //

மிகவும் கண்டிக்கத்தக்கது .. வருந்துகின்றேன்..

அவர் பேரை கூட நாம் இங்கே உபயோகிக்கக்கூடாது..

ஆறா ரணம் புத்திர சோகம்..

ஒரு நிமிடம் நாவரசு நம் பிள்ளையாய் நினைத்துப்பாருங்கள்..

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

Jayaprakashvel கூறியது...

அப்படி ஜான் டேவிட் ஒரு முப்பதாண்டுகள் சிறையில் இருந்து விட்டால் நாவரசு திரும்ப வந்து விடுவாரா? //

மன்னிக்கவும் . முட்டால்தனமான கேள்வி..

உங்கள் கூற்றுப்படி உலகிலுள்ள எல்லா கொலையாளிகளையும், வன்புணர்ச்சி செய்தவனையும் , கொள்ளையடித்தவனையும் திருந்திவிட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக வெளியே விடுவோமா?..

ஜான் டேவிட் மனம் திரும்பினாரா , இப்ப நல்லவரா என்பது பிரச்னையேயில்லை.. தெரியாமலே செய்திருந்தாலும், ஒரு கொலைக்கான தண்டனை.. சட்டம் அளித்துள்ளது.. மக்களுக்கு சட்டத்தின் மேல் மரியாதை , பயம் வரவைக்கணும்.. அதுவும் குடிமக்களை பாதுகாக்கும் ஒரு நாட்டின் கடமை..

இன்று ஜான் டேவிட் மனம் திரும்பியதால் வெளியே விட்டால் இதுவே ஒரு மோசமான முன்னுதாரணமாகும் மர்ற எல்லாருக்கும்..

சாதிக்க நினைப்பவருக்கு சிறைகூட பெரிய விஷயமேயில்லை.. அதற்கான வழிவகை சொல்லித்தரலாம்..


போதைப்பொருள் கடத்தலுக்காய் 100 வருட சிறை தண்டனை உடைய நாடுகள் இன்னும் இருக்கு..

நன்னடத்தை மூலம் பத்தே ஆண்டுகளில் வெளியே சென்றவருண்டு..

Jayaprakashvel சொன்னது…

@@@
மிகவும் கண்டிக்கத்தக்கது .. வருந்துகின்றேன்..
@@@
நானும் அது குறித்து வருந்துகிறேன். என்றாலும் நான் சொல்ல வருவது அவர் அப்படி எதிர் பார்க்கிறார் என்று அல்ல. அது ஒரு உதாரணமே. அதனை ஒட்டி: ஒரு கொலை நடந்தால் சம்பந்தப் பட்டவர்கள் ஆத்திரத்தில் பழி வாங்க கொலை செய்வதுண்டு. அது உடனே நடந்தால் அது கோபம். ரெண்டு மூனு வர்சம் கழிச்சும் ஆறலன்ன அது குரோதம் .

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

அரபு நாடுகளில் ஒரு வழக்கம் உண்டு ( னு நினைக்கிறேன் ) .


தவறு செய்தவரை பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மன்னித்து தண்டனையை குறைக்க வழி இருப்பதாய்..

ஜான் டேவிட் நாவரசின் பெற்றோரை சந்தித்து தவறுக்கு வருந்தினால் ஒருவேளை ( கவனிக்க ஒருவேளை ) மன்னிக்கலாம்..சில நேரம் சந்திக்க கூட பிரியப்பட மாட்டார்கள்..

ஒரு வேதனையை எப்படி எடுப்பது என்பது ஆளாளுக்கு மாறுபடும்.. அதற்கான முழு உரிமையும் பாதிக்கப்பட்டவருக்குண்டு..அதை மனநோயாலி , அது இது ன்னு நாம் விமர்சிக்க கூட நமக்கு தகுதியில்லை என்பதென் தாழ்மையான கருத்து..

இருவர் நிலைமை பற்றி ஏதும் தெரியாமல் நாம் இங்கே பேசக்கூட முடியாது..

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

ரெண்டு மூனு வர்சம் கழிச்சும் ஆறலன்ன அது குரோதம் . //


நாவினாற் சுட்ட வடுவே ஆறாத போது?...

Jayaprakashvel சொன்னது…

@@@
அதற்கான முழு உரிமையும் பாதிக்கப்பட்டவருக்குண்டு..அதை மனநோயாலி , அது இது ன்னு நாம் விமர்சிக்க கூட நமக்கு தகுதியில்லை
@@@
அது அப்படியான விமர்சனம் அல்ல. ஒரு உதரணத்துக்கு சொன்னது. ஆனால் பேராசிரியர் அப்படி நினைக்க கூடாது என்பதே என் எண்ணம். அவர் பெருந்தன்மையோடு ஜான் டேவிட்டை மன்னிக்க வேண்டும். ஜான் டேவிட்டுக்கு அந்தளவு இன்னும் புத்தி இலலை. இன்னமும் குறுக்கு வழியில் தண்டனை இல்லாமல் வாழவே விரும்புகிறார்.

சீனு சொன்னது…

அவர் திருந்தியிருந்தாலாவது பரவாயில்லையே...இப்போ 'செய்யாத குற்றத்துக்கு ஏன் என் மனகை தண்டிக்கறீங்க'னு அவரோட அம்மா திட்டுறார். 'நாவரசு யாருன்னே தெரியாது'னு அவர் சொல்லுறார். இப்போ சொல்லுங்க...