உயரமான சுவர்களின் மேல்
கண்ணாடிச்சில்லுகள் பதிக்கப் பட்டு கன்னா
பாதுகாக்கப் படும்
இருப்புப் பாதையின் புறத்தில்
நெடிய அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்கிய
வெளிச்சம் குறைவான
அந்த குறுக்குச்சந்தில்
சிறுநீர் கழிக்கவென
தோதான இடங்கள் நிறைய உண்டு .
முன்பு பெய்தவர்களின் நீரை
சாலையில் வழிய விட்டபடி
அசைவற்றிருந்தன
பெயர் தெரியாத சில செடிகள்.
சிறிய ஆறுகள் போல
தோற்றம் காட்டும் அவைகளை
தாண்டிக் கடந்து
எனக்கான இடைவெளியில் நிரம்பினேன்.
அவ்வப்போது வரும்
வாகன முகப்பு விளக்கின் ஒளிக்கு
முகத்தை மட்டும் மறைத்துக் கொள்ளல்
போதுமானதாயிருந்தது ;
குறியை மறைக்கப் பிரயத்தனம் இல்லை.
காலணியில் ஈரம் படாதிருக்க
கால்களை அகலமாக்கிக் கொள்ளல் அவசியம்
என் பெயர் சுமந்த படி
மேலும் ஒரு குறுநதி சாலையை நனைத்தோடும்
காய்ந்து பின்னொரு நாள்
சுவடாய் நிலைக்கும்.
2 கருத்துகள்:
சில் நதிகள் என் பேரிலும் ஓடிக்கொண்டு இருக்கின்றன...
அருமை ஜே.பி
சில நதிகள் என் பேரிலும் ஓடிக்கொண்டு இருக்கின்றன...
அருமை ஜே.பி
கருத்துரையிடுக