http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5278282608014400729&na=1&nst=1 என்ற ஆர்குட் அரங்கில் பாரதியை பற்றிய விமர்சனங்களுக்கு எனது பதில் பதிவுகளை இங்கே பதிகிறேன். அங்கே எனது நிறைய பதிவுகள்அழித்தொழிக்கப் பட்டன. அதற்காக எஞ்சியவற்றை காக்க இந்த இடுகை .பாரதிக்கு நான் குடை பிடிக்க முழுமுதற் காரணம் மனிதர்களை நான் அவர்களின் பலவீனங்களோடு ஏற்றுக்கொள்வது தான். பாரதி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவன் அல்ல. அதுபோல பாரதி எங்கும் தன்னை எல்லாம் சரியாக சொல்பவன் எனவில்லை. அவனின் படைப்பாற்றலை படைப்பின் தரத்தை வெகு கர்வத்துடன் கொண்ட்டடியவ. வேறொரு நண்பர் சொன்னது போல இந்த நவீன உலகின் அளவுகோல்களைக் கொண்டு பாரதியை அளக்க முற்படுவது நுஉறு வருடங்கள் முன்பு தங்கம் ஓரணா என்று இன்று அங்கலாய்ப்பதற்கு சமம். கொண்டாடியவன். அவன் பிறந்து வளர்ந்த சமுதாயம், அவனை வாட்டி வதைத்த வறுமை இவற்றின் இடையில் மனித குலத்தை பெரிதும் நேசித்த அவன் எழுத்துக்களை வைத்துப் பாருங்கள். அவனின் இந்து மத அபிமானம் வர்ணாசிரம கருத்துகள் என நீங்கள் சொல்வன எல்லாம் அவன் பார்வையில் வேறு. அதை மறுப்பதற்கில்லை . அவன் வாழ்ந்த காலத்திl அவனிலும் மேலாய் சிந்தித்த செயலாற்றிய யாராவது ஒருவரை எனக்கு அடையாளம் காட்டுங்கள். எனக்கு நிறைய படிப்பறிவு இல்லை. தெரிந்து கொள்கிறேன். போக அவன் வாழ்ந்த காலம் ரொம்ப கொஞ்சம். அவன் எழுதியது ரொம்ப. ஒவ்வொன்றும் அவன் வெவ்வேறு மனநிலையில் எழுதியதாக இருக்கலாம். வெள்ளையர்களை எதிர்த்து எழுதியவன் வேல்ஸ் இளவரசருக்கு வாழ்த்துப்பா எழுது உள்ளான் . அதற்காக அவனை ஆங்கிலேயரின் அடிவருடி என்று முத்திரை குத்தி விட முடியுமா? அவன் மனித நேயம் அல்ல உயிர் நேயத்தைப் பாருங்கள். எவன் எழுதினான் அப்போது இப்படி? அல்லது இப்போது?பாரதியின் படைப்புகளை படிக்க அவற்றின் எழுத்தப்பட்ட காலத்தையும் கவனித்தில் கொள்ளவும்.பாரதி காலத்தை மீறி கனவு கண்ட , காலத்தை மீறி சிந்தித்த பிறவிக் கலைஞன் . அவன் வேறொரு நபரை ஆகவே முடியாது. அவன் எழுத்துக்களை வெறும் கவிதைகள் அல்ல எல்லா தர படிப்புகளையும் அவன் வாழ்ந்த காலத்தோடு ஒப்பிட்டு படியுங்கள். பாரதிக்கு சமமான அவன் காலத்திய தமிழ் படைப்பாளி ஒரு நபரைக் காட்டுங்கள். வேறு யாரும் இல்லாததால் அவனை ஏத்திக் கொண்டாடவில்லை. அவனின் தனித்தன்மையை சொல்லவே இதை எழுதினேன்.பாரதி மன்னிப்புக்கடிதம் கொடுத்து வெளியே வந்தது மறைக்கைப்படாத ஒன்று. அதற்காக பாரதி பார்ப்பான் என்பதற்காக வெட்கப்பட வேண்டியது இல்லை. அது ராஜ தந்திரம் இல்லை தான். அது ஒரு கஷ்டப்பட்ட மனிதன் தன் வாழ்வை தக்க வைத்துக் கொள்ள மேற்கொண்ட நடவடிக்கியாக இருக்கலாம். மேலும் பாரதி விடுதலை வீரனாக இருந்தே ஆக வேண்டும் என்பது கட்டாயமா? அவன் எடுத்த தொட்ட விசயங்கள் மிகப்பல. அதில் ஒன்று விடுதலை போராட்டம்.மொத்தமாக சொல்வதென்றால் பாரதி ஒரு அவதாரம் அல்ல. ஒரு சாதாரண மனிதன் தான். ஆனால் காலத்தை மீறிய கனவுகளில் வாழ்ந்த ஒரு மகாகவிஞன். உங்கள் வார்த்தை சத்தியம் அவன் மகாகவிஞன் தான். நீங்கள் அந்த க ஹ வாக இருந்தால் kuda தப்பில்லை. உங்களுக்கு ஹ பிடிக்கிறது என்றால் நீங்கள் அவனில் உள்ள பார்ப்பன பாரதியை மட்டும் பார்த்து இருக்கிறீர்கள். பாரதி மிகச்சில ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவன். தனது நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றியவன். அனால் எந்த காலத்தும் தான் ஒரு மகா படைப்பாளி என்பதை மறக்கவே இல்லை. காந்தி பிரிட்டனில் படித்ததும் தென் ஆபிரிக்காவில் தொழில் செய்ததும் இந்திய விடுதலைக்காக தயார் செய்து கொள்ள அல்ல. ஒரு நேரத்தில் அவருக்கு இந்திய விடுதலைக்காக துணிந்து பாடுபட எண்ணம் தோன்றி இருக்கிறது. பாரதி kuda நிவேதிதா வை சந்திக்கும் முன்பு தனது மனைவிக்கு சம மரியாதை கொடுத்தது இல்லை. அதற்காக ஆணாதிக்கவாதி என்று முத்திரை குத்துவீர்களா? ஜப்பான் மற்றும் ஜெர்மனி உதவியை தேடிய போஸ் அவர்களை உங்கள் அகராதியில் எந்த வார்த்தை கொண்டு விளிபபீர்கள்? பாரதி தொடந்து மாறிக்கொண்டே இருந்தவன். காலவரிசைப்படி அவன் படிப்புகளை படியுங்கள். பாரதி ஒரு முடிவுபெறாத சகாப்தம். இன்னும் பாரதிக்கான தேவை இருக்கிறது. பாரதியில் எந்த பாரதியை எடுத்துக்கொண்டால் நமக்கு நல்லது என பார்த்து எடுத்துக்கொள்வோம். உங்களுக்கு உவப்பான பாரதி குஉட இருக்கிறார். திறந்த மனதோடு படித்துப் பாருங்கள்.
பாரதிக்கு யாரும் மகாகவி பட்டம் காமராஜர் அரங்கில் விழா எடுத்து கொடுக்கவில்லை. மேலாக பாரதியே தன்னை பல இடங்களில் பல தருணங்களில் மகாகவி என்று ஒப்புக் கொண்டு உள்ளான். அப்படி ஒப்புக் கொள்ள அறிவித்துக் கொள்ள மகா நேர்மையும் தைரியமும் தன் அறிவுத் தெளிவில் அசாத்திய நம்பிக்கையும் வேண்டும். கவியரசு என்பதை எதிர்த்தால் கவிப்பேரரசு ஆக்கிக் கொள்ளும் உத்தி அல்ல அது. அது ஒரு உண்மையான படைப்பாளியின் கர்வம். மீண்டும் அப்படி யாரவது பாராது காலத்தில் இருந்தால் சொல்லுங்கள். தெரிந்து கொள்கிறோம். பார்ப்பான் என்கிற காரணத்துக்காக அல்ல. தான் வாழ்ந்த காலத்தை முன்னெடுத்து செல்கிற ஒருவனை மகாகவி என்ன்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லலாம். பாரதியின் கவித்வமும் அவன் எளிமைப்படுத்திய செழுமைப்படுத்திய தமிழும் அவன் பத்திரிகையில் இயங்கிய பல தளங்களும் அவனின் குறைந்த வாழ்நாளுக்குள் அவன் தொட்ட விசயங்களும் அவனை மகாகவி ஆக்கின. அவன் மகாகவியாகவே பிறந்தான் (இதை வெறும் பிறப்பு என்கிற நிகழ்வாக கொள்ளவும் . நான் அந்த அர்த்தத்தில் எழுதுகிறேன். பதிலுக்கு அப்போ வேற ஜாதியில் மகாகவிகல் பிறக்க முடியாதா என்று கேட்டு வைக்காதீர்கள். ) அவனுக்கு வெள்ளையர்கள் வைஸ்ராய் பதவி கொடுத்து இருந்தாலும் அவன் மக்களை பற்றி புலம்பிக்கொண்டு அனாதையாய் தான் செத்திருப்பான்.பாரதி வாழ்ந்த காலத்திய மற்றவர்களின் எழுத்துகளையும் பாரதியின் எழுத்துக்களையும் ஒப்பிடுங்கள். படைப்பு உள்ளடக்கம் பற்றி எழுதும் முன் கவிதை என்ற வடிவை இதற்கு முன் அல்லது அவனுக்கு முன் யார் இவ்வளவு எளிமைபடுத்தியது?பாரதிதாசன் தமிழ் தமிழ் என்றார் என்றால் அவர் காலத்தில் திராவிட இயக்க சிந்தனைகள் வளர ஆரம்பித்தன. பாரதி காலத்தில் தேசம் மொத்தமும் விடுதலைக்கான இயக்கம் நடை பெற்றது. தமிழின் பெருமையை எடுத்துரைத்து நீராரும் கடலுடுத்த எழுதினால் தான் மகாகவி பட்டம் வழஅங்குவீர்களா?திராவிட இனம் தமிழர் தெலுங்கர் கன்னடர் என கருத்த தோலுடன் உதடுகள் பெருத்த நாம் எப்போது இந்த நிலப்பரப்பில் விரவ ஆரம்பித்தோம்? என்று நீங்கள் நினைகிறீர்கள்? உண்மையில் இந் மண்ணின் ஆதிகுடிகள் ஒரிசாவின் காடுகளிலும் மேற்குதொடர்ச்சி மலைகளிலும் வாழ்கின்றனர். ஆரியம் திராவிடம் எல்லாம் வந்தது தான். அதை பேசி இனி ஆகா வேண்டியது இல்லை. இப்போதைய சமூக அமைப்பை படிப்போம். அதுவே நல்லது.பாரதி என்றில்லை. பொதுவில் வரும் யாரும் எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. பாரதிக்காக யாருன் வரிந்து கட்டிக்கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எங்கே ஒரு தவறான கருத்து முன்மொழியப் படுகிறதோ அங்கே தெரிந்த ஒருவன் அமைதியாய் இருத்தல் சமுக துரோகம். அதை செய்ய நான் தயாராக இல்லை. உங்கள் கண்ணோட்டத்தில் உங்களது சரி. எனது கண்ணோட்டத்தில் எனது கருத்து சரி. ஆனால் நாம் இருவரும் விவாதிப்பதன் முலம் பொதுவிலான உண்மையை கண்டடைய சாத்தியம் உள்ளது. அதை ஏற்றுக் கொள்ள தயங்குபவர்கள் விரோதமான மறுமொழி பேசி எதிர்கருத்தை முடக்கும் போக்கு சகஜமானது. அதையும் தாண்டி உணமையை நிலை நிறுத்த போராடுவோம். பாரதியை இந்து அமைப்புகள் கொண்டாடுகின்றன. போலி கம்யுனிஸ்டுகள் கொண்டாடுகிர்ரர்கள். இன்னும் யாரெல்லாமோ கொண்டாடுகிறார்கள். இதெல்லாம் மிக சமீபத்திய நிகழ்வுகள். இதற்கும் பாரதிக்கும் சம்பந்தமில்லை. காமராஜரை நாடார்கள் எடுத்துக் கொண்டது போல.வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களை பிள்ளைகள் எடுத்துக்கொண்டது போல.புரட்சி என்ற வார்த்தை பாதி இல்லையேல் தமிழுக்கு இல்லை. அப்படியிருந்தால் இப்போது புரட்சிக்கு என்ன வார்த்தை கொடுத்து இருப்பார்கள்? அது போகட்டும். ஆரியம் சமஸ்கிருதம் எல்லாம் துக்கிப்பிடித்தார் என்றே இருக்கட்டும். தமிழை தரையில் போட்டா அயா மிதித்தார்?அவனுக்கு முன்பாக அல்லது அவன் காலத்திலோ தமிழை அவனளவு உயர்த்தி பிடித்தது யார் அய்யா? தமிழன் என்ன அவன் நடித்த சினிமா படத்தை பார்க்க வேண்டி அவசியம் இருந்ததா? அவன் தமிழ் பெயர் சொல்லி நாடகம் ஆட?அல்லது கல்யாண மண்டபம் வைத்து இருந்தானா அதைக் காக்க தமிழன் என்று சொல்லடா தலை நிமர்ந்து நில்லடா என்று சொல்ல.பாரதி எட்டயபுர சமஸ்தான கவிஞராய் இருந்த பொது சம்பளம் 12 ரூபாய். அதை விடுத்து அவன் சுதேசமித்ரனில் இந்தியா இதழில் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாட அந்த பயித்தக்காரனை எது அய்யா துரத்தியது? தமிழை தலை மேல் வைத்த அவன் பாடல்கள் கொஞ்சத்தை http://www.tamilnation.org/literature/bharathy/kavithaikal/thesiya2.htm இல் போய் படியுங்கள். . உழைக்கும் மக்களை பாரதி கண்ணால் kuda கண்டதில்லை அய்யா. அவன் அரண்மனை சொகுசு வாழ்விலே லயித்திருந்தவன். சம்பாதிக்க தமிழை எடுத்தானே அவனை ---------
தமிழுக்கு கவிதையை அறிமுகப் படுத்தியன் அவன். செய்யுள் எழுது யாப்பில் உழன்று பொழிப்பாசிரியர் தேவைப்பட்ட தமிழ் இலக்கியத்தில் பழகு தமிழில் எழுதினான். இசையோடு பாடினான். வண்டி இழுத்தவர்கள் அவன் ரசிகர்கள் வடை விற்றவர்கள் அவன் ரசிகர்கள். பு விற்றவர்கள் அவன் ரசிகர்கள். மொத்தத்தில் சாமான்ய மக்களுக்காக எழுதினான் அவர் புரட்சி செய்யவில்லை. யார் புரட்சி செய்தார்கள் என்று ஆராயவும் வேண்டாம். நான் ஒன்றே ஒன்றை பலதரம் சொன்னேன். அவன் மக்களை உயிர்களை நேசித்தான். அது புரட்சியா என்று ஆராய வேண்டியது இல்லை.விண்டுரை செய்குவன் கேளாய்
புதுவை விநாயகனே
தொண்டுன தன்னை பராசக்திக் கென்றுந்
தொடர்ந்திடுவேன்
பண்டைச் சிறுமைகள் போக்கி யென்னாவிற்
பழுத்த சுவைத்
தெண்டமிழ்ப் பாடலொரு கோடி
மேவிடச் செய்குவையே (விநாயகர் நான்மணி மாலை பாடல் 30 )
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்சுருதிகள்
கேளீரோ?-
பலபித்த மதங்களி லேதடு மாறிப்பெருமை யழிவீரோ?
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-
பலகள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறைகாட்டவும் வல்லீரோ? 9 ( அறிவே தெய்வம் )
என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
பாலித்திட வேணும் (காணி நிலம் வேண்டும் )
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய்? - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் –
இனி என்னைப் புதியவுயி ராக்கி –
எனக் கேதுங் கவலையறச் செய்து –
மதி தன்னை மிகத்தெளிவு செய்து –
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் (32. யோக சக்தி)
மண்ணிலார்க்குந் துயறின்றிச் செய்வேன்,
வறுமை யென்பதை வண்மிசை மாய்ப்பேன். (காளி தருவாள்)
காக்கை குருவி எங்கள் ஜாதி-
நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்; (ஐய பேரிகை)
இந்த எல்லா பாடல்களும் உணர்த்துவன என்ன?
பாரதியின் ஆரிய பற்று சமஸ்கிருத பற்று பார்ப்பனகுறு இவை மறுக்கவில்லை. இதன் காரணமாக அவன் விலக்கப் பட வேண்டியவன் அல்ல. அவன் வாழ்ந்த சமுக அமைப்பில் அவன் அப்படி எழுதினான். அதில் இருந்து விடுபடவும் முயன்றவன். இதற்கு அவன் கடவுளர்க்கு வேண்டிய மேல் காட்டிய இரு பகுதிகள் சான்று. தான் வாழ்ந்த காலத்தை மீறி கனவு கண்டவன். அவன் வாழ்ந்த காலத்தில் மற்றவர்கள் பேசாத பெரிய பொருள்களை பேச தலைப்பட்டவன். அதனாலேயே இன்னும் பேசப்படுகிறவன். பார்ப்பான் என்பதற்காக அவன் பேசப்படவில்லை. எந்த இந்து இயக்கமோ இல்லை பார்ப்பன தலைவனோ பாரதியை தலையில் வைத்துக் கொண்டாடவில்லை. நீங்கள் மேற்கோள் காட்டுகிற வரிகளை எவரும் கொண்டாடவில்லை. நீங்களே தேடித்தான் எடுத்தீர்கள்.
அவனை குற்றம் காண்பதை விடுத்து அவன் தொட்ட விஷயங்களின் இன்றைய தேவை காணுங்கள். யாரும் பெண்களை பொருட்டாக மதிக்காத காலத்தில் பெண்களை போற்றினான். ஜாதி அமைப்புக்குள்ளே இருந்து கொண்டே சாதியக் கொடுமைகள் வேண்டாம் என்றான். சாமான்யனுக்கும் விடுதலை உணர்வை உட்டினான். இந்திய தேசியத்தில் நம்பிக்கை வைத்தான். தமிழை நேசித்தான். அதனால் தாழ்வுற்று வாழ தலைப்பட்டான். நீங்கள் சொல்வது போல அவன் ஆர்ய ரத்தம் அவனை அர்யத்தின் வீர்யம் பாட வைத்து இருக்கலாம். ஆனால் அவன் தமிழ் மனம் தமிழை தமிழரை தமிழ்நாட்டை நேசித்தது.
யாதும் உரே யாவரும் கேளிர் என்பது தமிழ் பண்பாடு எனில் காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்என்ன பண்பாடு அய்யா?
அன்பென்று முரசை கொட்டியவன். தகரென்று கொட்டு முரசே பொய்மை சாதி வகுப்பினை எல்லாம். அன்பென்று கொட்டு முரசே மக்கள் அத்தனை பெரும் நிகராம். இதை பாடியவன் யார் அய்யா? பி ஜெ பி காரனா?
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தென் வந்து பாயுது காதினிலே என்றவன் ஆரிய தேசப் பிரதிநிதியா?
யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதா வதெங்கும் காணோம் என்றவன் சமஸ்கிருத சழக்கனா?
பெண்ணறிவை வளர்த்தால் வையம் பேதைமை யற்றிடுங் காணீர் என்றவன் பெண்ணடிமை பேசியவனா?
மனிதரில் ஆயிரம் சாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை
நந்தனை போல் ஒரு பார்பான் இந்த நாட்டினில் இல்லை
குணம் நல்லதாயின் எந்த குலத்தினரேனும் உணர்வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்
சூத்திரனுக்கொரு நீதி தண்ட சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதியென்று காண்போம்
இதெல்லாம் சொன்னவன் வர்ணாசிரம ஆதரவாளனா?
நன்று புராணங்கள் பல செய்தார் அதில் நல்ல கவிதைகள் பல தந்தார் கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள் பொய்யென்று தெளிவுறக் காண்போம் என்றவன் பழைய பஞ்சாங்கமா?
அப்படித்தான் என்றால் உங்கள் தரப்பில் இருந்து ஒரு ஆளையோ குறைந்தது ஒரு பாடலையோ வரிகளையோ முற்போக்கான பாரதியின் சம காலத்திய ஒரு ஆளின் படைப்பை காட்டுங்கள். அவன் காலத்தில் வேறு யாரும் இல்லை என்று இதன் பொருள் அல்ல. அவன் காலத்தில் இது குறித்து பேச யாரும் துணியவில்லை.
பேசாப் பொருளை பேசத் துணிந்தான் கேளா வசைக்கெல்லாம் தயாராய் இருந்தான். பாரதி புரட்சி பண்ணியவனள்ள.புரட்சிக்கான மனமாற்றத்தை ஏற்படுத்தியவன் புரட்சிக்கு மக்களை தயார் படுத்தியவன். அதை தவற விட்டு இன்று அவனை தண்டிக்க கோல் எடுத்து உள்ளோம் . எல்லோரும் ஒன்றென சொன்னவன். உங்களையும் இன்றிருந்தால் நன்பாவென்ரிருப்பன். தை தவற விட்டவர்கள் நாம் இப்போது அவனை தண்டித்துக் கொண்டு உள்ளோம்.
பாரதி ஒரு மகாகவி
பாரதி ஒரு மகாமனிதன்
பாரதி ஒரு மண்ணுலக உயிர்களின் காதலன்
பாரதி வேண்டியது சமுக மாற்றம்பாரதியின் பார்ப்பனத்தனம் மறுக்கக் குடியது அல்ல. என்றாலும் அந்த காரணத்திற்காக அவர் தவிர்கக் குடியவர் அல்ல. தனது வழ்காலத்தில் மற்றவர்கள் பேச துணியாத பெரிய பொருள்களை பேசியவன். அவன் கவிதைகள் நிறைய உண்டு நண்பரே. அதை எல்லாம் மொத்தமாக நடிப்பு என்று விமர்சனம் வைத்தவர்கள் இங்கே நிறைய. அவன் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தான் வாழ்ந்த காலத்தை கடந்து யோசித்தவன் அவன். அவனின் பார்ப்பனத்தன்மையை அவன் மாற்ற விரும்பிய வேண்டி அவன் கடவுள்களிடம் கேட்ட பாடல்களின் வரிகள் சிலவற்றை முன்பே பதிந்து உள்ளேன். அந்த பாடல்களை படித்து இது வரை யாரும் அது குறித்து எழுதவில்லை.
மீண்டும் எழுதுகிறேன். பாரதி ஒரு முற்றுப் பெறாத சகாப்தம். பாரதி ஒரு பாரதி அல்ல. உங்களுக்கு பிடித்தமான பாரதியை எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்கிற பார்ப்பன பாரதியை பார்ப்பனர்களே எடுத்துக் கொள்ளவில்லை. ஏன் இந்தி ஒற்றைப் பார்வை. பாரதியை பார்ப்பனத்தன்மைக்காக எதிர்த்தே தீருவது என்றால் அதை அவன் வாழ்ந்த காலத்தில் செய்வது தான் சரி. இப்போது செய்து பலனில்லை. பெரியார் பார்ப்பனர்களை துரத்தி அடித்தார். மீதம் கொஞ்சம் பேரை திராவிட இயக்கங்கள் அடித்தன. இப்போது மீந்து இருப்பவர்கள் கொஞ்ச நஞ்சம்.
பாரதியும் பெரியாரும் ஒரே தடத்தில் நிற்க குடியவர்கள் அல்ல. பாரதி ஒரு படைப்பாளி. பெரியார் ஒரு போராளி. இது எனது புரிதல். அதற்காக பாரதி மட்டம் அல்ல. ஒரு ஒப்பீட்டு நோக்கில் படைப்பாளி பாரதி போராளி பாரதியை விடவும் மேலானவன். பெரியாருக்கு இருந்த அரசியல் ஆதரவு அவரின் குடும்ப பின்னணி அவர் வாழ்ந்த சமுகம் வேறு. அதற்கு முன்பான இருண்ட தமிழகத்தில் தோன்றிய வெள்ளி பாரதி. அந்த வெளிச்சம் பெரியார் மேலும் பட்டது என்பதை மறுக்க முடியாது. பெரியார் ஒரு போராளி. அவன் போராடிய விசயங்களை அவருக்கு முன்னதாக தொட்டுஸ் சென்றவர் பாரதி. அதனால் அவரை முன்னோடி என்கிறேன். பெரியாரின் போராட்ட்டங்களை சற்றும் குறைத்து மதிப்பிடாத அதே வேளை பாரதியின் முன்னோடித்தன்மை சுட்டிக் காட்ட வேண்டியது என் மனதிற்கு மிக விருப்பமான ஒன்று.
பாரதி ஒரு முற்றுப் பெறாத சகாப்தம். பாரதி ஒரு பாரதி அல்ல. உங்களுக்கு பிடித்தமான பாரதியை எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்கிற பார்ப்பன பாரதியை பார்ப்பனர்களே எடுத்துக் கொள்ளவில்லை. ஏன் இந்தி ஒற்றைப் பார்வை. பாரதியை பார்ப்பனத்தன்மைக்காக எதிர்த்தே தீருவது என்றால் அதை அவன் வாழ்ந்த காலத்தில் செய்வது தான் சரி. இப்போது செய்து பலனில்லை. பெரியார் பார்ப்பனர்களை துரத்தி அடித்தார். மீதம் கொஞ்சம் பேரை திராவிட இயக்கங்கள் அடித்தன. இப்போது மீந்து இருப்பவர்கள் கொஞ்ச நஞ்சம்.பாரதி பலவீனங்கள் அற்றவன் அல்ல. அது போல அவன் ஒரு தவிர்க்கப்பட வேண்டியவனும் அல்ல. யாரும் எழுதாத காலத்தில் யாரும் எழுத நினைக்காததை அவன் எழுதினான். கணந்தோறும் மனிதர்களை உயிர்களை நேசித்தான். யாரோ எழுதினார்கள். காசுக்காக நடித்தான் என்று. அவன் எட்டயபுர சமஸ்தானத்தில் வாங்கிய சம்பளம் 12 ரூபாய். அந்த பெரிய சம்பளத்தை விட்டு அவன் அறையனாவுக்கும் காலனாவுக்கும் அலைந்தான் அய்யா சென்னை இல். அவன் சம்பாதிக்க நினைத்து இருந்தால் அவனின் பல்மொழி அறிவுக்கு அவன் பெரிய அரசாங்க வேலைக்காரன் ஆகி இருக்கலாம் அயா. அதை விடுத்து கடற்கரை குட்டங்களில் மக்களுக்கு விடுதலை பாடல்களை பாடினான்.
இதன் பின்னான என் மற்றைய பதிவுகள் புரட்சிகர நடவடிக்கைகளால் அளிக்கப் பட்டன. அதை பற்றிய ஒரு . இடுகையை விரைவில் காண்பீர்கள்
1 கருத்து:
well done sir!
கருத்துரையிடுக