திங்கள், 29 டிசம்பர், 2008

குற்றம் பார்த்தல்


எதேச்சையாய்
அந்தக் கொலைவாள்
என் கைக்கு கிடைத்தது.

அதன்
கூர்மை…
பளபளப்பு…
கொடுவசீகரம்…
யாவும் பிரமிப்பூட்டின.


மேலும்-
கொஞ்சம் பயமும் கூட;
என் மீது பாய்ந்து விட்டால்…?



எடுத்துச் சுழற்ற ஆரம்பித்தேன்.
எளிதாகத்தான் இருந்தது.


ஒன்று…
இரண்டு…
நூறு…
ஆயிரம்…
நண்பர்கள்…
எதிரிகள்…
யாரெனவும் தெரியாதவர்கள்…

எதிர்ப்பட்ட தலைகள்
யாவும் வீழ்ந்தன.


கைப்பிடியைத் தளர்த்தாத வரை
வாளின் கூர்முனை
என் தலைக்கு திரும்பாது.

ஞாயிறு, 28 டிசம்பர், 2008

சிறுநீர் கழித்தல் - சில குறிப்புகள்

உயரமான சுவர்களின் மேல்
கண்ணாடிச்சில்லுகள் பதிக்கப் பட்டு கன்னா
பாதுகாக்கப் படும்
இருப்புப் பாதையின் புறத்தில்
நெடிய அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்கிய
வெளிச்சம் குறைவான
அந்த குறுக்குச்சந்தில்
சிறுநீர் கழிக்கவென
தோதான இடங்கள் நிறைய உண்டு .

முன்பு பெய்தவர்களின் நீரை
சாலையில் வழிய விட்டபடி
அசைவற்றிருந்தன
பெயர் தெரியாத சில செடிகள்.

சிறிய ஆறுகள் போல
தோற்றம் காட்டும் அவைகளை
தாண்டிக் கடந்து
எனக்கான இடைவெளியில் நிரம்பினேன்.

அவ்வப்போது வரும்
வாகன முகப்பு விளக்கின் ஒளிக்கு
முகத்தை மட்டும் மறைத்துக் கொள்ளல்
போதுமானதாயிருந்தது ;
குறியை மறைக்கப் பிரயத்தனம் இல்லை.

காலணியில் ஈரம் படாதிருக்க
கால்களை அகலமாக்கிக் கொள்ளல் அவசியம்

என் பெயர் சுமந்த படி
மேலும் ஒரு குறுநதி சாலையை நனைத்தோடும்
காய்ந்து பின்னொரு நாள்
சுவடாய் நிலைக்கும்.

பூ

சமீபத்தில் பூ பார்த்தேன். சசி ஏற்கனவே அரைகுறையாக எடுத்த டிஸ்யும் படமும் பார்த்தேன். அதே படத்தின் குறைகள் இதிலும். அவர் சொல்ல வருவது நல்ல சினிமாவை தான். ஆனால் சரியான உழைப்பு இல்லாமலோ அல்லது சரியான அனுபவம் இல்லாமலோ அறிகுறியாக வெளியாகின்றன. ஆனால் அருமையான சினிமா எடுக்கும் அருகதை உள்ளவர். இன்னும் அனுபவப் பட வேண்டும். சமீபத்தில் நான் பார்த்த மிகக் சிறந்த காட்சிகளில் ஒன்றாக இந்த படத்தில் ஒன்று உள்ளது. ஜோதிடம் பார்க்க போகும் இடத்தில் வாழைப் பழம் காணாமல் போவது மிக நல்ல காட்சி. அதே போல சூப்பர்வைசர் கதாநாயகிடம அடிவாங்கும் காட்சி மிக நன்று. அந்த வேளையிலும் அவர் தன் தவறை விளக்க முற்படுவதும் கண்ணாடியை காணாமல் தேடுவது மிக நல்ல காட்சி.

சனி, 27 டிசம்பர், 2008

GLOBAL WARMING AND CARBON TRADING

GLOBAL WARMING AND CARBON TRADING

M. Jayaprakashvel and N. Mathivanan


Biocontrol and Microbial Metabolites Lab
Centre for Advanced Studies in Botany,
University of Madras, Guindy Campus, Chennai – 600 025

Corresponding author E-mail:
jayaprakashvel@rediffmail.com

Abstract
Global warming, the increase in earth’s atmospheric temperature has become one of the most serious issues of this century. Several nations were working as a united force to combat this common problem of our mother earth. There has been several ways attempted to reduce the increased effects of global warming. Carbon trading is one such measure used internationally to reduce global warming. Carbon trading is an administrative approach used to control global warming by providing economic incentives for achieving reductions in the emissions of greenhouse gases. This paper briefs about the carbon trading, its impact on global warming and the future of carbon trading.

Introduction
From the past three centuries, our mother earth is witnessing the increase in atmospheric temperature. Studies have declared that it was mainly due to the increased greenhouse effect which was resulted from the anthropogenic elevation of green house gas (GHG) emissions. Once, during the formation of earth, the global warming has been considered as an inevitable event. But now, it has emerged as a serious problem mainly because of the current physical state of our earth. Major GHGs such as water vapor, carbon dioxide, methane, nitrous oxide, ozone and chlorofluorocarbons (CFCs) are to be reduced in the atmosphere. The main focus was on reducing the carbon dioxide as it is responsible for 26% of the global warming.
Kyoto protocol
Since the problem is on a global scenario, several countries have formed a United Nations Framework Convention on Climate Change (UNFCCC). This convention has made an international environmental treaty at the United Nations Conference on Environment and Development (UNCED) held in Rio de Janeiro, Brazil, in 1992. The treaty is intended to achieve "stabilization of greenhouse gas concentrations in the atmosphere at a level that would prevent dangerous anthropogenic interference with the climate system." On 1996, this convention met at Kyoto, Japan and formulated the guidelines and goals for legally reducing six GHGs viz., carbon dioxide, methane, nitrous oxide, sulfur hexafluoride, hydrofluorocarbons, and perfluorocarbons and it is called as Kyoto Protocol.

Totally, 179 countries have signed and ratified this protocol. Kazakazthan has signed but yet to ratify. United States of America (USA), the single country that is responsible for more than 30% of world’s GHGs emission has signed the protocol but has no intention to ratify the protocol. However the protocol has entered into force on 16, February 2005. Under Kyoto protocol, industrialized countries agreed to reduce their collective GHGs emissions by 5.2% before 2012 compared to the year 1990. The protocol liberally relaxed the developing and under developed nations from emission reduction up to the mid of twenty first century. National limitations ranged from 8% reductions for the European Union and some others to 7% for the USA, 6% for Japan, and 0% for Russia. USA has not yet ratified because it demands that the convention should include the developing nations also under the emission reduction.

Carbon trading
According to the Kyoto protocol, government or international regulatory bodies determines how much industry will be allowed to pollute and puts a carbon level on its emissions. This limit is known as carbon cap. Then over a time period, the government lowers the cap. In simpler words, every industry will be asked to emit pre-determined level of emissions that will allow business to continue its operations (without hurting or destroying the country's existing businesses and job base). If an industry/business emits more than its limits or it preferred to emit more than that of its carbon cap, it is advised to get carbon credits from external sources. In other words, the polluting business/industry buys the credits from the non-polluting business, while it transitions to less polluting resources. This is known as carbon trading. In the event that a business/industry is unable to purchase additional credits from another business, the company will not be able to release any more pollutants, plain and simple. So to avoid shutting down their business, they will buy carbon credits form the developing nations.

How the trading system works?
The trading system involves the issuing of carbon credits for activities such as afforestation and reforestation. Credits are issued to the individual or company sequestering the carbon, e.g. growing the forests. These credits can be sold to a carbon emitter such as a power company, using them to compensate its excessive carbon emissions. European Union (EU) has formed a framework for emission reductions which are collectively called as European Union's Emission Trading Scheme (EUETS). The other processes such as Clean Development Mechanism (CDM) encourages Annex 1 countries to install modern climate-friendly technology in developing countries in return they will be paid by the industries which are running behind their carbon credits. It is some thing like pay for eating sweets. Setting up of eco-friendly technologies in developing nations not only helps in getting some monetary benefits but also results in reducing their own emissions in future. For example, Suncor Energy, a thermal power corporation of Canada agreed to buy 100,000 tonnes of carbon dioxide reductions from Niagara Mohawk, with an option to buy an additional 10 million tonnes of emission reductions over 10 years. The purchase was valued at $6 million. The tonnes come from the emissions avoided through Niagara Mohawk's solar, wind and biomass projects, which reduce the need for electricity generated using fossil fuels like coal, oil and natural gas. Green India Carbon Mitigation and Trading Ltd based at India is carrying on multipurpose tree growing business as a carbon trading measure. The more trees you grow, they will sequester more amount of carbon dioxide form the earth’s atmosphere exactly serving the principles of Kyoto protocol. Russia, during the commencement of protocol, was in apposition to reduce its carbon emissions. But after ratifying the protocol, Russia has reduced all its carbon emissions and now it is in a position to sell their carbon credits in the market.

Market for carbon trading
According to the World Bank, the global carbon market doubled in size from 2006 to 2007, reaching $64 billion; $50 billion of that passed through the ETS market, representing 2.1 billion permits/tonnes of C02 equivalent. The CDM mechanism's trading volume, on the other hand, has been relatively modest, with an estimated 551 million credits/tonnes of C02 equivalent passing through the primary market last year, according to World Bank, worth around $7.4 billion.

Indian Scenario
India being under Annexure 1 of Kyoto protocol, currently it is not insisted to reduce carbon emissions up to 2012. India's per capita carbon dioxide emissions are 1.1 tonnes per annum against 20 tonnes in the USA. After 2012 there will be a carbon monitoring which will decide whether growing economies such as India and China are also to be included in the emission programme. If such is the case, Indian industries/businesses should store their carbon credits rather than selling their own credits now and buying from elsewhere at later stages. However, till then India can enter into carbon trading. Indian companies hoping to make big money through carbon trading are unlikely to get the monetary benefits immediately. Currently, eight Indian projects are registered at the UN, whereas about 134 have been given host country approval by the Ministry of Environment.

Pros and cons of carbon trading
Besides the economical and environmental concerns, the carbon trading has some question yet to be answered. The first among them is whether carbon trading is a license to pollute? It means, if a company is able to pay for a carbon credit, it may pollute the environment more legally. The other important question is whether the carbon trading really reduces the global warming. Because, if a company pollutes more, it may encourage eco-friendly developments elsewhere in the world so as the carbon credit is nullified with the carbon emission. In other way we can at least happy about carbon trading that we may not further rapidly pollute the earth’s atmosphere.

Concluding summary
Being juvenile, it is very difficult to judge whether the carbon trading really reduce the global warming or not. However, at economical point of view it has opened up some doors of opportunities in a developing country like India. We already have infrastructures utilize renewable energy sources such as water, wind, waves, biomass and solar energy for our power generation which would really help in mitigation of carbon emission problems.


Sources used

EU action against climate change: EU emissions trading — an open scheme promoting global innovation. Published by European Commission. 2005. Pages 1-20.

An emerging market for the environment: A Guide to Emissions trading. Published by United Nations Environment Programme, Pages 1- 44.

Internet Links

http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/07/18/eco.carbontrading/index.html
http://www.thehindubusinessline.com/2005/11/15/stories/2005111503390100.htm
http://ezinearticles.com/?The-Pros-and-Cons-of-Carbon-Trading---A-Primer&id=1413619
http://en.wikipedia.org/wiki/Emissions_trading

வெள்ளி, 26 டிசம்பர், 2008

பாரதி ஒரு முற்றுப் பெறாத சகாப்தம்


http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5278282608014400729&na=1&nst=1 என்ற ஆர்குட் அரங்கில் பாரதியை பற்றிய விமர்சனங்களுக்கு எனது பதில் பதிவுகளை இங்கே பதிகிறேன். அங்கே எனது நிறைய பதிவுகள்அழித்தொழிக்கப் பட்டன. அதற்காக எஞ்சியவற்றை காக்க இந்த இடுகை .பாரதிக்கு நான் குடை பிடிக்க முழுமுதற் காரணம் மனிதர்களை நான் அவர்களின் பலவீனங்களோடு ஏற்றுக்கொள்வது தான். பாரதி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவன் அல்ல. அதுபோல பாரதி எங்கும் தன்னை எல்லாம் சரியாக சொல்பவன் எனவில்லை. அவனின் படைப்பாற்றலை படைப்பின் தரத்தை வெகு கர்வத்துடன் கொண்ட்டடியவ. வேறொரு நண்பர் சொன்னது போல இந்த நவீன உலகின் அளவுகோல்களைக் கொண்டு பாரதியை அளக்க முற்படுவது நுஉறு வருடங்கள் முன்பு தங்கம் ஓரணா என்று இன்று அங்கலாய்ப்பதற்கு சமம். கொண்டாடியவன். அவன் பிறந்து வளர்ந்த சமுதாயம், அவனை வாட்டி வதைத்த வறுமை இவற்றின் இடையில் மனித குலத்தை பெரிதும் நேசித்த அவன் எழுத்துக்களை வைத்துப் பாருங்கள். அவனின் இந்து மத அபிமானம் வர்ணாசிரம கருத்துகள் என நீங்கள் சொல்வன எல்லாம் அவன் பார்வையில் வேறு. அதை மறுப்பதற்கில்லை . அவன் வாழ்ந்த காலத்திl அவனிலும் மேலாய் சிந்தித்த செயலாற்றிய யாராவது ஒருவரை எனக்கு அடையாளம் காட்டுங்கள். எனக்கு நிறைய படிப்பறிவு இல்லை. தெரிந்து கொள்கிறேன். போக அவன் வாழ்ந்த காலம் ரொம்ப கொஞ்சம். அவன் எழுதியது ரொம்ப. ஒவ்வொன்றும் அவன் வெவ்வேறு மனநிலையில் எழுதியதாக இருக்கலாம். வெள்ளையர்களை எதிர்த்து எழுதியவன் வேல்ஸ் இளவரசருக்கு வாழ்த்துப்பா எழுது உள்ளான் . அதற்காக அவனை ஆங்கிலேயரின் அடிவருடி என்று முத்திரை குத்தி விட முடியுமா? அவன் மனித நேயம் அல்ல உயிர் நேயத்தைப் பாருங்கள். எவன் எழுதினான் அப்போது இப்படி? அல்லது இப்போது?பாரதியின் படைப்புகளை படிக்க அவற்றின் எழுத்தப்பட்ட காலத்தையும் கவனித்தில் கொள்ளவும்.பாரதி காலத்தை மீறி கனவு கண்ட , காலத்தை மீறி சிந்தித்த பிறவிக் கலைஞன் . அவன் வேறொரு நபரை ஆகவே முடியாது. அவன் எழுத்துக்களை வெறும் கவிதைகள் அல்ல எல்லா தர படிப்புகளையும் அவன் வாழ்ந்த காலத்தோடு ஒப்பிட்டு படியுங்கள். பாரதிக்கு சமமான அவன் காலத்திய தமிழ் படைப்பாளி ஒரு நபரைக் காட்டுங்கள். வேறு யாரும் இல்லாததால் அவனை ஏத்திக் கொண்டாடவில்லை. அவனின் தனித்தன்மையை சொல்லவே இதை எழுதினேன்.பாரதி மன்னிப்புக்கடிதம் கொடுத்து வெளியே வந்தது மறைக்கைப்படாத ஒன்று. அதற்காக பாரதி பார்ப்பான் என்பதற்காக வெட்கப்பட வேண்டியது இல்லை. அது ராஜ தந்திரம் இல்லை தான். அது ஒரு கஷ்டப்பட்ட மனிதன் தன் வாழ்வை தக்க வைத்துக் கொள்ள மேற்கொண்ட நடவடிக்கியாக இருக்கலாம். மேலும் பாரதி விடுதலை வீரனாக இருந்தே ஆக வேண்டும் என்பது கட்டாயமா? அவன் எடுத்த தொட்ட விசயங்கள் மிகப்பல. அதில் ஒன்று விடுதலை போராட்டம்.மொத்தமாக சொல்வதென்றால் பாரதி ஒரு அவதாரம் அல்ல. ஒரு சாதாரண மனிதன் தான். ஆனால் காலத்தை மீறிய கனவுகளில் வாழ்ந்த ஒரு மகாகவிஞன். உங்கள் வார்த்தை சத்தியம் அவன் மகாகவிஞன் தான். நீங்கள் அந்த க ஹ வாக இருந்தால் kuda தப்பில்லை. உங்களுக்கு ஹ பிடிக்கிறது என்றால் நீங்கள் அவனில் உள்ள பார்ப்பன பாரதியை மட்டும் பார்த்து இருக்கிறீர்கள். பாரதி மிகச்சில ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவன். தனது நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றியவன். அனால் எந்த காலத்தும் தான் ஒரு மகா படைப்பாளி என்பதை மறக்கவே இல்லை. காந்தி பிரிட்டனில் படித்ததும் தென் ஆபிரிக்காவில் தொழில் செய்ததும் இந்திய விடுதலைக்காக தயார் செய்து கொள்ள அல்ல. ஒரு நேரத்தில் அவருக்கு இந்திய விடுதலைக்காக துணிந்து பாடுபட எண்ணம் தோன்றி இருக்கிறது. பாரதி kuda நிவேதிதா வை சந்திக்கும் முன்பு தனது மனைவிக்கு சம மரியாதை கொடுத்தது இல்லை. அதற்காக ஆணாதிக்கவாதி என்று முத்திரை குத்துவீர்களா? ஜப்பான் மற்றும் ஜெர்மனி உதவியை தேடிய போஸ் அவர்களை உங்கள் அகராதியில் எந்த வார்த்தை கொண்டு விளிபபீர்கள்? பாரதி தொடந்து மாறிக்கொண்டே இருந்தவன். காலவரிசைப்படி அவன் படிப்புகளை படியுங்கள். பாரதி ஒரு முடிவுபெறாத சகாப்தம். இன்னும் பாரதிக்கான தேவை இருக்கிறது. பாரதியில் எந்த பாரதியை எடுத்துக்கொண்டால் நமக்கு நல்லது என பார்த்து எடுத்துக்கொள்வோம். உங்களுக்கு உவப்பான பாரதி குஉட இருக்கிறார். திறந்த மனதோடு படித்துப் பாருங்கள்.


பாரதிக்கு யாரும் மகாகவி பட்டம் காமராஜர் அரங்கில் விழா எடுத்து கொடுக்கவில்லை. மேலாக பாரதியே தன்னை பல இடங்களில் பல தருணங்களில் மகாகவி என்று ஒப்புக் கொண்டு உள்ளான். அப்படி ஒப்புக் கொள்ள அறிவித்துக் கொள்ள மகா நேர்மையும் தைரியமும் தன் அறிவுத் தெளிவில் அசாத்திய நம்பிக்கையும் வேண்டும். கவியரசு என்பதை எதிர்த்தால் கவிப்பேரரசு ஆக்கிக் கொள்ளும் உத்தி அல்ல அது. அது ஒரு உண்மையான படைப்பாளியின் கர்வம். மீண்டும் அப்படி யாரவது பாராது காலத்தில் இருந்தால் சொல்லுங்கள். தெரிந்து கொள்கிறோம். பார்ப்பான் என்கிற காரணத்துக்காக அல்ல. தான் வாழ்ந்த காலத்தை முன்னெடுத்து செல்கிற ஒருவனை மகாகவி என்ன்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லலாம். பாரதியின் கவித்வமும் அவன் எளிமைப்படுத்திய செழுமைப்படுத்திய தமிழும் அவன் பத்திரிகையில் இயங்கிய பல தளங்களும் அவனின் குறைந்த வாழ்நாளுக்குள் அவன் தொட்ட விசயங்களும் அவனை மகாகவி ஆக்கின. அவன் மகாகவியாகவே பிறந்தான் (இதை வெறும் பிறப்பு என்கிற நிகழ்வாக கொள்ளவும் . நான் அந்த அர்த்தத்தில் எழுதுகிறேன். பதிலுக்கு அப்போ வேற ஜாதியில் மகாகவிகல் பிறக்க முடியாதா என்று கேட்டு வைக்காதீர்கள். ) அவனுக்கு வெள்ளையர்கள் வைஸ்ராய் பதவி கொடுத்து இருந்தாலும் அவன் மக்களை பற்றி புலம்பிக்கொண்டு அனாதையாய் தான் செத்திருப்பான்.பாரதி வாழ்ந்த காலத்திய மற்றவர்களின் எழுத்துகளையும் பாரதியின் எழுத்துக்களையும் ஒப்பிடுங்கள். படைப்பு உள்ளடக்கம் பற்றி எழுதும் முன் கவிதை என்ற வடிவை இதற்கு முன் அல்லது அவனுக்கு முன் யார் இவ்வளவு எளிமைபடுத்தியது?பாரதிதாசன் தமிழ் தமிழ் என்றார் என்றால் அவர் காலத்தில் திராவிட இயக்க சிந்தனைகள் வளர ஆரம்பித்தன. பாரதி காலத்தில் தேசம் மொத்தமும் விடுதலைக்கான இயக்கம் நடை பெற்றது. தமிழின் பெருமையை எடுத்துரைத்து நீராரும் கடலுடுத்த எழுதினால் தான் மகாகவி பட்டம் வழஅங்குவீர்களா?திராவிட இனம் தமிழர் தெலுங்கர் கன்னடர் என கருத்த தோலுடன் உதடுகள் பெருத்த நாம் எப்போது இந்த நிலப்பரப்பில் விரவ ஆரம்பித்தோம்? என்று நீங்கள் நினைகிறீர்கள்? உண்மையில் இந் மண்ணின் ஆதிகுடிகள் ஒரிசாவின் காடுகளிலும் மேற்குதொடர்ச்சி மலைகளிலும் வாழ்கின்றனர். ஆரியம் திராவிடம் எல்லாம் வந்தது தான். அதை பேசி இனி ஆகா வேண்டியது இல்லை. இப்போதைய சமூக அமைப்பை படிப்போம். அதுவே நல்லது.பாரதி என்றில்லை. பொதுவில் வரும் யாரும் எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. பாரதிக்காக யாருன் வரிந்து கட்டிக்கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எங்கே ஒரு தவறான கருத்து முன்மொழியப் படுகிறதோ அங்கே தெரிந்த ஒருவன் அமைதியாய் இருத்தல் சமுக துரோகம். அதை செய்ய நான் தயாராக இல்லை. உங்கள் கண்ணோட்டத்தில் உங்களது சரி. எனது கண்ணோட்டத்தில் எனது கருத்து சரி. ஆனால் நாம் இருவரும் விவாதிப்பதன் முலம் பொதுவிலான உண்மையை கண்டடைய சாத்தியம் உள்ளது. அதை ஏற்றுக் கொள்ள தயங்குபவர்கள் விரோதமான மறுமொழி பேசி எதிர்கருத்தை முடக்கும் போக்கு சகஜமானது. அதையும் தாண்டி உணமையை நிலை நிறுத்த போராடுவோம். பாரதியை இந்து அமைப்புகள் கொண்டாடுகின்றன. போலி கம்யுனிஸ்டுகள் கொண்டாடுகிர்ரர்கள். இன்னும் யாரெல்லாமோ கொண்டாடுகிறார்கள். இதெல்லாம் மிக சமீபத்திய நிகழ்வுகள். இதற்கும் பாரதிக்கும் சம்பந்தமில்லை. காமராஜரை நாடார்கள் எடுத்துக் கொண்டது போல.வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களை பிள்ளைகள் எடுத்துக்கொண்டது போல.புரட்சி என்ற வார்த்தை பாதி இல்லையேல் தமிழுக்கு இல்லை. அப்படியிருந்தால் இப்போது புரட்சிக்கு என்ன வார்த்தை கொடுத்து இருப்பார்கள்? அது போகட்டும். ஆரியம் சமஸ்கிருதம் எல்லாம் துக்கிப்பிடித்தார் என்றே இருக்கட்டும். தமிழை தரையில் போட்டா அயா மிதித்தார்?அவனுக்கு முன்பாக அல்லது அவன் காலத்திலோ தமிழை அவனளவு உயர்த்தி பிடித்தது யார் அய்யா? தமிழன் என்ன அவன் நடித்த சினிமா படத்தை பார்க்க வேண்டி அவசியம் இருந்ததா? அவன் தமிழ் பெயர் சொல்லி நாடகம் ஆட?அல்லது கல்யாண மண்டபம் வைத்து இருந்தானா அதைக் காக்க தமிழன் என்று சொல்லடா தலை நிமர்ந்து நில்லடா என்று சொல்ல.பாரதி எட்டயபுர சமஸ்தான கவிஞராய் இருந்த பொது சம்பளம் 12 ரூபாய். அதை விடுத்து அவன் சுதேசமித்ரனில் இந்தியா இதழில் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாட அந்த பயித்தக்காரனை எது அய்யா துரத்தியது? தமிழை தலை மேல் வைத்த அவன் பாடல்கள் கொஞ்சத்தை http://www.tamilnation.org/literature/bharathy/kavithaikal/thesiya2.htm இல் போய் படியுங்கள். . உழைக்கும் மக்களை பாரதி கண்ணால் kuda கண்டதில்லை அய்யா. அவன் அரண்மனை சொகுசு வாழ்விலே லயித்திருந்தவன். சம்பாதிக்க தமிழை எடுத்தானே அவனை ---------


தமிழுக்கு கவிதையை அறிமுகப் படுத்தியன் அவன். செய்யுள் எழுது யாப்பில் உழன்று பொழிப்பாசிரியர் தேவைப்பட்ட தமிழ் இலக்கியத்தில் பழகு தமிழில் எழுதினான். இசையோடு பாடினான். வண்டி இழுத்தவர்கள் அவன் ரசிகர்கள் வடை விற்றவர்கள் அவன் ரசிகர்கள். பு விற்றவர்கள் அவன் ரசிகர்கள். மொத்தத்தில் சாமான்ய மக்களுக்காக எழுதினான் அவர் புரட்சி செய்யவில்லை. யார் புரட்சி செய்தார்கள் என்று ஆராயவும் வேண்டாம். நான் ஒன்றே ஒன்றை பலதரம் சொன்னேன். அவன் மக்களை உயிர்களை நேசித்தான். அது புரட்சியா என்று ஆராய வேண்டியது இல்லை.விண்டுரை செய்குவன் கேளாய்
புதுவை விநாயகனே
தொண்டுன தன்னை பராசக்திக் கென்றுந்
தொடர்ந்திடுவேன்

பண்டைச் சிறுமைகள் போக்கி யென்னாவிற்
பழுத்த சுவைத்
தெண்டமிழ்ப் பாடலொரு கோடி
மேவிடச் செய்குவையே (விநாயகர் நான்மணி மாலை பாடல் 30 )

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்சுருதிகள்
கேளீரோ?-
பலபித்த மதங்களி லேதடு மாறிப்பெருமை யழிவீரோ?

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-
பலகள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறைகாட்டவும் வல்லீரோ? 9 ( அறிவே தெய்வம் )

என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்
பாலித்திட வேணும் (காணி நிலம் வேண்டும் )

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய்? - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் –
இனி என்னைப் புதியவுயி ராக்கி –
எனக் கேதுங் கவலையறச் செய்து –
மதி தன்னை மிகத்தெளிவு செய்து –
என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் (32. யோக சக்தி)

மண்ணிலார்க்குந் துயறின்றிச் செய்வேன்,
வறுமை யென்பதை வண்மிசை மாய்ப்பேன். (காளி தருவாள்)

காக்கை குருவி எங்கள் ஜாதி-
நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்; (ஐய பேரிகை)


இந்த எல்லா பாடல்களும் உணர்த்துவன என்ன?

பாரதியின் ஆரிய பற்று சமஸ்கிருத பற்று பார்ப்பனகுறு இவை மறுக்கவில்லை. இதன் காரணமாக அவன் விலக்கப் பட வேண்டியவன் அல்ல. அவன் வாழ்ந்த சமுக அமைப்பில் அவன் அப்படி எழுதினான். அதில் இருந்து விடுபடவும் முயன்றவன். இதற்கு அவன் கடவுளர்க்கு வேண்டிய மேல் காட்டிய இரு பகுதிகள் சான்று. தான் வாழ்ந்த காலத்தை மீறி கனவு கண்டவன். அவன் வாழ்ந்த காலத்தில் மற்றவர்கள் பேசாத பெரிய பொருள்களை பேச தலைப்பட்டவன். அதனாலேயே இன்னும் பேசப்படுகிறவன். பார்ப்பான் என்பதற்காக அவன் பேசப்படவில்லை. எந்த இந்து இயக்கமோ இல்லை பார்ப்பன தலைவனோ பாரதியை தலையில் வைத்துக் கொண்டாடவில்லை. நீங்கள் மேற்கோள் காட்டுகிற வரிகளை எவரும் கொண்டாடவில்லை. நீங்களே தேடித்தான் எடுத்தீர்கள்.

அவனை குற்றம் காண்பதை விடுத்து அவன் தொட்ட விஷயங்களின் இன்றைய தேவை காணுங்கள். யாரும் பெண்களை பொருட்டாக மதிக்காத காலத்தில் பெண்களை போற்றினான். ஜாதி அமைப்புக்குள்ளே இருந்து கொண்டே சாதியக் கொடுமைகள் வேண்டாம் என்றான். சாமான்யனுக்கும் விடுதலை உணர்வை உட்டினான். இந்திய தேசியத்தில் நம்பிக்கை வைத்தான். தமிழை நேசித்தான். அதனால் தாழ்வுற்று வாழ தலைப்பட்டான். நீங்கள் சொல்வது போல அவன் ஆர்ய ரத்தம் அவனை அர்யத்தின் வீர்யம் பாட வைத்து இருக்கலாம். ஆனால் அவன் தமிழ் மனம் தமிழை தமிழரை தமிழ்நாட்டை நேசித்தது.

யாதும் உரே யாவரும் கேளிர் என்பது தமிழ் பண்பாடு எனில் காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்என்ன பண்பாடு அய்யா?

அன்பென்று முரசை கொட்டியவன். தகரென்று கொட்டு முரசே பொய்மை சாதி வகுப்பினை எல்லாம். அன்பென்று கொட்டு முரசே மக்கள் அத்தனை பெரும் நிகராம். இதை பாடியவன் யார் அய்யா? பி ஜெ பி காரனா?

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தென் வந்து பாயுது காதினிலே என்றவன் ஆரிய தேசப் பிரதிநிதியா?

யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதா வதெங்கும் காணோம் என்றவன் சமஸ்கிருத சழக்கனா?

பெண்ணறிவை வளர்த்தால் வையம் பேதைமை யற்றிடுங் காணீர் என்றவன் பெண்ணடிமை பேசியவனா?

மனிதரில் ஆயிரம் சாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை
நந்தனை போல் ஒரு பார்பான் இந்த நாட்டினில் இல்லை
குணம் நல்லதாயின் எந்த குலத்தினரேனும் உணர்வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்
சூத்திரனுக்கொரு நீதி தண்ட சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதியென்று காண்போம்

இதெல்லாம் சொன்னவன் வர்ணாசிரம ஆதரவாளனா?

நன்று புராணங்கள் பல செய்தார் அதில் நல்ல கவிதைகள் பல தந்தார் கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள் பொய்யென்று தெளிவுறக் காண்போம் என்றவன் பழைய பஞ்சாங்கமா?

அப்படித்தான் என்றால் உங்கள் தரப்பில் இருந்து ஒரு ஆளையோ குறைந்தது ஒரு பாடலையோ வரிகளையோ முற்போக்கான பாரதியின் சம காலத்திய ஒரு ஆளின் படைப்பை காட்டுங்கள். அவன் காலத்தில் வேறு யாரும் இல்லை என்று இதன் பொருள் அல்ல. அவன் காலத்தில் இது குறித்து பேச யாரும் துணியவில்லை.

பேசாப் பொருளை பேசத் துணிந்தான் கேளா வசைக்கெல்லாம் தயாராய் இருந்தான். பாரதி புரட்சி பண்ணியவனள்ள.புரட்சிக்கான மனமாற்றத்தை ஏற்படுத்தியவன் புரட்சிக்கு மக்களை தயார் படுத்தியவன். அதை தவற விட்டு இன்று அவனை தண்டிக்க கோல் எடுத்து உள்ளோம் . எல்லோரும் ஒன்றென சொன்னவன். உங்களையும் இன்றிருந்தால் நன்பாவென்ரிருப்பன். தை தவற விட்டவர்கள் நாம் இப்போது அவனை தண்டித்துக் கொண்டு உள்ளோம்.

பாரதி ஒரு மகாகவி
பாரதி ஒரு மகாமனிதன்
பாரதி ஒரு மண்ணுலக உயிர்களின் காதலன்
பாரதி வேண்டியது சமுக மாற்றம்பாரதியின் பார்ப்பனத்தனம் மறுக்கக் குடியது அல்ல. என்றாலும் அந்த காரணத்திற்காக அவர் தவிர்கக் குடியவர் அல்ல. தனது வழ்காலத்தில் மற்றவர்கள் பேச துணியாத பெரிய பொருள்களை பேசியவன். அவன் கவிதைகள் நிறைய உண்டு நண்பரே. அதை எல்லாம் மொத்தமாக நடிப்பு என்று விமர்சனம் வைத்தவர்கள் இங்கே நிறைய. அவன் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தான் வாழ்ந்த காலத்தை கடந்து யோசித்தவன் அவன். அவனின் பார்ப்பனத்தன்மையை அவன் மாற்ற விரும்பிய வேண்டி அவன் கடவுள்களிடம் கேட்ட பாடல்களின் வரிகள் சிலவற்றை முன்பே பதிந்து உள்ளேன். அந்த பாடல்களை படித்து இது வரை யாரும் அது குறித்து எழுதவில்லை.

மீண்டும் எழுதுகிறேன். பாரதி ஒரு முற்றுப் பெறாத சகாப்தம். பாரதி ஒரு பாரதி அல்ல. உங்களுக்கு பிடித்தமான பாரதியை எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்கிற பார்ப்பன பாரதியை பார்ப்பனர்களே எடுத்துக் கொள்ளவில்லை. ஏன் இந்தி ஒற்றைப் பார்வை. பாரதியை பார்ப்பனத்தன்மைக்காக எதிர்த்தே தீருவது என்றால் அதை அவன் வாழ்ந்த காலத்தில் செய்வது தான் சரி. இப்போது செய்து பலனில்லை. பெரியார் பார்ப்பனர்களை துரத்தி அடித்தார். மீதம் கொஞ்சம் பேரை திராவிட இயக்கங்கள் அடித்தன. இப்போது மீந்து இருப்பவர்கள் கொஞ்ச நஞ்சம்.
பாரதியும் பெரியாரும் ஒரே தடத்தில் நிற்க குடியவர்கள் அல்ல. பாரதி ஒரு படைப்பாளி. பெரியார் ஒரு போராளி. இது எனது புரிதல். அதற்காக பாரதி மட்டம் அல்ல. ஒரு ஒப்பீட்டு நோக்கில் படைப்பாளி பாரதி போராளி பாரதியை விடவும் மேலானவன். பெரியாருக்கு இருந்த அரசியல் ஆதரவு அவரின் குடும்ப பின்னணி அவர் வாழ்ந்த சமுகம் வேறு. அதற்கு முன்பான இருண்ட தமிழகத்தில் தோன்றிய வெள்ளி பாரதி. அந்த வெளிச்சம் பெரியார் மேலும் பட்டது என்பதை மறுக்க முடியாது. பெரியார் ஒரு போராளி. அவன் போராடிய விசயங்களை அவருக்கு முன்னதாக தொட்டுஸ் சென்றவர் பாரதி. அதனால் அவரை முன்னோடி என்கிறேன். பெரியாரின் போராட்ட்டங்களை சற்றும் குறைத்து மதிப்பிடாத அதே வேளை பாரதியின் முன்னோடித்தன்மை சுட்டிக் காட்ட வேண்டியது என் மனதிற்கு மிக விருப்பமான ஒன்று.

பாரதி ஒரு முற்றுப் பெறாத சகாப்தம். பாரதி ஒரு பாரதி அல்ல. உங்களுக்கு பிடித்தமான பாரதியை எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்கிற பார்ப்பன பாரதியை பார்ப்பனர்களே எடுத்துக் கொள்ளவில்லை. ஏன் இந்தி ஒற்றைப் பார்வை. பாரதியை பார்ப்பனத்தன்மைக்காக எதிர்த்தே தீருவது என்றால் அதை அவன் வாழ்ந்த காலத்தில் செய்வது தான் சரி. இப்போது செய்து பலனில்லை. பெரியார் பார்ப்பனர்களை துரத்தி அடித்தார். மீதம் கொஞ்சம் பேரை திராவிட இயக்கங்கள் அடித்தன. இப்போது மீந்து இருப்பவர்கள் கொஞ்ச நஞ்சம்.பாரதி பலவீனங்கள் அற்றவன் அல்ல. அது போல அவன் ஒரு தவிர்க்கப்பட வேண்டியவனும் அல்ல. யாரும் எழுதாத காலத்தில் யாரும் எழுத நினைக்காததை அவன் எழுதினான். கணந்தோறும் மனிதர்களை உயிர்களை நேசித்தான். யாரோ எழுதினார்கள். காசுக்காக நடித்தான் என்று. அவன் எட்டயபுர சமஸ்தானத்தில் வாங்கிய சம்பளம் 12 ரூபாய். அந்த பெரிய சம்பளத்தை விட்டு அவன் அறையனாவுக்கும் காலனாவுக்கும் அலைந்தான் அய்யா சென்னை இல். அவன் சம்பாதிக்க நினைத்து இருந்தால் அவனின் பல்மொழி அறிவுக்கு அவன் பெரிய அரசாங்க வேலைக்காரன் ஆகி இருக்கலாம் அயா. அதை விடுத்து கடற்கரை குட்டங்களில் மக்களுக்கு விடுதலை பாடல்களை பாடினான்.

இதன் பின்னான என் மற்றைய பதிவுகள் புரட்சிகர நடவடிக்கைகளால் அளிக்கப் பட்டன. அதை பற்றிய ஒரு . இடுகையை விரைவில் காண்பீர்கள்
அவனை குற்றம் காண்பதை விடுத்து அவன் தொட்ட விஷயங்களின் இன்றைய தேவை காணுங்கள். யாரும் பெண்களை பொருட்டாக மதிக்காத காலத்தில் பெண்களை போற்றினான். ஜாதி அமைப்புக்குள்ளே இருந்து கொண்டே சாதியக் கொடுமைகள் வேண்டாம் என்றான். சாமான்யனுக்கும் விடுதலை உணர்வை உட்டினான். இந்திய தேசியத்தில் நம்பிக்கை வைத்தான். தமிழை நேசித்தான். அதனால் தாழ்வுற்று வாழ தலைப்பட்டான். நீங்கள் சொல்வது போல அவன் ஆர்ய ரத்தம் அவனை அர்யத்தின் வீர்யம் பாட வைத்து இருக்கலாம். ஆனால் அவன் தமிழ் மனம் தமிழை தமிழரை தமிழ்நாட்டை நேசித்தது. யாதும் உரே யாவரும் கேளிர் என்பது தமிழ் பண்பாடு எனில் காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்என்ன பண்பாடு அய்யா? அன்பென்று முரசை கொட்டியவன். தகரென்று கொட்டு முரசே பொய்மை சாதி வகுப்பினை எல்லாம். அன்பென்று கொட்டு முரசே மக்கள் அத்தனை பெரும் நிகராம். இதை பாடியவன் யார் அய்யா? பி ஜெ பி காரனா?செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தென் வந்து பாயுது காதினிலே என்றவன் ஆரிய தேசப் பிரதிநிதியா?யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதா வதெங்கும் காணோம் என்றவன் சமஸ்கிருத சழக்கனா? பெண்ணறிவை வளர்த்தால் வையம் பேதைமை யற்றிடுங் காணீர் என்றவன் பெண்ணடிமை பேசியவனா? மனிதரில் ஆயிரம் சாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை நந்தனை போல் ஒரு பார்பான் இந்த நாட்டினில் இல்லை குணம் நல்லதாயின் எந்த குலத்தினரேனும் உணர்வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம் சூத்திரனுக்கொரு நீதி தண்ட சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதியென்று காண்போம் இதெல்லாம் சொன்னவன் வர்ணாசிரம ஆதரவாளனா? நன்று புராணங்கள் பல செய்தார் அதில் நல்ல கவிதைகள் பல தந்தார் கவிதை மிக நல்லதேனும் அக் கதைகள் பொய்யென்று தெளிவுறக் காண்போம் என்றவன் பழைய பஞ்சாங்கமா? அப்படித்தான் என்றால் உங்கள் தரப்பில் இருந்து ஒரு ஆளையோ குறைந்தது ஒரு பாடலையோ வரிகளையோ முற்போக்கான பாரதியின் சம காலத்திய ஒரு ஆளின் படைப்பை காட்டுங்கள். அவன் காலத்தில் வேறு யாரும் இல்லை என்று இதன் பொருள் அல்ல. அவன் காலத்தில் இது குறித்து பேச யாரும் துணியவில்லை. பேசாப் பொருளை பேசத் துணிந்தான் கேளா வசைக்கெல்லாம் தயாராய் இருந்தான். பாரதி புரட்சி பண்ணியவனள்ள.
புரட்சிக்கான மனமாற்றத்தை ஏற்படுத்தியவன் புரட்சிக்கு மக்களை தயார் படுத்தியவன்அதை தவற விட்டு இன்று அவனை தண்டிக்க கோல் எடுத்து உள்ளோம் . எல்லோரும் ஒன்றென சொன்னவன். உங்களையும் இன்றிருந்தால் நன்பாவென்ரிருப்பன். தை தவற விட்டவர்கள் நாம் இப்போது அவனை தண்டித்துக் கொண்டு உள்ளோம்.

பாரதி ஒரு மகாகவிபாரதி ஒரு மகாமனிதன் பாரதி ஒரு மண்ணுலக உயிர்களின் காதலன் பாரதி வேண்டியது சமுக மாற்றம்


பாரதியின் பார்ப்பனத்தனம் மறுக்கக் குடியது அல்ல. என்றாலும் அந்த காரணத்திற்காக அவர் தவிர்கக் குடியவர் அல்ல. தனது வழ்காலத்தில் மற்றவர்கள் பேச துணியாத பெரிய பொருள்களை பேசியவன். அவன் கவிதைகள் நிறைய உண்டு நண்பரே. அதை எல்லாம் மொத்தமாக நடிப்பு என்று விமர்சனம் வைத்தவர்கள் இங்கே நிறைய. அவன் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தான் வாழ்ந்த காலத்தை கடந்து யோசித்தவன் அவன். அவனின் பார்ப்பனத்தன்மையை அவன் மாற்ற விரும்பிய வேண்டி அவன் கடவுள்களிடம் கேட்ட பாடல்களின் வரிகள் சிலவற்றை முன்பே பதிந்து உள்ளேன். அந்த பாடல்களை படித்து இது வரை யாரும் அது குறித்து எழுதவில்லை.மீண்டும் எழுதுகிறேன். பாரதி ஒரு முற்றுப் பெறாத சகாப்தம். பாரதி ஒரு பாரதி அல்ல. உங்களுக்கு பிடித்தமான பாரதியை எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்கிற பார்ப்பன பாரதியை பார்ப்பனர்களே எடுத்துக் கொள்ளவில்லை. ஏன் இந்தி ஒற்றைப் பார்வை. பாரதியை பார்ப்பனத்தன்மைக்காக எதிர்த்தே தீருவது என்றால் அதை அவன் வாழ்ந்த காலத்தில் செய்வது தான் சரி. இப்போது செய்து பலனில்லை. பெரியார் பார்ப்பனர்களை துரத்தி அடித்தார். மீதம் கொஞ்சம் பேரை திராவிட இயக்கங்கள் அடித்தன. இப்போது மீந்து இருப்பவர்கள் கொஞ்ச நஞ்சம்.

பாரதியும் பெரியாரும் ஒரே தடத்தில் நிற்க குடியவர்கள் அல்ல. பாரதி ஒரு படைப்பாளி. பெரியார் ஒரு போராளி. இது எனது புரிதல். அதற்காக பாரதி மட்டம் அல்ல. ஒரு ஒப்பீட்டு நோக்கில் படைப்பாளி பாரதி போராளி பாரதியை விடவும் மேலானவன். பெரியாருக்கு இருந்த அரசியல் ஆதரவு அவரின் குடும்ப பின்னணி அவர் வாழ்ந்த சமுகம் வேறு. அதற்கு முன்பான இருண்ட தமிழகத்தில் தோன்றிய வெள்ளி பாரதி. அந்த வெளிச்சம் பெரியார் மேலும் பட்டது என்பதை மறுக்க முடியாது. பெரியார் ஒரு போராளி. அவன் போராடிய விசயங்களை அவருக்கு முன்னதாக தொட்டுஸ் சென்றவர் பாரதி. அதனால் அவரை முன்னோடி என்கிறேன். பெரியாரின் போராட்ட்டங்களை சற்றும் குறைத்து மதிப்பிடாத அதே வேளை பாரதியின் முன்னோடித்தன்மை சுட்டிக் காட்ட வேண்டியது என் மனதிற்கு மிக விருப்பமான ஒன்று.
பாரதியின் பார்ப்பனத்தனம் மறுக்கக் குடியது அல்ல. என்றாலும் அந்த காரணத்திற்காக அவர் தவிர்கக் குடியவர் அல்ல. தனது வழ்காலத்தில் மற்றவர்கள் பேச துணியாத பெரிய பொருள்களை பேசியவன். அவன் கவிதைகள் நிறைய உண்டு நண்பரே. அதை எல்லாம் மொத்தமாக நடிப்பு என்று விமர்சனம் வைத்தவர்கள் இங்கே நிறைய. அவன் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தான் வாழ்ந்த காலத்தை கடந்து யோசித்தவன் அவன். அவனின் பார்ப்பனத்தன்மையை அவன் மாற்ற விரும்பிய வேண்டி அவன் கடவுள்களிடம் கேட்ட பாடல்களின் வரிகள் சிலவற்றை முன்பே பதிந்து உள்ளேன். அந்த பாடல்களை படித்து இது வரை யாரும் அது குறித்து எழுதவில்லை.மீண்டும் எழுதுகிறேன். பாரதி ஒரு முற்றுப் பெறாத சகாப்தம். பாரதி ஒரு பாரதி அல்ல. உங்களுக்கு பிடித்தமான பாரதியை எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்கிற பார்ப்பன பாரதியை பார்ப்பனர்களே எடுத்துக் கொள்ளவில்லை. ஏன் இந்தி ஒற்றைப் பார்வை. பாரதியை பார்ப்பனத்தன்மைக்காக எதிர்த்தே தீருவது என்றால் அதை அவன் வாழ்ந்த காலத்தில் செய்வது தான் சரி. இப்போது செய்து பலனில்லை. பெரியார் பார்ப்பனர்களை துரத்தி அடித்தார். மீதம் கொஞ்சம் பேரை திராவிட இயக்கங்கள் அடித்தன. இப்போது மீந்து இருப்பவர்கள் கொஞ்ச நஞ்சம்.

பாரதி பலவீனங்கள் அற்றவன் அல்ல. அது போல அவன் ஒரு தவிர்க்கப்பட வேண்டியவனும் அல்ல. யாரும் எழுதாத காலத்தில் யாரும் எழுத நினைக்காததை அவன் எழுதினான். கணந்தோறும் மனிதர்களை உயிர்களை நேசித்தான். யாரோ எழுதினார்கள். காசுக்காக நடித்தான் என்று. அவன் எட்டயபுர சமஸ்தானத்தில் வாங்கிய சம்பளம் 12 ரூபாய். அந்த பெரிய சம்பளத்தை விட்டு அவன் அறையனாவுக்கும் காலனாவுக்கும் அலைந்தான் அய்யா சென்னை இல். அவன் சம்பாதிக்க நினைத்து இருந்தால் அவனின் பல்மொழி அறிவுக்கு அவன் பெரிய அரசாங்க வேலைக்காரன் ஆகி இருக்கலாம் அயா. அதை விடுத்து கடற்கரை குட்டங்களில் மக்களுக்கு விடுதலை பாடல்களை பாடினான்.

இதன் பின்னான என் மற்றைய பதிவுகள் புரட்சிகர நடவடிக்கைகளால் அளிக்கப் பட்டன. அதை பற்றிய ஒரு . இடுகையை விரைவில் காண்பீர்கள்
தமிழுக்கு கவிதையை அறிமுகப் படுத்தியன் அவன். செய்யுள் எழுது யாப்பில் உழன்று பொழிப்பாசிரியர் தேவைப்பட்ட தமிழ் இலக்கியத்தில் பழகு தமிழில் எழுதினான். இசையோடு பாடினான். வண்டி இழுத்தவர்கள் அவன் ரசிகர்கள் வடை விற்றவர்கள் அவன் ரசிகர்கள். பு விற்றவர்கள் அவன் ரசிகர்கள். மொத்தத்தில் சாமான்ய மக்களுக்காக எழுதினான் அவர் புரட்சி செய்யவில்லை. யார் புரட்சி செய்தார்கள் என்று ஆராயவும் வேண்டாம். நான் ஒன்றே ஒன்றை பலதரம் சொன்னேன். அவன் மக்களை உயிர்களை நேசித்தான். அது புரட்சியா என்று ஆராய வேண்டியது இல்லை.

விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே தொண்டுன தன்னை பராசக்திக் கென்றுந் தொடர்ந்திடுவேன் பண்டைச் சிறுமைகள் போக்கி யென்னாவிற் பழுத்த சுவைத் தெண்டமிழ்ப் பாடலொரு கோடி மேவிடச் செய்குவையே (விநாயகர் நான்மணி மாலை பாடல் 30 )சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்சுருதிகள் கேளீரோ?-பலபித்த மதங்களி லேதடு மாறிப்பெருமை யழிவீரோ? 3மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்துவெறுங் கதைகள் சேர்த்துப்-பலகள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறைகாட்டவும் வல்லீரோ? 9 ( அறிவே தெய்வம் ).என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும் (காணி நிலம் வேண்டும் )நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய்? - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதியவுயி ராக்கி - எனக் கேதுங் கவலையறச் செய்து - மதி தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் (32. யோக சக்தி)மண்ணிலார்க்குந் துயறின்றிச் செய்வேன், வறுமை யென்பதை வண்மிசை மாய்ப்பேன். (காளி தருவாள்)காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்; (ஐய பேரிகை)இந்த எல்லா பாடல்களும் உணர்த்துவன என்ன?பாரதியின் ஆரிய பற்று சமஸ்கிருத பற்று பார்ப்பனகுறு இவை மறுக்கவில்லை. இதன் காரணமாக அவன் விளக்கப் பட வேண்டியவன் அல்ல. அவன் வாழ்ந்த சமுக அமைப்பில் அவன் அப்படி எழுதினான். அதில் இருந்து விடுபடவும் முயன்றவன். இதற்கு அவன் கடவுளர்க்கு வேண்டிய மேல் காட்டிய இரு பகுதிகள் சான்று. தான் வாழ்ந்த காலத்தை மீறி கனவு கண்டவன். அவன் வாழ்ந்த காலத்தில் மற்றவர்கள் பேசாத பெரிய பொருள்களை பேச தலைப்பட்டவன். அதனாலேயே இன்னும் பேசப்படுகிறவன். பார்ப்பான் என்பதற்காக அவன் பேசப்படவில்லை. எந்த இந்து இயக்கமோ இல்லை பார்ப்பன தலைவனோ பாரதியை தலையில் வைத்துக் கொண்டாடவில்லை. நீங்கள் மேற்கோள் காட்டுகிற வரிகளை எவரும் கொண்டாடவில்லை. நீங்களே தேடித்தான் எடுத்தீர்கள்.
பாரதிக்கு யாரும் மகாகவி பட்டம் காமராஜர் அரங்கில் விழா எடுத்து கொடுக்கவில்லை. மேலாக பாரதியே தன்னை பல இடங்களில் பல தருணங்களில் மகாகவி என்று ஒப்புக் கொண்டு உள்ளான். அப்படி ஒப்புக் கொள்ள அறிவித்துக் கொள்ள மகா நேர்மையும் தைரியமும் தன் அறிவுத் தெளிவில் அசாத்திய நம்பிக்கையும் வேண்டும். கவியரசு என்பதை எதிர்த்தால் கவிப்பேரரசு ஆக்கிக் கொள்ளும் உத்தி அல்ல அது. அது ஒரு உண்மையான படைப்பாளியின் கர்வம். மீண்டும் அப்படி யாரவது பாராது காலத்தில் இருந்தால் சொல்லுங்கள். தெரிந்து கொள்கிறோம். பார்ப்பான் என்கிற காரணத்துக்காக அல்ல. தான் வாழ்ந்த காலத்தை முன்னெடுத்து செல்கிற ஒருவனை மகாகவி என்ன்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லலாம். பாரதியின் கவித்வமும் அவன் எளிமைப்படுத்திய செழுமைப்படுத்திய தமிழும் அவன் பத்திரிகையில் இயங்கிய பல தளங்களும் அவனின் குறைந்த வாழ்நாளுக்குள் அவன் தொட்ட விசயங்களும் அவனை மகாகவி ஆக்கின. அவன் மகாகவியாகவே பிறந்தான் (இதை வெறும் பிறப்பு என்கிற நிகழ்வாக கொள்ளவும் . நான் அந்த அர்த்தத்தில் எழுதுகிறேன். பதிலுக்கு அப்போ வேற ஜாதியில் மகாகவிகல் பிறக்க முடியாதா என்று கேட்டு வைக்காதீர்கள். ) அவனுக்கு வெள்ளையர்கள் வைஸ்ராய் பதவி கொடுத்து இருந்தாலும் அவன் மக்களை பற்றி புலம்பிக்கொண்டு அனாதையாய் தான் செத்திருப்பான்.
பாரதி வாழ்ந்த காலத்திய மற்றவர்களின் எழுத்துகளையும் பாரதியின் எழுத்துக்களையும் ஒப்பிடுங்கள். படைப்பு உள்ளடக்கம் பற்றி எழுதும் முன் கவிதை என்ற வடிவை இதற்கு முன் அல்லது அவனுக்கு முன் யார் இவ்வளவு எளிமைபடுத்தியது?பாரதிதாசன் தமிழ் தமிழ் என்றார் என்றால் அவர் காலத்தில் திராவிட இயக்க சிந்தனைகள் வளர ஆரம்பித்தன. பாரதி காலத்தில் தேசம் மொத்தமும் விடுதலைக்கான இயக்கம் நடை பெற்றது. தமிழின் பெருமையை எடுத்துரைத்து நீராரும் கடலுடுத்த எழுதினால் தான் மகாகவி பட்டம் வழஅங்குவீர்களா?திராவிட இனம் தமிழர் தெலுங்கர் கன்னடர் என கருத்த தோலுடன் உதடுகள் பெருத்த நாம் எப்போது இந்த நிலப்பரப்பில் விரவ ஆரம்பித்தோம்? என்று நீங்கள் நினைகிறீர்கள்? உண்மையில் இந் மண்ணின் ஆதிகுடிகள் ஒரிசாவின் காடுகளிலும் மேற்குதொடர்ச்சி மலைகளிலும் வாழ்கின்றனர். ஆரியம் திராவிடம் எல்லாம் வந்தது தான். அதை பேசி இனி ஆகா வேண்டியது இல்லை. இப்போதைய சமூக அமைப்பை படிப்போம். அதுவே நல்லது.

பாரதி என்றில்லை. பொதுவில் வரும் யாரும் எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. பாரதிக்காக யாருன் வரிந்து கட்டிக்கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எங்கே ஒரு தவறான கருத்து முன்மொழியப் படுகிறதோ அங்கே தெரிந்த ஒருவன் அமைதியாய் இருத்தல் சமுக துரோகம். அதை செய்ய நான் தயாராக இல்லை. உங்கள் கண்ணோட்டத்தில் உங்களது சரி. எனது கண்ணோட்டத்தில் எனது கருத்து சரி. ஆனால் நாம் இருவரும் விவாதிப்பதன் முலம் பொதுவிலான உண்மையை கண்டடைய சாத்தியம் உள்ளது. அதை ஏற்றுக் கொள்ள தயங்குபவர்கள் விரோதமான மறுமொழி பேசி எதிர்கருத்தை முடக்கும் போக்கு சகஜமானது. அதையும் தாண்டி உணமையை நிலை நிறுத்த போராடுவோம்.

பாரதியை இந்து அமைப்புகள் கொண்டாடுகின்றன. போலி கம்யுனிஸ்டுகள் கொண்டாடுகிர்ரர்கள். இன்னும் யாரெல்லாமோ கொண்டாடுகிறார்கள். இதெல்லாம் மிக சமீபத்திய நிகழ்வுகள். இதற்கும் பாரதிக்கும் சம்பந்தமில்லை. காமராஜரை நாடார்கள் எடுத்துக் கொண்டது போல.வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களை பிள்ளைகள் எடுத்துக்கொண்டது போல.


புரட்சி என்ற வார்த்தை பாதி இல்லையேல் தமிழுக்கு இல்லை. அப்படியிருந்தால் இப்போது புரட்சிக்கு என்ன வார்த்தை கொடுத்து இருப்பார்கள்? அது போகட்டும். ஆரியம் சமஸ்கிருதம் எல்லாம் துக்கிப்பிடித்தார் என்றே இருக்கட்டும். தமிழை தரையில் போட்டா அயா மிதித்தார்?அவனுக்கு முன்பாக அல்லது அவன் காலத்திலோ தமிழை அவனளவு உயர்த்தி பிடித்தது யார் அய்யா? தமிழன் என்ன அவன் நடித்த சினிமா படத்தை பார்க்க வேண்டி அவசியம் இருந்ததா? அவன் தமிழ் பெயர் சொல்லி நாடகம் ஆட?அல்லது கல்யாண மண்டபம் வைத்து இருந்தானா அதைக் காக்க தமிழன் என்று சொல்லடா தலை நிமர்ந்து நில்லடா என்று சொல்ல.பாரதி எட்டயபுர சமஸ்தான கவிஞராய் இருந்த பொது சம்பளம் 12 ரூபாய். அதை விடுத்து அவன் சுதேசமித்ரனில் இந்தியா இதழில் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாட அந்த பயித்தக்காரனை எது அய்யா துரத்தியது? தமிழை தலை மேல் வைத்த அவன் பாடல்கள் கொஞ்சத்தை http://www.tamilnation.org/literature/bharathy/kavithaikal/thesiya2.htm இல் போய் படியுங்கள். . உழைக்கும் மக்களை பாரதி கண்ணால் kuda கண்டதில்லை அய்யா. அவன் அரண்மனை சொகுசு வாழ்விலே லயித்திருந்தவன். சம்பாதிக்க தமிழை எடுத்தானே அவனை ---------

பாரதி ஒரு முற்றுப் பெறாத சகாப்தம் 1


http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=37515815&tid=5278282608014400729&na=1&nst=1 என்ற ஆர்குட் அரங்கில்
பாரதியை பற்றிய விமர்சனங்களுக்கு எனது பதில் பதிவுகளை இங்கே பதிகிறேன். அங்கே எனது நிறைய பதிவுகள்அழித்தொழிக்கப் பட்டன. அதற்காக எஞ்சியவற்றை காக்க இந்த இடுகை .



பாரதிக்கு நான் குடை பிடிக்க முழுமுதற் காரணம் மனிதர்களை நான் அவர்களின் பலவீனங்களோடு ஏற்றுக்கொள்வது தான். பாரதி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவன் அல்ல. அதுபோல பாரதி எங்கும் தன்னை எல்லாம் சரியாக சொல்பவன் எனவில்லை. அவனின் படைப்பாற்றலை படைப்பின் தரத்தை வெகு கர்வத்துடன் கொண்ட்டடியவ. வேறொரு நண்பர் சொன்னது போல இந்த நவீன உலகின் அளவுகோல்களைக் கொண்டு பாரதியை அளக்க முற்படுவது நுஉறு வருடங்கள் முன்பு தங்கம் ஓரணா என்று இன்று அங்கலாய்ப்பதற்கு சமம். கொண்டாடியவன். அவன் பிறந்து வளர்ந்த சமுதாயம், அவனை வாட்டி வதைத்த வறுமை இவற்றின் இடையில் மனித குலத்தை பெரிதும் நேசித்த அவன் எழுத்துக்களை வைத்துப் பாருங்கள். அவனின் இந்து மத அபிமானம் வர்ணாசிரம கருத்துகள் என நீங்கள் சொல்வன எல்லாம் அவன் பார்வையில் வேறு. அதை மறுப்பதற்கில்லை . அவன் வாழ்ந்த காலத்திl அவனிலும் மேலாய் சிந்தித்த செயலாற்றிய யாராவது ஒருவரை எனக்கு அடையாளம் காட்டுங்கள். எனக்கு நிறைய படிப்பறிவு இல்லை. தெரிந்து கொள்கிறேன். போக அவன் வாழ்ந்த காலம் ரொம்ப கொஞ்சம். அவன் எழுதியது ரொம்ப. ஒவ்வொன்றும் அவன் வெவ்வேறு மனநிலையில் எழுதியதாக இருக்கலாம். வெள்ளையர்களை எதிர்த்து எழுதியவன் வேல்ஸ் இளவரசருக்கு வாழ்த்துப்பா எழுது உள்ளான் . அதற்காக அவனை ஆங்கிலேயரின் அடிவருடி என்று முத்திரை குத்தி விட முடியுமா? அவன் மனித நேயம் அல்ல உயிர் நேயத்தைப் பாருங்கள். எவன் எழுதினான் அப்போது இப்படி? அல்லது இப்போது?பாரதியின் படைப்புகளை படிக்க அவற்றின் எழுத்தப்பட்ட காலத்தையும் கவனித்தில் கொள்ளவும்.

பாரதி காலத்தை மீறி கனவு கண்ட , காலத்தை மீறி சிந்தித்த பிறவிக் கலைஞன் . அவன் வேறொரு நபரை ஆகவே முடியாது. அவன் எழுத்துக்களை வெறும் கவிதைகள் அல்ல எல்லா தர படிப்புகளையும் அவன் வாழ்ந்த காலத்தோடு ஒப்பிட்டு படியுங்கள். பாரதிக்கு சமமான அவன் காலத்திய தமிழ் படைப்பாளி ஒரு நபரைக் காட்டுங்கள். வேறு யாரும் இல்லாததால் அவனை ஏத்திக் கொண்டாடவில்லை. அவனின் தனித்தன்மையை சொல்லவே இதை எழுதினேன்.

பாரதி மன்னிப்புக்கடிதம் கொடுத்து வெளியே வந்தது மறைக்கைப்படாத ஒன்று. அதற்காக பாரதி பார்ப்பான் என்பதற்காக வெட்கப்பட வேண்டியது இல்லை. அது ராஜ தந்திரம் இல்லை தான். அது ஒரு கஷ்டப்பட்ட மனிதன் தன் வாழ்வை தக்க வைத்துக் கொள்ள மேற்கொண்ட நடவடிக்கியாக இருக்கலாம். மேலும் பாரதி விடுதலை வீரனாக இருந்தே ஆக வேண்டும் என்பது கட்டாயமா? அவன் எடுத்த தொட்ட விசயங்கள் மிகப்பல. அதில் ஒன்று விடுதலை போராட்டம்.

மொத்தமாக சொல்வதென்றால்பாரதி ஒரு அவதாரம் அல்ல. ஒரு சாதாரண மனிதன் தான். ஆனால் காலத்தை மீறிய கனவுகளில் வாழ்ந்த ஒரு மகாகவிஞன். உங்கள் வார்த்தை சத்தியம் அவன் மகாகவிஞன் தான். நீங்கள் அந்த க ஹ வாக இருந்தால் kuda தப்பில்லை. உங்களுக்கு ஹ பிடிக்கிறது என்றால் நீங்கள் அவனில் உள்ள பார்ப்பன பாரதியை மட்டும் பார்த்து இருக்கிறீர்கள். பாரதி மிகச்சில ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவன். தனது நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றியவன். அனால் எந்த காலத்தும் தான் ஒரு மகா படைப்பாளி என்பதை மறக்கவே இல்லை. காந்தி பிரிட்டனில் படித்ததும் தென் ஆபிரிக்காவில் தொழில் செய்ததும் இந்திய விடுதலைக்காக தயார் செய்து கொள்ள அல்ல. ஒரு நேரத்தில் அவருக்கு இந்திய விடுதலைக்காக துணிந்து பாடுபட எண்ணம் தோன்றி இருக்கிறது. பாரதி kuda நிவேதிதா வை சந்திக்கும் முன்பு தனது மனைவிக்கு சம மரியாதை கொடுத்தது இல்லை. அதற்காக ஆணாதிக்கவாதி என்று முத்திரை குத்துவீர்களா? ஜப்பான் மற்றும் ஜெர்மனி உதவியை தேடிய போஸ் அவர்களை உங்கள் அகராதியில் எந்த வார்த்தை கொண்டு விளிபபீர்கள்? பாரதி தொடந்து மாறிக்கொண்டே இருந்தவன். காலவரிசைப்படி அவன் படிப்புகளை படியுங்கள். பாரதி ஒரு முடிவுபெறாத சகாப்தம். இன்னும் பாரதிக்கான தேவை இருக்கிறது. பாரதியில் எந்த பாரதியை எடுத்துக்கொண்டால் நமக்கு நல்லது என பார்த்து எடுத்துக்கொள்வோம். உங்களுக்கு உவப்பான பாரதி குஉட இருக்கிறார். திறந்த மனதோடு படித்துப் பாருங்கள்.

வியாழன், 11 டிசம்பர், 2008



காலத்தைக் கடந்தவன்



கால, தேச, தூர எல்லைகளைக் கடந்து
மனிதர்களை நேசித்த ஒரு மகாகவிக்கு
நேற்று பிறந்த நாள்






வயிற்றுக்கு சோறிடல்
வேண்டும் இங்கு வாழும் மானிடர்க்கெல்லாம்

தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்

ஞாயிறு, 7 டிசம்பர், 2008

தவம்

உன் பாதம் பட்ட பூமி தொட
பூக்கள் விழும்.

வெள்ளி, 7 நவம்பர், 2008

நீ வருவாயென



இன்றும் ..........

நீ வருவாயென ........

ஏமாந்து திரும்புகின்றன; அலைகள்.

வெள்ளி, 31 அக்டோபர், 2008

சந்திராயண்

சந்திரனுக்கு


விண்வெளி ஓடம் அனுப்பி இருக்கிறீர்களாமே?


வாழ்த்துக்க‌ள்; ம‌கிழ்ச்சி.


முடிந்தால் -


த‌னுஷ்கோடி க‌ட‌லின்


ம‌ண‌ற்திட்டுக‌ளுக்கும்


இர‌ண்டு ப‌ட‌குக‌ள் அனுப்புங்க‌ள்;


அங்கே க‌ண்டிப்பாய் உயிர்க‌ள் இருக்கும்.


க‌ண்ணீரையும் அங்கே க‌ண்டு பிடிக்க‌லாம்.

குருட்டுச்சுகம்

பேருந்தின்
நெரிசலால் உந்தப்பட்டு
முதுகிலுரசி நிற்கும் பெண்_
தன் நெஞ்சோடணைத்திருக்கும்
கைப்பையைத்
திரும்பிப் பார்க்காத வரை -
பாகங்கள் பற்றிய கற்பனைகளில் ,
குருட்டுச்சுகத்தோடு
தொடரும் பயணம்

நிலா பார்த்தல்

நகரத்து மொட்டை மாடிகளில்
நிலா பார்த்தல்
சுகமானது;
வானூர்தி வராத நேரங்களில்.

மழைக்குப் பெயரும்...............




















சேர்ந்தாற் போல

நாலைந்து நாட்கள்

விடாது பெய்தால்

மக்களிடம்

மழைக்குப் பெயரும் சனியன்


புதன், 29 அக்டோபர், 2008

பாதைகள்



நடந்து பயன்படுத்தவும்


ஆட்கள் இல்லாத பாதைகள்


துணைக்குப் புற்களை வளர்த்துக் கொள்ளும்

புதன், 22 அக்டோபர், 2008

ஒற்று 2

கையில் வளை இறுக்க
கண்ணிப் போனது
என் மனம் .

- புலியூர் முருகேசன்

காதுவளையங்களில்
மாட்டிக்கொண்ட நான்
கனக்க வில்லையா உனக்கு ?

- இது நான்

ஒற்று

உன் தப்படி நிழல்
மறைய - என்
பேனாவிற்குப் பிள்ளைவாதம்

- புலியூர் முருகேசன்

தொலைதூர வளைவில்
உன் வருகை ;
தாள் தேடும் பேனா

இது நான்

குண்டு மழையும் வான் மழையும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்பாகவே இலங்கையில் யுத்த மேகங்கள் திரண்டு விட்டன. ஒட்டு கேட்கும் அரசியல் கட்சிகள் சில சேர்ந்து தி மு க தலைமையில் மத்திய அரசுக்கு ஒரு சால்ஜாப்பு கெடு வைத்தன. நாடகத்தின் அடுத்த காட்சியாக மு. கருணாநிதி நேற்று மனித சங்கிலிக்கு அழைப்பு விடுத்தார். எனக்குத்தெரிந்து கட்சியில் இல்லாதவர்கள் சிலர் கூட சங்கிலியில் பங்கேற்க தயாராக இருந்தனர். உண்மையான உணர்வோடு. ஆனால் நேற்று பெய்த மழைக்கு பயந்து மனிதச்சங்கிலி ஒத்தி வைக்கப்பட்டதென தி மு க அறிக்கை விட்டது. இது எவ்வளவு கேவலமானது?
அங்கே அவர்கள் குண்டு மழையில் வாழ்வையும் இருப்பையும் தக்க வைத்துக் கொள்ள போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நம்மால் ஒரு சிலர் மணி நேரங்கள் மழையில் கூட நிற்க முடியாதா? மழையிலும் நமக்காக நம் உறவுகள் நின்றன என்ற குறைந்த பட்சஆறுதலைக்குட அவர்களுக்கு தரத் தயாராய் இல்லாத நமக்கு அவர்கள் பேரை சொல்லி பிழைப்பு நடத்தவோ அரசியல் பண்ணவோ துளியும் அருகதை இல்லை.
இந்த நேரத்தில் கவிஞர் அறிவுமதியின் கவிதை ஒன்று நினைவுக்கு (நன்றி புலியூர் முருகேசன் ) விஷயம் இதுபோல ஆனால் வடிவமும் வார்த்தைகளும் மாறி இருக்கலாம் .
இந்தச்சின்னத் துறலுக்கே
இப்படி இரும்புக் குடைக்குள்
ஒடுங்குகிறீர்களே ..
நாளைய நெருப்பு மழைக்கு
எந்தக் குடையில்
அடேய் ....
எந்தக் குடையில் ?

வியாழன், 16 அக்டோபர், 2008

தமிழ் ஈழம் என்கிற ஊறுகாய்

எப்போதெல்லாம் இலங்கையில் யுத்தம் ஆரம்பிக்கிறதோ அப்ப்போதெல்லாம் தமிழக அரசியல் களம் பரபரப்பாகும். வீரப்பன் ஆள் கடத்திய போதெல்லாம் "புலனாய்வு" பத்திரிக்கைகள் காட்டிய பரபரப்புக்கு சற்றும் குறையாதது இந்த பரபரப்பு. யார் உண்மையான தமிழ்ரத்தம் என இப்போது உரசிப்பார்த்துக்கொள்வார்கள். இது ஒரு சடங்கு போல. தனுஷ்கோடி மணல் திட்டுக்களில் பாலுக்கு இல்லாமல் செத்த குழ்ந்தைகள், கடல்நீரில் மூழ்கிய மக்கள் என இவர்களுக்கு மறந்து போன பலவும் இப்போது நினைவுக்கு வரும். கருணாநிதியும் ஜெயலலிதாவும் நடத்துகிற அறிக்கை போர் புஷ் இன் ஈராக் போரை விடவும் கேவலமானது. திருமாவளவன் மருத்துவர் அய்யா என சகலரும் தற்போது களம் இறங்கி உள்ளார்கள். தமிழ் மக்கள் செத்தால் மட்டும் அல்ல. உலக மக்களில் எந்த இனம் ஒடுக்கப்பட்டாலும் அவர்களுக்காக உண்மையில் கசிகிற மனத்தோடு நாம் செய்யும் சிறு முனுமுனுப்பு அரச பயங்கரவாதிகளை அதிர வைக்கும். மக்கள் மட்டுமே இது போன்ற நேரங்களில் சாதிக்க முடியும். பொதுவாக இது போன்ற சமயங்களில் மக்கள் சக்தியை ஒன்று படுத்துகிற தலைமையை நாம் தமிழ் நாட்டில் எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு இன்றைய பொழுது போக ஈழம் ஒரு செய்தி. நெருப்பு சுடுமென்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் எவ்வளவு சுடுமென்று சுடு படுகிரவனுக்கும் பட்டவனுக்கும் மட்டுமே தெரியும். (நண்பர் ஒருவரின் வார்த்தைகள்.). நமக்கு அவர்களின் வலி தெரிய வாய்ப்பில்லை. ஆனால் இவர்களின் போலித்தனம் அறிந்து கொள்கிற அறிவு இருக்கிறது. அறிந்து கொள்வோம். இரண்டு வாரத்தில் யுத்தம் முடிந்து விடும் என்ற தெம்பில் கேடு வைக்கிறார்கள். நாலு மாதம் தானே தேர்தல் வர என தமிழம்மாவும் பொதுவாக அறிவித்து விட்டார். நல்ல கேள்வி ஒன்றும் கேட்டுள்ளார். உங்கள் எம் பி களுக்கு பதிலாக எம் எல் எக்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் என்று. இதற்கு பதில் வராது.

சனி, 4 அக்டோபர், 2008

மழைக்காற்றிடம்

மயங்கும் பூக்கள்

என் நாசியும். - புலியூர் முருகேசன்

நீயுமிருப்பதாய்

குழம்பி யுரைக்கும் என் நாசி;

மலர் வனங்களில். - ஜெயப்பிரகாஷ்வேல்

வெள்ளி, 11 ஜூலை, 2008

கார்த்திக் பற்றிய செய்தி

http://www.hindu.com/2008/07/10/stories/2008071058210200.htm
மேலே உள்ள லிங்க் இல் நண்பர் கார்த்திக் செய்த ஆராய்ச்சியின் பயனாக விளைந்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய தகவல் அறியலாம். அவர் ஒரு இம்முனோ ஷ்டிமுலேடர் ஐ கண்டுபிடித்துள்ளார்
வாழ்த்துக்கள்

செவ்வாய், 24 ஜூன், 2008

தசாவதாரம்

கமல்ஹாசன் பத்து வேடங்கள் செய்ய நினைத்தது தவறில்லை. ஆனால் பத்து முகமூடிகள் தேவையில்லை. முகமூடிக்குள் மறைந்திருக்கும் முகத்தால் என்ன நடிப்பை காட்டிவிட முடியும்? ஒப்பனை செய்வதோடு நின்று இருக்கலாம். நவராத்திரியில் சிவாஜி ஒன்பது வேடம் போட்டார். நடிப்பில் வித்யாசம் காடட்டினார். கமல் அது போலக் கூட செய்யவில்லை. அபத்தமான காமெடிகள். லாகிக் இல்லாத காட்சி அமைப்புகள். இரண்டு நாடுகளின் தலைவர்கள் தலையிடும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்ப்பட்ட ஒரு வழக்கில் நான்கே நான்கு போலீஸ்காரர்கள் இரண்டு டம்மி எப் பி இ. கொடுமை. கதாநாயகிக்கு கடைசி வரை பெருமாள்தான் பெரிது. வைரஸ் பற்றிய பதைப்பு துளியும் இல்லை. கபிலன் பாவம். கவிதை வருமளவு நடிப்பு வரவில்லை. வலிந்து ரெண்டு கவிதை வேறு. படத்தில் நல்ல விஷயம் டூயட் இல்லை. கமலின் குரல் மீண்டும் இனிமையாகி விட்டது. இசை பூமியை ஆளட்டும்.

வெள்ளி, 6 ஜூன், 2008

உத்தப்புரம்

கீற்று என்ற இணைய தளத்தின் உதவியால் http://www.keetru.com/ உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் (their usage. I have some concerns on this term) தொடர்பாக தொடர்ந்து படிக்க முடிந்தது. அதைப்பற்றிய வினைகள் எதிர்வினைகள் எல்லாம் தொடர்ந்து வந்த போது வேறொரு சமயத்தில் மனுஷ்யபுத்திரன் வேறொரு விஷயம் சம்பந்தமாக தன் வலைப்பதிவில் எழுதியது நினைவுக்கு வந்தது. அந்தப் பதிவு இன்று இந்த நிகழ்வுக்கும் பொருந்தும் என்று நான் கருதுகிறேன். அதை இத்துடன் தந்து உள்ளேன். அவர்எழுதியது இந்த நிகழ்வைப்ப்பற்றி அல்ல என்பதை அழுத்தமாய்ச்சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.

http://uyirmmai.blogspot.com/search?updated-min=2005-01-01T00%3A00%3A00-08%3A00&updated-max=2006-01-01T00%3A00%3A00-08%3A00&max-results=34

மொழிப் போராட்டம், வெண்மணிப் படுகொலை, நெருக்கடி நிலை, தர்மபுரியில் நக்சல்பாரி இளைஞர்கள் மீது எம்.ஜி.ஆர் ஆட்சி நடத்திய சட்டவிரோத கொலைகள், சாதிக் கலவரங்கள், தலித்துகள் மீதான படுகொலைகள், இந்தியா முழுக்க இந்துத்துவ சக்திகள் சிறுபான்மையினர் மீது நடத்திவரும் தாக்குதல்கள், கடந்த சில ஆண்டுகளில் ஜெயலலிதா அரசு ஆடிய பல்வேறு கோரத் தாண்டவங்கள் என எத்தனையோ பிரச்சினைகளில் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் ஒரு வாக்கியம் கூட எழுதியதில்லை. எந்த அரங்கிலும் இதைப் பற்றி மூச்சுவிட்டதில்லை. இதை பற்றியெல்லாம் பேசாமல் இருப்பதற்கு ஒருவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால் திடீரென பொங்கி எழும் சமூக ஆவேசம்தான் இங்கே பிரச்சினையாகிறது. இந்த ஆவேசத்திற்கு பின்னிருப்பது ஒரு சமூக பிரச்சினையா அல்லது சமூகத்தில் தன்னுடைய இடம் குறித்த பிரச்சினையா?

உங்களுக்கு என்ன தோன்றுகிறது என பதிவு செய்யுங்கள்.

வருகை

தொலைதூர வளைவில்
உன் வருகை
தாள் தேடும் பேனா.

ஞாயிறு, 18 மே, 2008

நெய்தல் தனி

இந்த பகுதி இனி என் எழுத்துக்களால் நிரம்பும்.நெய்தல் வேறு ஒரு பிளாக் இல் வரும். நண்பர் விக்னேஷ் ராம் அதை விரைவில் செயல்படுத்துவார்.

வெள்ளி, 16 மே, 2008

அந்த பூப்போட்ட கைக்குட்டையை
எனக்கு ஏன் பரிசளித்தாய்
என்று இப்பொது தெரிகிறது.
கண்ணீர் விட வைப்பதென்று
அப்போதே முடிவுசெய்து விட்டாய்.
உனக்குப் பிடித்த
அந்த வெண்னிற மலர்கள்
இங்கேயும் பூத்திருக்கின்றன
என்றுனக்கு நான் சொல்லும் முன்னே
யவை வாடியுதிர்ந்து விட்ட வருத்தத்தை
யாரிடம் நான் பகிர்ந்து கொள்வது?
அந்த மலர்ச்செடிகளைத்தவிர.

புதன், 14 மே, 2008

கிட்டி விளையாடும் ஊர்ப்பையன்கள்

கிரிக்கெட் விளையாடப் போனதிலிருந்து

படித்துறைக்கு குளிக்க வருவதை

குமரிப்பெண்களும் நிறுத்தி விட்டார்கள்

மழைக்குப் பெயர்

நாலைந்து நாட்கள்
விடாது பெய்தால்
மக்களிடம் மழைக்குப் பெயர்
சனியன்

எச்சில்

நீரில்
தலை குனிந்து துப்ப
என் முகத்தில்
எச்சில்

புதன், 7 மே, 2008

அந்தக் குழந்தை


பேருந்தில் இருந்து இறங்கியதும்


இருள் சூழ்ந்த வானத்தில்


என் பயணம்


புலியூர் முருகேசன்



எட்டரை மணி பேருந்தைப் பிடிக்க


இன்னும்


ஐந்து நிமிடங்களே உள்ளதெனெ


மடியிலமர்ந்து சோறூட்டக்கெஞ்சும்


குழந்தைக்கு தெரியாது



ம. ஜெயப்பிரகாஷ்வேல்

நெய்தல் இரண்டு இதழ்கள் வந்து விட்டது.

நெய்தல் இரண்டு இதழ்கள் வந்து விட்டது. மிகப்பெரும் வரவெற்பு ஒன்றும் இல்லை என்றாலும் நன்றாக செய்யலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

புதன், 30 ஜனவரி, 2008

related blogs

http://www.blogger.com/profile/05259701506033911114 this blogh is intersting

http://rvchandrasekar.blogspot.com/ is running a blog cal;led neythal
http://www.blogger.com/profile/05259701506033911114
this also looks interesting
http://rvchandrasekar.blogspot.com/ he is running a blog called neythal.

செவ்வாய், 8 ஜனவரி, 2008

நெய்தல் வெளிவருகிறது

பொங்கல் முடிந்த அடுத்த வாரம் நெய்தல் வெளிவருகிறது. உங்கள் ஆதரவு என்றும் தேவை.
படைப்பாளிகளை அறிமுகப்படுத்துங்கள்.
இதழை நண்பர்களிடம் படிக்கக்கொடுங்கள்.

முதல் இதழில்

விக்ரமாதித்யன்
சங்கர ராமசுப்ரமனியன்
குகை மா புகழேந்தி
கலாப்ரியா
புன்னகை அம்சப்ரியா
டாக்ட‌ர் பிர‌பாக‌ர்

ம‌ற்றும் உங்க‌ள் நேச‌த்துக்குரிய‌ புதிய‌ ந‌ண்ப‌ர்க‌ளின் ப‌டைப்புக‌ளுட‌ன் எளிமையாய் எழுகிற‌து நெய்த‌ல்.

இவ‌ண்

தொகுப்பாள‌ர்க‌ள்
நெய்த‌ல்