வியாழன், 14 ஏப்ரல், 2011

மிகவும் நேர்மையான தேர்தல் போன்றே தோற்றமளிக்கிறது

தேர்தல் ஆணையம் தன்னை மிகவும் கடுமையானதாகவும் தனித்த சார்பற்ற நடு நிலைமை மிக்கதாயும் தோற்றம் காட்டியிருக்கும் இந்த தேர்தலை நான் மிகவும் சந்தேகத்துடனே பார்க்கிறேன். வெளிப்படையாகப் பார்க்கும் போது மிகவும் நேர்மையான தேர்தல் போன்றே தோற்றமளிக்கிறது. அதுதான் என்னை பெரிய சந்தேகம் கொள்ள வைக்கிறது. எப்படி நமது அதிகாரிகள் இவ்வளவு நாள் இல்லாமல் இப்படி கடமையுணர்வு பெற்றார்கள் என்று. வியாபாரிகள் வழக்கமாக கொண்டு செல்லும் கறுப்பு பணமெல்லாம் இந்தக் களேபரத்தில் சிக்கிக் கொண்டது.

காவல் துறை கூட மிகவும் கடமையுணர்வோடு செயல் பட்டதைப் பார்த்தேன். வாக்குப் பதிவு அலுவலர்கள் மிகவும் கவனத்துடன் எச்சரிக்கையுடன் செயல்பட்டார்கள். நிறைய பேருக்கு விருப்பமே இல்லாமல் கட்டாயமாக பணி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததாக அறிந்தேன். வெறு வழியில்லை. அதை அவர்கள் செய்தே ஆகவேண்டும். வேலை கடினம் கவனம் பிசகினால் பெருத்த பிரச்சனை போன்றவறால் பணம் வந்த போதும் பல ஆசிரியர்கள் இந்த பணியை விரும்பவில்லை.

இந்த தேர்தலில் மிகவும் நல்ல அம்சமாக நான் பார்த்தது, அடையாள அட்டை போலவே பூத் சிலிப்பை வீட்டுக்கே வந்து கொடுத்தது. அதனால் தான் இந்த முறை வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாக உள்ளது. நிறைய இடங்களில் வாக்குப் பதிவும் மிகவும் தாமதப் பட்டது. அதிகாரிகளின் எல்லை மீறிய எச்சரிக்கை உணர்வு மிகவும் தாமதப் படுத்தியது. மக்கள் நெடுநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. நான் இரண்டு மணி நேரம் காத்திருந்து வாக்களித்தேன்.

பிரச்சாரம் பற்றிச் சொல்ல வேண்டும். மிகவும் மந்தமாக மக்களுக்கு தொல்லை த்ராத பிரச்சாரமாக இருந்தது. எனது தொகுதியில் (முசிரி) அதிமுக வெற்றி பெற்றுவிடும் என்ற பரவலான பேச்சின் காரணமாகவோ என்னவோ ஊருக்குள் ஒரே ஒரு நாள் மட்டும் (மூன்று நாட்களில்) அதிமுக பிரச்சார வாகனம் மட்டும் வந்தது. காங்கிரசின் வண்டியோ ஆதரவாளர்களோ காணோம். பிஜேபி ஒரு நாள் வந்தது. மிகவும் ஆச்சர்யமாகப் போனது. பிஜேபி யிலும் வேலை செய்ய ஆட்கள் எனது தொகுதியில் இருப்பது ஒரு வருத்தத்துக்குரிய செய்தி. மொத்தத்தல் நண்பர் முத்தெழிலன் சொன்னது மாதிரி இந்த முறை பிஜேபி அதிக வாக்குகள் பெறக்கூடும் என்றே தோன்றுகிறது. திமுக அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக விற்கு வாக்களித்தவர்கள் நிறைய பேர் இந்த முறை இந்திய ஜனநாயகக் கட்சியையும் பிஜேபி யையும் கவனத்தில் கொண்டார்கள். இரண்டுமே வருத்ததுக்குரிய தேர்வுகள்.

மதிமுக தனித்து போட்டியிட்டிருந்தால் இந்த இரு கட்சிகளும் தேர்வில் இருந்திருக்காது. எப்போதும் மிகச் சரியாக தப்பான முடிவுகளை எடுப்பதில் நிபுணத்துவம் பெற்ற வைக்கோ இந்த முறையும் தன்னை சரியாக அடையாளம் காட்டிக் கொண்டார். நதி நீர் பற்றிய பிரச்சனைகளில் எந்தக் கருத்தையும் கொண்டிராத திமுக அதிமுகவுக்கு மாற்றாக உண்மையில் முல்லைப் பெரியாறுக்காக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்த வைக்கோ இந்த தேர்தலில் போடியிட்டு இருக்கலாம். செலவு செய்ய ஆட்களும் பணமும் இல்லை போலும்.

7 கருத்துகள்:

tommoy சொன்னது…

நிச்சயம் திமுக வெற்றி பெரும்.. யாரும் கவனிக்காத ஒரு விஷயம் இருக்கிறது இந்த தேர்தலில்..

உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் 1996 முதல் 2001 வரை கலைஞர் ஆட்சி மிக நன்றாக இருந்தது.. ஊழல் என்று எதுவும் இல்லை.. உள்கட்டமைப்பு அருமையாக இருந்தது.. பாலங்கள், கிராமத்தில் சிமென்ட் சாலை, தொழில் சாலைகள், சிங்கார சென்னை .. நல்லதொரு நிர்வாகம் என்று நல்ல ஆட்சியை கொடுத்தார். அந்த ஆட்சியில் தான் சென்னையில் டைடெல் பார்க் வந்தது.. OMR சாலை முழுவது கணினி அலுவலகங்கள்.. வேலை வாய்ப்பு என்று பல நல்ல விஷயங்கள் நடந்தது..

அந்த தைரியத்தில் தான் 2001 தேர்தலில் கூட்டணி அமைப்பதில் கோட்டை விட்டார்.. அம்மா பெரிய கூட்டணி அமைத்தார்.. வைகோவை அம்மா பக்கமே தள்ளி விட்டார்.. நல்ல நிர்வாகம் செய்ததும்.. பொற்கால ஆட்சி என்ற விளம்பரமும் தன்னை சுலபமாக வெற்றி பெற வைக்கும் என்று சற்று ஓவர் கான்பிடென்ட்ல் இருந்தார்.. முடிவுகள் பார்த்ததும் திமுக அதிர்ச்சியடைந்தது.. அப்போதுதான் இரண்டு விஷயங்கள் புரிந்தது..

1. கூட்டணி பலம் கொஞ்சம் இருக்க வேண்டும்..
2. என்னதான் நல்ல நிர்வாகம் கொடுத்தாலும் - உள்கட்டமைப்பு, சாலைகள், வேலை வாய்ப்பு, பாலம் எல்லாம் செய்தாலும் (மீன் பிடிக்க கற்று கொடுத்தல்) , மக்களை நேரடியாக சென்றடைவது
போல எதாவது செய்தால் மட்டுமே (மீனையே நேரடியாக சமைத்து கொடுத்தல்) வேலைக்காகது - (இது தான் mgr formula ... இலவச வேட்டி சேலை.. இலவச சத்துணவு.. இலவச தையல் எந்திரம்..)
நேரடியாக எனக்கு கிடைத்தது என்ன என்பது தான் வாக்களிக்கும் மக்களின் கேள்வி.. சிமெண்ட் ரோடு போட்ட , என் வயிறுக்கு சோறு போட்டியா ??? பாலம் சரி , எனக்கு நேரடியா என்ன பண்ண என்ற மக்களின் மனநிலை..

tommoy சொன்னது…

2001 தோல்விக்கு பின் கலைஞருக்கு பிடிபட்ட இந்த இரண்டு விஷயங்கள் தான் 2006 ல் அவர் அமைத்த கூட்டணி , மற்றும் கதாநாயகனான தேர்தல் அறிக்கை.. அது நன்றாக வேலை செய்தது..

இரு வேடம் அணிய ஆரம்பித்தார் - நிர்வாகத்தில் கருணாநிதி, மக்களை நேரடியாக குளிரவைப்பதில் எம் ஜி ஆர் .. அது 2006 - 2011 ஆட்சியில் நன்றாக தெரிந்தது

2011 தேர்தலில் கூட்டணியும் விட்டுவிடவில்லை.. எதிரணிக்கு சமமான கூட்டணி அமைத்தார் ... அதே போல தான் கொடுத்த இலவசங்களை , மானியங்களை வெகு சிரத்தையாக பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சேர்த்தார்..

இதுவே இன்று அவரை வெற்றி பெற வைக்க போகிறது.. !
இந்த விஷயம் பிடிபட அவருக்கு 22 வருடங்கள் ஆகியுள்ளது..
2006 ல் வைகோ ஒரு எக்ஸ்ட்ரா கோச் என்று நினைத்து அவர் சென்ற பொது இவர் அலட்டிக்கொள்ளவில்லை . ௨௦௧௧ல் வைகோ ஒரு தேவை இல்லாத சுமை என்று அம்மா திட்டமிட்டு வெளியேற்றினார் ..
இரண்டுமே ஓவர் கன்பிடேன்ட்ல் வந்த வினை.. கலைஞ்சர் சென்ற முறை 2001 ல அதன் நஷ்டத்தை அறுவடை செய்தார்.. அம்மா 2011 ல் செய்வார்.

Jayaprakashvel சொன்னது…

இலவசங்கள் கருணானிதிக்கு துணை நிற்கும் என்றே நினைத்தேன். ஆனால் நான் மிகுதியும் கிராமங்களில் அலைபவன். இதற்கு இரு தரப்பிலான கருத்துகளையும் கேட்டிருக்கிறேன். இந்த மாதிரி இலவசங்கள் கொடுப்பதை எதிர்பார்க்கும் மக்கள் கூட அந்த நன்றியுணர்வு இல்லாமல் வேறு நினைப்போடும் இருக்கிறார்கள். அவன் திருடரான். நமக்கு கொடுக்கரான் என்ற மனோபாவமும் அதிகம் உள்ளது. அதிமுகவுக்கு நல்ல பேர் இல்லை என்றாலும் கருணானிதியின் குடும்ப அங்கத்தினர்களின் ஆதிக்கம் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அது வெகுவாக அவர்களின் வாக்கு சதவீதத்தை பாதிக்கும். நிறைய இடங்களில் காங்கிரஸ் எடுத்துக் கொண்ட தொகுதிகளில் தேவையில்லாமல் அதிமுக ஜெயிக்கப் போகிறது. எனது தொகுதியான முசிரியிலும் அருகிலுள்ள கரூரிலும் திமுக நின்றிருந்தால் கண்டிப்பாக ஜெயித்திருக்கும். ஆனால் காங்கிரஸ் தோற்பதற்காகவே நிற்கிறது. இரட்டை இலை உதயசூரியன் மட்டுமே தெரிந்த என்னற்ற மக்கள் இன்னும் நம் கிராமங்களில் இருக்கிறார்கள். அவர்கள் தான் அதிகம் ஓட்டும் போடுகிரார்கள். வைகோ குறித்த உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

tommoy அவர்களின் கருத்துக்களிலும் நியாம் உள்ளது. பாப்போம்.

ஆனந்தி.. சொன்னது…

தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_23.html

சிவகுமாரன் சொன்னது…

\\வைக்கோ இந்த தேர்தலில் போடியிட்டு இருக்கலாம். செலவு செய்ய ஆட்களும் பணமும் இல்லை போலும்.///

ஓட்டுப் போடவும் ஆளில்ளைங்க .

Jayaprakashvel சொன்னது…

To know why there are no people to vote for VAIKO, visit the following post
Much interesting
http://sengovi.blogspot.com/2011/03/blog-post_23.html