
கனவுகளின் தெருவில் காணாமல் போனவன் நான்
கனவுகளின் வனத்தில் வேட்டையாடும் பிராணியும் நான்.
வாயிலிருந்து ஒழுகும் பற்பசை நுரையென
படுக்கையின் விளிம்பெல்லாம் கனவுகள்.
வெடித்துப் பரவும் விதைகளின் நிலமெல்லாம்
எருக்கஞ்செடிகள்.
கனவுகளைக் கொன்றழிக்கும் அகமுனைப்புடன்
உறங்குகிறேன்.
உன் கை படப்பட….
கனவுகள் கரைவதாய்
இப்போதொரு கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.
Royalty free image from http://www.fotosearch.com/illustration/dream.html
1 கருத்து:
கனவுகளுக்கு புது விளக்கம் தந்து விட்டீர்கள் தலைவா !
கருத்துரையிடுக