Image from : http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/97/DAM_Poster.jpg/220px-DAM_Poster.jpg
எழுதுவதை சமூகக் கடமையாக கருதுகிறவன் நான். எனது கருத்துருக்கள், அரசியல் மற்றும் பார்வைகள் மனித சமுதாய வரலாற்றின் நெடிய பக்கக்களில் இருந்து இரவல் பெறப்பட்டவை. அவற்றை எனது மொழியில் எனக்குப் பிடித்த ரகங்களில் எழுதுகிறேன். நிறைய பேர்களால் படிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
புதன், 23 நவம்பர், 2011
என்னவெல்லாம் நடக்கிறது இந்த நாட்டில்?
Image from : http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/97/DAM_Poster.jpg/220px-DAM_Poster.jpg
திங்கள், 29 ஆகஸ்ட், 2011
பேரறிவாளன் முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது தண்டனைக்குறைப்புக்காக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிட தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள்
புதன், 17 ஆகஸ்ட், 2011
நடிகர் சச்சின் டெண்டுல்கர் பாரத் ரத்னா விருதுக்கு தகுதியானவர்தானா?
திங்கள், 8 ஆகஸ்ட், 2011
சாரு மீதான கீற்றின் அசிங்கமான நடவடிக்கையை கண்டிக்கிறேன்
ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011
மைனாரிட்டி அ.தி.மு.க. அரசும் சமச்சீர் கல்வியும்
வியாழன், 14 ஜூலை, 2011
நேற்றும் மும்பையில் குண்டு வெடிப்புகள்: இன்னும் எத்தனை?
மும்பை வாசிகள் உன்மையிலேயே தைரியசாலிகள் தான். எத்தனை குண்டுவெடிப்புகள்? பயங்கரவாத தாக்குதல்கள்? இத்தனைக்கும் மீறி மக்கள் அங்கே குவிந்த வண்ணமும் பிழப்பு நடத்தியும் வருகிறார்கள். தமில் நாட்டில் எவ்வளவு பயமின்றி வாழிகிறோம். சில நாட்களில் நான் பேருந்து ரயில்களில் போகும் போது நினைப்பதுண்டு. மும்பை மக்கள் நம்மைப் போலவே கவலையின்றி போவார்களா படு கவனத்தோடு போவார்களா என்று. அங்கே அமைதி நிலவட்டும்.
மும்பை போன்ற பெரு நகரங்களில் இது மாதிரியான தாக்குதல்கள் மிக எளிதாக நிகழ்த்தப் படுகிண்ரன. உலவுத்துறையாகட்டும் பாதுகாப்புத்துறையாகட்டும். கண்கானிப்பது மிக கடிணம் தான். மக்கள் கொஞ்சம் விழிப்போடும் பொறுப்போடும் இருந்து கொள்ள வேன்டியதுதான். இது மாதிரியான எல்லா நாசகாரியங்களிலும் உள்ளூர் வாசிகள் சிலரின் உதவியும் இருப்பதுண்டு. அது குறையாமல் அல்லது குறைக்கப் படாமல் இது மாதிரியான சதிச்செயல்கலை தடுப்பது கடினம்.
இந்த குண்டுகளை யார் வைத்தார்களோ?
திங்கள், 11 ஜூலை, 2011
மதுபான பொருட்களின் விலையேற்றம்: ஒழுக்கக்கேடான தமிழக அரசு

ரொம்ப நாட்களாக எதுவும் எழுதவில்லை. எதில் இருந்து ஆரம்பிப்பது என்ற சிறு தயக்கம். அது நேற்று தொலைக்காட்சியில் ஒரு செய்தியை கேட்டபோது மறைந்து விட்டது. மதுபானங்களின் விலையை முன்னறிவிப்பின்றி அரசு உயர்த்தியுள்ளது. குவாட்டருக்கு ஐந்து ஆFப்புக்கு பத்து fபுல்லுக்கு இருபது என அநியாய விலை உயர்வு. அதுவும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி. சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை ஊழியர்களே மூடிவிட்டதாக சன் நியூஸ் சொன்னது. காரணம் மதியம் விலையுயர்த்தி விட்டு காலை விற்ற சரக்குக்கும் அதே விலைப்பட்டியல் படி பணம் கேட்டார்களாம் அதிகாரிகள்.
இது மட்டும் இல்லை. இது மாதிரியான எல்லா விலை உயர்வுகளுக்கும் இவர்கள் சொல்லும் அடிப்படை காரணம் பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம். பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலையுயர்வை காரணம் காட்டி விலையேற்றி வந்தன மைய அரசுகள். ஆனால் இப்போதை மைய அரசு ஒரு படி மேலே போய் இனி பெட்ரோலிய பொருட்களின் விலையை நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம் என நாயை அவிழ்த்து விட்டுவிட்டது. விளைவு கச்சா எண்ணெயின் விலை குறைவு பற்றிய கவலை எதுவும் இல்லாமல் பலமுறை விலையேற்றம் நடந்துவருகிறது.
இது மாதிரியான மக்கள் விரோத அரசுகள் இப்படித்தான் செய்யும். அதிலும் முந்தைய மற்றும் இன்னாள் தமிழக அரசுகள் இன்னும் கொடூரமானவை. மிகவும் சல்லித்தனமானவை. மாநகரப் பேருந்துகளில் அறிவிக்கப்படாத கட்டணக் கொள்ளை நடத்துகின்றன. எங்கும் வெள்ளைப்பலகை பேருந்துகளே இல்லை (இவற்றில் குறைந்த பட்ச கட்டணம் ரூபாய் ரெண்டு). ஏழை மக்கள் அதிகம் புழங்கும் எல்லாப் பகுதிகளிலும் சொகுசுப் பேருந்துகளும் M வரிசைப்பேருந்துகளும் அலைந்து மக்களைக் கொள்ளையடித்து வருகின்றன. இதனினும் மேலாக கையில் சீட்டு கிழித்து கொடுக்கும் நடத்துனர்கள் புதியவர்களிடம் விருப்பம் போல விலையேற்றி கொடுப்பதை நானே அனுபவித்திருக்கிறேன். மெசினில் கொடுக்கும் டிக்கெட்டில் ஊர் பெயர் இருக்கும். கையில் கொடுப்பதில் இருக்காது. இதனால் மூன்று ரூபாய் பயணத்துக்கு நான்கு ரூபாய் டிக்கெட் கொடுப்பதெல்லாம் நடக்கிறது. இது கண்டிப்பாக நடத்துனர்கள் செய்யும் திருட்டு அல்ல. அவர்களின் மேல் திணிக்கப் படும் அதிகாரிகளின் லாபவெறி. இது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே உரித்தான குணம் .
சேவைத்துறையில் உள்ள அரசு நிறுவன்ங்கள் ஏன் லாபம் சம்பாதிக்க வேண்டும்? அன்றாடக் கூலிகளிடம் ஐம்பது பைசா கொள்ளையடித்து அல்லது பிச்சை எடுத்துத்தான் இந்த அரசை நடத்த வேண்டுமா? டாஸ்மாக் ஊழியர்களும் இது போல லாபம் சம்பாதிக்க நிர்பந்திக்கப் படுபவர்கள் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை (அவர்கள் அரசிடம் திருடுவதும் உண்டு/குடிமகன்களை ஏமாற்றுபவர்களும் உண்டு.). டாஸ்மாக் பார்களில் ஒரு தண்ணீர்ப்பொட்டலத்தின் விலையென்ன என்ரு விசாரித்துப் பாருங்கள். பிரபஞ்சன், சாரு நிவேதிதா அ. மார்க்ஸ் முதலானோர் டாஸ்மாக் பார்களின் சுகாதாரக் கேடு பற்றியும் இழி நிலை பற்றியும் எழுதியும் பேசியும் வருகிறார்கள். வரவேற்கத்தக்கது. குடிகாரர்கள் என்று இழித்துப் பேசப்படும் அவர்கள் தான் இந்த அரசு இயந்திரத்தின் சக்கரங்களை ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு இப்படி சரக்கு விற்று சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அதன் லாபவெறி அப்படி செய்யத்தூண்டுகிறது.
மதுபான பொருட்களின் விலையேற்றம் வெறும் குடிகாரர்களை மட்டும் பாதிப்பதல்ல. அது நல்லறம் பேண வேண்டிய அரசின் குணக்கேட்டின் மற்றுமொரு எடுத்துக்காட்டு.
புதன், 1 ஜூன், 2011
இரண்டு வார கால அதிமுக ஆட்சி
ஜெயலலிதா தலைமையிலான மிகுந்த பலம் கொண்ட அதிமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு வாரா காலங்கள் முடிந்து விட்டன. மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை மட்டுமே விரும்பியுள்ளதாக நான் நினைக்கிறேன். இந்த ஆட்சி குறித்த எதிர்பார்ப்பு அவர்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் ஆட்சி குறித்த சில முணுமுணுப்புகள் இப்போதே தொடங்கி விட்டன. மின்வெட்டை இவர்களால் உடனடியாக குறைக்க முடியாது என்பது உண்மையானாலும் குறைக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் / எடுக்கிறார்கள் என்பது குறித்த விளக்கத்தை தெரிவிக்க வேண்டியது அரசின் அதாவது முதல்வர் ஜெயலலிதாவின் கடமை. இனி தமிழக அரசு என்றாலே முதல்வர் ஜெயலலிதாதானே?
சட்டசபை இடமாற்றம், மேலவை கைவிரிப்பு நலத்திட்ட பெர்யர்மாற்றங்கள் என ரணகளமாக தொன்டங்கிய இந்த அரசின் எதேச்சதிகாரப் போகினை தட்டிக் கேட்கும் மனனிலையில் திமுக இல்லை. அதற்கு இப்போது டெல்லி திகார் ஜெயிலில் கிளை திறக்கும் பணினெருக்கடி. தேமுதிக ஒன்றும் செய்ய முடியாத செத்த பாம்பு. மதிமுக மட்டும் இதை எதிர்த்து சில சுவரொட்டிகள் ஒட்டியதாக படித்தேன்.
இந்த அரசின் ஆரம்பகால அட்டூழியங்களில் என்னை மிகவும் வெறுப்படைய செய்தது சமச்சீர் கல்வியை தலைமுழுகியது. அதன் குறை நிறைகளை சீர்தூக்கி இன்ன்னும் கொஞ்சம் பொறுமையாக முடிவெடுத்து இருக்கலாஅம். இது பிள்ளைகளின் எதிர்கலம். அவர்கள் குழம்பித்திரியும் வகையில் இந்த அரசுகள் நடவடிக்கை உள்ளன. கல்விக்கட்டணத்தை முறைப்படுத்த முதல்வர் முனையாதது அவரின் மேல் சந்தேகம் கொள்ள வைக்கிறது. எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்.
சுண்டக்க மந்திரிகளைப் போட்டுக் கொண்டு அவர்கள் கைகட்டி வாய் பொத்தி நிற்பார்கள் என்று தனியதிகாரம் படிக்கும் எண்ணம் முதல்வருக்கு இருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு வலுவாக உள்ளது. பொறுத்துப் பார்ப்போம்.
ஞாயிறு, 15 மே, 2011
நடை
செவ்வாய், 26 ஏப்ரல், 2011
ஜான் டேவிட் - இன்னுமொரு ஆயுள்தண்டனை தேவையா?



படிக்கப் படிக்க கோபம் தான் வந்தது. அவர் வெளி நாட்டுக்கு தப்பியோடி விட்டார் என்றும் பாதிரியாராகி விட்டாரென்றும் பல கதைகள் முன்பு உலவின. ஆனால் அவர் ஜான் மாரிமுத்து என்ற பெயரில் ஒரு BPஓ நிறுவனத்தில் மிகவும் நல்ல விதமாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் நுனி நாக்கு ஆங்கில புலமையை மிகவும் அங்கலாய்ப்போடு தினகரன் நாளிதழ் எழுதியது. அதில் பெண்களை வசியப்படுத்துபவனின் கெடு கட்ட தனத்துக்கு ஒப்பானதொரு தொணிஏ எனக்குத் தெரிந்தது. இந்த மாதிரி இரண்டு ரூபாய்க்கு விற்கப்படும் நாளிதழ்களை படிப்போர் நிரைய. அவர்களுக்கு இந்த செய்திகல் தப்பான பிம்பத்தை உருவாக்குகின்ரன. ஜான் டேவிட் வெளியில் வந்து எதாவது சட்டவிரோத மக்கல் விரோத காரியங்களில் ஈடு பட்டு இப்போது மீண்டும் மாட்டிக் கொண்டாலாவது பெசலாம். அவர் பாவம் போல அமைதியாக வேலை தான் பார்த்து வந்துள்ளார். அவரின் ஒரு ஆயுட்கால சிறைவாசம் கண்டிப்பாக அவருக்குப் போதுமானது என்பது என் எண்ணம். திருந்தி வாழ்பரை மறுபடியும் பழைய குற்றத்துக்கக சிறையிலடைப்பது சரியல்ல என்றே படுகிறது. காவிரி தண்ணிக்கும், முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கும் பாலாறு பிரச்சனைகலுக்கும் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யாத தமிலக அரசு ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை எதிர்த்து என்னவெல்லாம் பன்னி வருகிறது. தனி மனிதரான ஜான் டேவிட்டையும் இந்த அரசின் கொடுங்கரங்கள் விட்டு வைக்கவில்லை. ஒரு தலைமுறையையே சிறையில் கழித்து விட்ட நளினி முருகன் பேரறிவாளனெல்லாம் சிறையிலேயே வாடுவதால் இந்த அரசுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது? தா கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க முடியாத அரசு இங்கெ ஏன் இப்படி ஆட்டம் போடுகிறது? எனது ஆதங்கத்தை ஒட்டிய வேறு ஒரு பதிவையும் கீழுள்ள இணைப்பில் படியுங்கள்.
ஜான் பாண்டியனும், ஜான் டேவிட்டும்!
திங்கள், 25 ஏப்ரல், 2011
இந்தியாவில் தான் இருக்கிறோமா என்பது சந்தேகமாக உள்ளது

இந்தியாவில் தான் இருக்கிறோமா என்பது சந்தேகமாக உள்ளது
வியாழன், 14 ஏப்ரல், 2011
மிகவும் நேர்மையான தேர்தல் போன்றே தோற்றமளிக்கிறது
தேர்தல் ஆணையம் தன்னை மிகவும் கடுமையானதாகவும் தனித்த சார்பற்ற நடு நிலைமை மிக்கதாயும் தோற்றம் காட்டியிருக்கும் இந்த தேர்தலை நான் மிகவும் சந்தேகத்துடனே பார்க்கிறேன். வெளிப்படையாகப் பார்க்கும் போது மிகவும் நேர்மையான தேர்தல் போன்றே தோற்றமளிக்கிறது. அதுதான் என்னை பெரிய சந்தேகம் கொள்ள வைக்கிறது. எப்படி நமது அதிகாரிகள் இவ்வளவு நாள் இல்லாமல் இப்படி கடமையுணர்வு பெற்றார்கள் என்று. வியாபாரிகள் வழக்கமாக கொண்டு செல்லும் கறுப்பு பணமெல்லாம் இந்தக் களேபரத்தில் சிக்கிக் கொண்டது.
காவல் துறை கூட மிகவும் கடமையுணர்வோடு செயல் பட்டதைப் பார்த்தேன். வாக்குப் பதிவு அலுவலர்கள் மிகவும் கவனத்துடன் எச்சரிக்கையுடன் செயல்பட்டார்கள். நிறைய பேருக்கு விருப்பமே இல்லாமல் கட்டாயமாக பணி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருந்ததாக அறிந்தேன். வெறு வழியில்லை. அதை அவர்கள் செய்தே ஆகவேண்டும். வேலை கடினம் கவனம் பிசகினால் பெருத்த பிரச்சனை போன்றவறால் பணம் வந்த போதும் பல ஆசிரியர்கள் இந்த பணியை விரும்பவில்லை.
இந்த தேர்தலில் மிகவும் நல்ல அம்சமாக நான் பார்த்தது, அடையாள அட்டை போலவே பூத் சிலிப்பை வீட்டுக்கே வந்து கொடுத்தது. அதனால் தான் இந்த முறை வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாக உள்ளது. நிறைய இடங்களில் வாக்குப் பதிவும் மிகவும் தாமதப் பட்டது. அதிகாரிகளின் எல்லை மீறிய எச்சரிக்கை உணர்வு மிகவும் தாமதப் படுத்தியது. மக்கள் நெடுநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. நான் இரண்டு மணி நேரம் காத்திருந்து வாக்களித்தேன்.
பிரச்சாரம் பற்றிச் சொல்ல வேண்டும். மிகவும் மந்தமாக மக்களுக்கு தொல்லை த்ராத பிரச்சாரமாக இருந்தது. எனது தொகுதியில் (முசிரி) அதிமுக வெற்றி பெற்றுவிடும் என்ற பரவலான பேச்சின் காரணமாகவோ என்னவோ ஊருக்குள் ஒரே ஒரு நாள் மட்டும் (மூன்று நாட்களில்) அதிமுக பிரச்சார வாகனம் மட்டும் வந்தது. காங்கிரசின் வண்டியோ ஆதரவாளர்களோ காணோம். பிஜேபி ஒரு நாள் வந்தது. மிகவும் ஆச்சர்யமாகப் போனது. பிஜேபி யிலும் வேலை செய்ய ஆட்கள் எனது தொகுதியில் இருப்பது ஒரு வருத்தத்துக்குரிய செய்தி. மொத்தத்தல் நண்பர் முத்தெழிலன் சொன்னது மாதிரி இந்த முறை பிஜேபி அதிக வாக்குகள் பெறக்கூடும் என்றே தோன்றுகிறது. திமுக அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக விற்கு வாக்களித்தவர்கள் நிறைய பேர் இந்த முறை இந்திய ஜனநாயகக் கட்சியையும் பிஜேபி யையும் கவனத்தில் கொண்டார்கள். இரண்டுமே வருத்ததுக்குரிய தேர்வுகள்.
மதிமுக தனித்து போட்டியிட்டிருந்தால் இந்த இரு கட்சிகளும் தேர்வில் இருந்திருக்காது. எப்போதும் மிகச் சரியாக தப்பான முடிவுகளை எடுப்பதில் நிபுணத்துவம் பெற்ற வைக்கோ இந்த முறையும் தன்னை சரியாக அடையாளம் காட்டிக் கொண்டார். நதி நீர் பற்றிய பிரச்சனைகளில் எந்தக் கருத்தையும் கொண்டிராத திமுக அதிமுகவுக்கு மாற்றாக உண்மையில் முல்லைப் பெரியாறுக்காக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்த வைக்கோ இந்த தேர்தலில் போடியிட்டு இருக்கலாம். செலவு செய்ய ஆட்களும் பணமும் இல்லை போலும்.
வெள்ளி, 8 ஏப்ரல், 2011
அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத ஒப்பேற்றல்களை கண்டிக்கிறேன்
புதன், 6 ஏப்ரல், 2011
நின்று வாழும் தமிழ்க்குடி
சாலையின் புறத்தில் சரிந்து விழுந்திருக்கும்
இருசக்கர வாகனத்தின் அடியில் மாட்டிக் கொண்டு-
வேதனையைக் கதறும் சிறுபிள்ளையின் குரலுக்கு,
மாநகரப் பேருந்தை நிறுத்தி
குழந்தைக்கு உதவ
ஆட்களைப் பணித்த
அந்த ஓட்டுனரைப் போல-
இன்னும் சிலர் இருப்பதால்
தமிழ்க்குடி நின்று வாழும்;
இன்னும் சில நூறாண்டுகள்.
வெள்ளி, 1 ஏப்ரல், 2011
மிஸ்பா- ஒரு சாமுராய்

கடந்த சில நாட்களாக எழுதுகிற மன நிலையில் இல்லை. இருந்தாலும் இந்த சில நாட்களில் நான் எழுத வேண்டும் என்று நினைத்த இரு விசயங்களை மிகச் சுருக்கமாக எழுதுகிறேன்.
1. வைகோ என்ற மனிதருக்கு நடந்த நம்பிக்கை துரோகம்
இதை உண்மையில் நம்பிக்கை துரோகம் என்பதா வேறு எதாவது உளரசியல் நலன்கலை முன்வைத்து இப்படி ஒதுங்கிக் கொண்டார்களா அல்லது ஒதுக்கப் பட்டார்களா என்று மிகச் சரியாக விளங்கவில்லை. ஒரு சாதாரண அரசியல் ஆர்வலனின் பார்வையில் இந்த விசயத்தில் வைகோவுக்காக என் வருத்தங்களைத் தெரிவிக்கவே விரும்புகிறேன். வைகோவும் தவறுகளும் துரோகங்களும் செய்தவர்தான். ஆனால் ஒரு தலைவர் என்கிற வகையில் தமிழகத்தின் இரண்டு தலையாய தலைவலிகளுக்கு அடுத்தது மக்களில் பொதுவானவர்களும் ஒத்துக் கொள்ளும் தலைவர் வைகோ. அப்படிப்ப்ட்ட வைகோ தன்னால் எந்த அளவுக்கு தவறான முடிவுகள் எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு எடுத்தாலும் அரசியல் காரணங்களுக்கு அப்பாற்பட்டு சில மக்கள் போராட்டங்களையும் சில மக்களுக்கான போராட்டங்களையும் செய்தவர் வைகோ. தோல்வியே பிரதானமாக இருந்த போதிலும் தனக்கென தொண்டர்களைக் கொண்ட ஒரே கட்சி மதிமுக தான். அது போக தமிழர்களின் வரலாற்றுக் கடமையான தமிழீழப் போராட்டங்களை ஆதரித்தவரும் (விமர்சனங்கள் நிறைய உண்டு) அந்த கடமையின் நடமாடும் வடிவமாக தன்ன்னை முன்னிறுத்தி தமிழகத்தில் அந்த கடமையை உயிர்ப்போடு வைத்திருப்பவருமான வைகோவின் தோல்விகள் அவருக்கு மட்டும் அல்ல. தமிழக மக்கள் எல்லோருக்கும் அந்த துயரத்தில் பங்கு உண்டு.
2. மிஸ்பா உல் ஹக் எனும் சுத்த வீரனின் ஆட்டம்.
இந்த வருட கிரிக்கெட் உல்கக் கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் என்று எழுதி இருந்தேன். அதை நான் விரும்பவும் செய்தேன். ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா ஓரளவு சிறப்பாக விளையாடியதாலும் சில பாகிஸ்தானிய பேட்ஸ்மேன்களின் பொறுப்பின்மையாலும் தோற்று விட்டது. இப்போதெல்லாம் வெகு அரிதாகத்தான் கிரிக்கெட் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த குறிப்பிட்ட போட்டி மறக்க முடியாத போட்டியாகி விட்டது. காரணம் மிஸ்பா உல் ஹக். ஒரு பெரிய தேசத்தின் மிகப்பெரும் மக்கள் திரள் நடுவே ஒற்றை ஆளாக எதிரில் இருக்கும் ஆட்டக்காரனையும் தவிர்த்து தனியொருவனாக ஒட்டு மொத்த இந்திய அணியினருக்கும் இந்திய அணியின் ரசிகர்களுக்கும் 49.2 ஓவர் வரை கிலி கிலப்பிய மிஸ்பா உல் ஹக் ஒரு மாவீரன் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த கடைசி ஜாஹிர்கான் ஓவரில் முதல் இரண்டு பந்துகள் ரண்களாக போகாத பின்பு தான் இந்தியர்கள் வெற்றிக் கூச்சல் போட்டார்கள். வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். அதற்கு முந்தைய ஓவர்களில் மிஸ்பாவின் உறுதியைப் பார்த்த மொஹாலி ஸ்டேடிய மக்கள் வாயடைத்துப் போய் தான் இருந்தார்கள். கடைசியாக உமர் குல் இருக்கும் வரை கூட இந்தியா ஜெயித்து விடும் என்று யாருக்கும் நம்பிக்கை இல்லை. காரணம் மிஸ்பா. அந்த கடைசி ஓவரில் எல்லொருக்கும் எழுந்த பயமே மிஸ்பாவின் துணிவுக்கும் திறமைக்கும் சான்று. என்னவொரு உறுதி. ஜெயிப்பதற்கு வழியே இல்லை. எதிரணியினர் பதினோரு பேர் மட்டும் அல்ல. மொத்த மொஹாலி ஸ்டேடியமும் இந்திய அணிதான் என்ற நிலை. இப்படி இருந்தாலும் அணியின் வெற்றிக்காக இறுதி வரை தளராமல் போராடிய மிஸ்பாவுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்படாவிட்டாலும் அந்த ஆட்டத்தின் நாயகன் இதே நிலமையில் தோல்வி உறுதி செய்யப்பட்ட நிலையில் தனியாக ஆடிக் கொண்டிருந்த சேவாக் எப்படி பயந்து அடி வாங்கி ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டார் என்பதை முன்பு பார்த்திருக்கிறேன்.
மிஸ்பா- ஒரு சாமுராய்.
சனி, 26 மார்ச், 2011
எண்ணெய்வளம் என்ற சாபம் உங்களை சும்மா விடாது
அமெரிக்கப் பேரரசின் தலைமையிலான நேட்டொ படைகள் லிபியாவில் பிரச்சனையைத் தீர்க்கிறேன் என்று வம்படியாக இந்த நாட்களில் யுத்தத்தை தொடங்கியுள்ளன. எதிர்பார்த்தது போலவே சீனாவும் ரஷ்யாவும் இந்தப் படையில் இல்லாததோடு இந்தத்தாக்குதலை கண்டனம் செய்துள்ளன. அமெரிக்காவின் அடியாளான இந்தியா என்ன செய்கிறதென்று தெரியவில்லை. யுத்தம் எங்கு நடந்தாலும் அழிவு பொதுமக்களுக்குத்தான். வீரம் என்பதெல்லாம் இந்தத் தொழில் நுட்ப உலகில் பின்னுக்குத்தள்ளப்பட்டு அழிவு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு யுத்தங்கள் செய்யப்படுகிறன. அமெரிக்கப் படைகள் தாலிபான்களை அல் காயிதாவை குறி வைப்பதாக சொல்லிக் கொண்டு ஆப்கனின் பழங்குடி மக்கள் மீது ஆளில்லா விமானங்களை ஏவி குண்டுகளை வீசிக் கொள்கிறது. எந்த நாடானாலும் அமெரிக்காவுக்கு பயிற்சிக்களம் தான். இலங்கையில் இதை விடவும் பல்லாயிரம் மடங்கு சொல்லொணாத்துயரில் மக்கள் அரசப் படைகளின் அடக்கு முறைக்கும் பேரழிவுக்கும் உள்ளான போது சொரணை வராத இந்த அமெரிக்க அடியாள்களின் கூட்டத்துக்கு இப்போது என்ன லிபிய மக்கள் மீது கரிசனம்?. இரண்டு நாடுகளுக்கும் உள்ள ஒரே வித்யாசம் எண்ணெய்வளம். வேறொரு காரணமும் இல்லை.
இப்போது இந்த விசயத்தில் கருத்து சொல்லும் சீனாவும் ரஷ்யாவும் உண்மையில் மக்களுக்காகப் பேசுவதாக தெரியவில்லை. வெனிசுலாவின் ஹியூகோ சாவேஸ் முதல் கியூபா சீன வரை எல்லோரும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக நின்றவர்கள். எனக்குத்தெரிந்து அதற்கு ராஜபக்சே அமெரிக்காவின் அங்கிகரிக்கப் பட்ட அடியாளாக இல்லாமல் இருப்பதே காரணம் என்று நினைக்கிறேன்.
மிகவும் வருத்தம் என்னவெனில் சொந்தமாக அடிவாங்கிக் கொள்ளக் கூட இந்த உலகில் மக்களுக்கு உரிமை இல்லை. வாயில் எச்சில் ஒழுகக் காத்திருக்கும் அமெரிக்க ஒநாய்க்கு பலியாகவிருக்கும் லிபிய மக்களுக்கு என் அனுதாபங்கள். எண்ணெய்வளம் என்ற சாபம் உங்களை சும்மா விடாது. அது போக எகிப்து டுனீசியா மாதிரி லிபியாவில் நடக்கும் மக்கள் பேரெழுச்சிப் போராட்டங்களை மக்கள் கிளர்ச்சிகளை புரட்சி என்றும் அது அடக்கப்படுகிறது என்றும் மலினப்படுத்தும் குயுக்திக்காரர்களை ஊடகவியாபாரிகளை கண்டிக்கிறேன். நண்பர்கள் சிலரும் அதை உண்மை என நம்பியிருக்கிறார்கள் . அதுவும்வருத்தம்.
இந்த விசயம் குறித்து மிக விரிவானதொரு முழுமையானதொரு கட்டுரையை பின் வரும் இணைப்பில் காணலாம். நான் எழுத நினைத்த நிறைய தகவல்கள் அதில் உள்ளன. மிகவும் அற்புதமான கட்டுரை. அவசியம் படியுங்கள். பரப்புங்கள்.
http://kalaiy.blogspot.com/2011/03/blog-post_23.html