எழுதுவதை சமூகக் கடமையாக கருதுகிறவன் நான். எனது கருத்துருக்கள், அரசியல் மற்றும் பார்வைகள் மனித சமுதாய வரலாற்றின் நெடிய பக்கக்களில் இருந்து இரவல் பெறப்பட்டவை. அவற்றை எனது மொழியில் எனக்குப் பிடித்த ரகங்களில் எழுதுகிறேன். நிறைய பேர்களால் படிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
அமராவதியின் கரைகளில் அழிந்துவருகிறது நாகரீகம்
கழிவான சாயங்கள் நதியேறிப் போகின்றன.
நதியோர நிலங்கள் நஞ்சேறி மடிகின்றன.
அமராவதியின் கரைகளில் அழிந்துவருகிறது நாகரீகம்.
சனி, 21 ஆகஸ்ட், 2010
இன்றைய எரிச்சல்: மதன் கார்க்கியும் பாட்டெழுதும் சாப்ட்வேரும்
புதன், 18 ஆகஸ்ட், 2010
NDM 1சூப்பர்பக்: என்னதான் இது? சில அடிப்படை செய்திகள்


NDM1 (New Delhi Beta Lactamase) அப்படியான ஒரு எதிர்ப்பு சக்தி தான். NDM1 எனப்படும் இந்த நொதி (enzyme) 2008 இல் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் மருத்துவம் பார்த்துக்கொண்ட ஐரொப்பியர் ஒருவரிடம் இருந்து இது முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு நியு டெல்லி பீட்டா லாக்டமேஸ் சுருக்கமாக NDM1 என்று பெயரிட்டு விட்டார்கள். இந்த புதுவகை எதிர்ப்புக்காரணியின் கூடுதல் தகுதி என்னவென்றால் இது மிகவும் அரிதாக அதே சமயம் கடைசி அஸ்திரமாக உபயோகிக்கப்படும் கார்பபீனம் எனப்படுகிற ரகத்திலான ஆன்டிபயாடிக்குகளையும் மிக பரவலாக உபயோகிக்கப்படும் அமினோகிளைக்கொசைடுகள் எனப்படுகிற ஆன்டிபயாட்டிக்குகளையும் எதிர்க்க வல்லது. மேலும் இந்த வல்லமை வெகு எளிதாக மற்ற நோயுண்டாக்கிகளுக்கும் பரவக்கூடியது. இந்த லாக்டமேசுகள் எனப்படும் நொதிகள் பீட்ட லாக்டம் வகையான ஆண்டிபயாட்டிக்குகளை எதிர்க்க வல்லன. பெனிசில்லின் கூட இந்த வகையான ஆன்டிபயாட்டிக்தான். மெத்திசில்லின் எதிர்ப்பு ஸ்டபைலோகாக்கஸ் ஆரியஸ் என்கிற சூப்பர்பக் பல பத்தாண்டுகளாக மருத்துவ மற்றும் ஆய்வுலகில் வெகு பிரபலம். அனால் இது சாதாரணமாக பொதுமக்கள் பயப்படத்தேவை அற்ற ஒரு விசயம். ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய தீவிரமான விசயம். நாள் தோறும் பட்டினியாலும் நூறு நூறு ஆண்டுகள் பழமையான காலராவாலும், மலேரியாவாலும், சாதரணமான வயிற்றுப்போக்கு நோய்களாலும் இறக்கும் மக்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். புதிதாக சொல்லப்பட்டாலும் இந்த சூப்பர்பக்குகள் மிகக் கவனமாக கையாண்டால் கட்டுக்குள் கொண்டு வரக்குடியனவே. 2010 ஆரம்பத்தில் அமேரிக்காவில் இந்த NDM 1 கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் அவர்கள் மிகப்பழைய சில வேறு ரக ஆன்டிபயாட்டிக்குகளை கொண்டு இந்த நோய்களை குணப்படுத்தி வருகிறார்கள். கனடாவிலும் அதே போலத்தான். தற்போது மிகவும் பரபரப்பாக்கப் பட்ட ஆராய்ச்சி கட்டுரையில் கூட பதினான்கில் இரண்டு ஆண்டிபயட்டிக்குகள் இதை அழித்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் மருந்துகள் தனித்தனியே சொதிக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலும் மருத்துவர்கள் கட்டுக்குள் வராத வியாதிகளை குனப்படுத்த கலவையான மருந்துகளை கொடுப்பது வழக்கம். அந்த கலவையை யோசித்து வழங்கினாலே இதை கட்டுப்படுத்தி விட முடியும். 2008 இல் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இது வரை ஒருவர் மட்டுமே இறந்ததாக நான் படித்தேன். அவர் பாகிஸ்தானில் விபத்தில் கால் முறிவுக்கு சிகிச்சை செய்து கொண்டவர். நாள்பட்ட வியாதியோடு இறந்து விட்டார். இந்த ஆய்வையும் அந்த கட்டுரையையும் ஒட்டி பல சர்ச்சைகள். இதில் சென்னை பல்கலைகழக ஆய்வு மாணவர் கார்த்திகேயன் மற்றும் முனைவர் பத்மா ஆகியோரும் சம்பந்தப்படிருக்கிறார்கள். இதில் கார்த்திகேயன் Wyeth என்கிற மருந்து தயாரிப்பு பகாசுர நிறுவனத்திடமிருந்து கருத்தரங்கு போய்வர உதவி பெற்றிருக்கிறார். நான் கூட இருமுறை மஹிகோ என்கிற பகாசுர நிறுவனத்திடமிருந்து உதவி பெற்று கருத்தரங்குகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் என் ஆய்வை அதன் முடிவை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. Wyeth நிறுவனம் மீது இப்போது பரவலாக ஆய்வை தமக்க்கு சாதகமாக திசை திருப்பி இருக்கலாம் என குற்றம் சாட்டப்படுகிறது. அது முழுவதும் சரியென்று என்னால் இப்பொதைக்கு சொல்ல முடியாவிட்டாலும் ஏறக்குறைய ஐந்து பகாசுர மருந்து த்யாரிப்பு நிறுவனங்களில் (AstraZeneca, Merck, Pfizer, Dechra, GlaxoSmithKline,) பங்குகள் வைத்திருக்கும் முனைவர் டேவிட் லிவர்மோர் இந்த ஆய்வில் சம்பந்தப்பட்டிருப்பது கவனிக்க வேண்டியது. உலகமயமாக்களின் விளைவாக மருத்துவ சுற்றுலா பிரபலமாகி வருவது, இந்திய மருத்துவமனைகள், இடைத்தரகர்கள், வெளி நாட்டு மருத்துவ கழகங்கள் இவையெல்லாம் இதில் லாபம் சம்பாதிப்பது இது போன்ற காரணங்களால் பணம் விளையாடுகிறதால் இந்த விசயம் பெரிதாக்கப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து வருகிற பயணிகள் இங்கே மிகக் குறைந்த செலவில் சிகிச்சை மேற்கொள்கின்றனர். அது அவர்களுக்கும் லாபமாகப் படுகிறது. இத்தனை அமளிதுமளி ஆன பின்னும் கனடாவில் இருந்து முப்பது பேர்கள் பெங்களூருவுக்கு சிகிச்சைக்கு வருகிறார்கள். இதனடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகம் சொல்லி வரும் இந்திய மருத்துவ வணிகத்தின் மீதான திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் என்பதிலும் உண்மை இல்லாமலில்லை எனத் தெரிய வருகிறது. இதை ஒப்புக்கொள்கிற அதே வேளை நமது மருத்துவமனைகளும், மருத்துவர்களும் அவ்வளவு தரத்தில் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த ஆய்வில் அப்பல்லோ மருத்துவமனையும் சம்பந்தப் பட்டிருக்கிறது. எனவே சிறிது பெரிது என்றில்லாமல் மருத்துவமனைகள் தரம் தாழ்ந்து உள்ளன என்பது மறுக்கவியலாத ஒன்று. அதே சமயம் நமக்கிருக்கிற நோயுள்ள மக்கள் தொகை மற்றும் இருக்கிற மருத்துவர்கள் மருத்துவமனைகள் விகிதாச்சாரத்தில் இதற்கு மேலும் தரத்தை எதிர்பர்ர்க்க வேண்டுமானால் அரசுதான் முன்முயற்ச்சி எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் தான் பலவித நோய்களின் பிறப்பிடம் என்று கூசாமல் சொல்லலாம். எவ்வளவு பணம் விளையாடுகிறது அங்கே. தரம்?. தனியார்கள் பெரு நிறுவனங்கள் லாப நோக்கோடுதான் தமது மருத்துவமனைகளை நடத்துவார்கள் . அவர்கள் மீது தரக்கட்டுப்பாடு விதிக்கும் முன்பாக அரசு தனது மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வசதிகளும் தரமான மருத்துவர்களும் உள்ளனர். சரியான செயல்பாடுகள் தான் வேண்டும். கால் உடைந்து சிகிச்சைக்காக ராய்ப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை செய்து கொண்டு பல மாதங்களாக நுண்ணுயிர்த்தொற்றால் அவதிப்பட்ட எனது நண்பர் ஒருவரை கேட்டால் அவர் காறித்துப்புவார். ஒவ்வொரு கடமையிலிருந்தும் கைகழுவி வரும் அரசு குறைந்த பட்சம் பயமில்லாத மருத்துவ சேவைகளையாவது வழங்க முன்வர வேண்டும். உலகமயமாக்களின் நிர்ப்பந்தம் என்று சொல்லி அந்தத் துறையையும் கை கழுவி வரும் அரசு தன் பொக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். LIC இருக்க தனியாரிடம் காப்பீடு செய்து விளம்பரம் செய்து கொள்ளும் அரசின் இலவச மருத்துவ காப்பீடும் ஒரு ஏமாற்று வேலையே. கைகழுவும் முயர்ச்சிகளில் ஒன்றே. மிகத்தரமான மருத்துவமனைகள் நம்மிடம் உள்ளன என சபைகளில் முழங்கும் அதிகாரிகளும் நமது சேவகர்களும் கொசு கடித்தால் கூட் தனியார் மருத்துவமனைகளை நாடுகிற போது மக்களுக்கு எப்படி அரசு மருத்துவ மனைகளிடம் நம்பிக்கை வரும். வேறு வழியற்ற கதியற்றவர்கள் தான் அரசு மருத்துவமனைக்கு போகிறார்கள். இந்தக் கட்டுரை நீளமாக போய்க்கொண்டு இருக்கிறது. வேறு வேலைகள் இருக்கின்றன. இது சம்பந்தமான எனது ஆய்வு அனுபவங்களையும் சேர்த்து இரண்டொரு வாரங்களில் விரிவான தெளிவான கட்டுரை எழுதுகிறேன். இதில் உள்ள படங்கள் பாக்டீரியா மற்றும் அவற்றை அழிக்கும் சில ஆன்ட்டிபயாட்டிக்குகள் சம்பந்தப் பட்டது. சூப்பர் பக்குகள் அல்ல. இவை என் ஆய்வின் படங்களே. நண்பர் விக்னேஷ் இதை எழுதி இருந்தால் நண்ராக இருந்திருக்கும். அவர் ஆங்கிலத்தில் செய்தி கொடுத்திருக்கிறார். அதனால் நான் எழுத வேண்டியதாகி விட்டது.
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010
தமிழகம் மராட்டிய மாநிலம் போலாகுமா?
கொஞ்ச நாட்களாக எதுவும் இங்கே எழுதவில்லை. கொஞ்சம் பணிச்சுமை கூடிவிட்டது. என்றாலும் எழுத நிறைய சங்கதிகள் கூடிவிட்டன.